பேய் பங்களா

          DISCOVEREY அறிவியல் தொலைகாட்சியில் அறிவுக்கு ஆப்பு
             வைக்கும் நிகழ்ச்சி

               HAUNTING -10:PM

  °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
            08-04-18- ஞாயிறு
             *********************
          கட்டுரை எண் 1135
                   -------------------
   ஆக்கம் J .YASEEN IMTHADHI
              ********************
  BISMILLAHIR RAHMANIR RAHEEM
           ★★★★★★★★★★★

தனிமையில் கட்டப்பட்டு  இருக்கும் பங்களாவுக்கு ஒரு தம்பதியினர் தங்களது குழந்தைகளோடு குடியேறுவார்கள்

வந்த ஓரிரு நாட்களில் அந்த பங்களாவில் அமானுஷ்யங்களும் ஆவிகளின் குரல் ஓசைகளும் பயமுறுத்தல்களும் காட்சிகளாக காட்டப்படும்

காட்சிகளின் இறுதியில்  கிருஸ்தவ மதத்தின் பாதிரிகள் பைபிள் வசனங்களை படிப்பார்கள்

உடனே அந்த பங்களாவில் இருக்கும் அனைத்து ஆவிகளும் பிசாசுகளும் அலறியடித்து  வெளியேறிவிடும் 

அன்று முதல் அந்த பங்களாவில் குடியிருப்போர் நிம்மதியாக வாழ துவங்குவதாக காட்டப்படும்

மேற் கூறிய இந்த கருத்தை மையமாக வைத்து தான் பல வேடங்களோடு காட்சிகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து இரவு பத்து மணியளவில் டிஸ்கவரி சானலின் தமிழ் ஒளிபரப்பில் அன்றாடம் காட்டப்படுகிறது

டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் அநேகமான நிகழ்ச்சிகள் உலகில் நடைபெறும் உண்மையான நிகழ்வுகளை எடுத்து காட்டப்படும் நிலையில் இருப்பதால்

தினமும் இரவு பத்து மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படும் HAUNTING நிகழ்ச்சியும் ஏதோ உண்மையான நிகழ்வை போன்றும் பேய் பிசாசு ஆவிகள்  இருப்பதாக உளவியல் ரீதியாக அறிவியல் பெயரில் தவறாக மக்கள் மனதில்               திணிக்கப்படுகிறது

அறிவியல் ரீதியாகவும் பகுத்தறிவு மூலமாகவும் பொய்பிக்கப்பட்ட மூடநம்பிக்கைகளை அறிவியல் சானல் மூலமாக உண்மை போன்று சித்தரிப்பது கண்டிக்கப்பட வேண்டிய.                                                                                                                                             விசயமாகும்

இதன் பின்னனியில் கிருஸ்தவ மதத்தின் பாதிரிமார்களின் சூழ்ச்சி இருப்பதை அதன் இறுதி காட்சிகளே தோலுரித்து காட்டி விடுகிறது

மதநம்பிக்கையை குறை கூறுவது நியாயம் இல்லை                     

அதே நேரம் மதப்பிரச்சாரத்தை அறிவியல் ரீதியாக போலியாக சித்தரிப்பது ஏமாற்று வேலையாகும்

பேய் படங்கள் யாவையும் கற்பனை படங்களாக மட்டுமே காட்டப்படுகிறது அதே நேரம் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிகளை அந்த தோரணையில் காட்டப்படுவது இல்லை என்பதால் தான் இந்த கண்டன கட்டுரை வெளியிடப்படுகிறது

கிருஸ்தவ மதத்தை பிரச்சாரம் செய்வதற்க்கு என்றே ஆயிரக்கணக்கான சேனல்கள் உள்ளது

அவைகளில் இது போன்ற நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினால் யாரும் அதை விமர்சிக்கப்போவது இல்லை

இல்லாத ஒன்றை இருப்பது போல் காட்டி மக்களை ஏமாற்றும் டிஸ்கவரி சேனல் தனது பெயரை கிருஸ்தவ கொள்கை சேனல் என்று மாற்றி கொள்ளட்டும்

           நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்