சுய பரிசோதனை

சுயபரிசோதனையே  சுவனத்தின்

                     திறவு கோள்

     °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
            06-04-18- வெள்ளி
             *********************
          கட்டுரை எண் 1134
                   -------------------
   ஆக்கம் J .YASEEN IMTHADHI
              ********************
  BISMILLAHIR RAHMANIR RAHEEM
           ★★★★★★★★★★★

நேர்வழி தெளிவாக தெரிந்த பின்பும் யார் தடம் மாறி செல்கிறார்களோ அவர்கள் எப்படியோ வழி கெட்டு போகட்டும் காரணம்

     அது இறைவனின் விதி

       நம்ம சாத்தானின் சதி

சரி நாம எப்ப சுயபரிசோதனை செய்து நல்ல அமல்களை அதிகபடுத்துறது தம்பி ?

இதை தினம் ஒரு முறையாவது நீ யோசித்தது உண்டா  ?

சும்மா இவர் நல்லவரா ?அவர் நல்லவரான்னு ?பட்டி மன்றம் விவாத மன்றம் நடத்தியே நாம நாசமா போய்ட்டு இருக்குறோம்னு கொஞ்சமும் கூட ஏன் நினைச்சு  பார்ப்பது இல்லை

எப்போது பிறரை வரம்பு மீறி  துதிப்பை விட்டும் இழிப்பதை விட்டும் நாம் நம்மை தற் காத்து கொள்கிறோமோ அப்போது தான் நாம உருப்படுவோம் என்பதை மறந்து விடாதே

நாம் ஒருவரை துதிப்பதால் அவர் சொர்க்கம் செல்லப்போவதும் இல்லை

நாம் ஒருவரை இழிப்பதால் அவர்  நரகம் செல்லப்போவதும் இல்லை

இந்த செயல் மூலம் நாம நரகத்திற்க்கு போகாம இருந்தாவே போதும் புரியுதா

குற்றங்களை கண்டறிந்து உரியவருக்கு தண்டனை கொடுப்பது  புலனாய்வு துறை வேலை

மறுமை இலட்சியங்களை கண்டறிந்து அதன் படி செயல் படுவது தான் தற்போது  நம்ம வேலை 

கிராமன் காதிபீன் ( ரகசிய பதிவாளர்கள் )வேலையை நீ பார்க்காதே

அதை பார்க்க அல்லாஹ்வே வானவர்களை நியமனம் செய்துள்ளான் 

இதை முதல்ல நீ புரிஞ்சுக்கோ

ஒவ்வொருவரும் இயக்கங்களின் நற்செயல்களுக்கு ஒத்துழைப்பு தந்தாலே போதுமானது

மாறாக இயக்கங்களின் சுய  சட்டங்களை தூக்கி சென்று கூட்டத்துக்கு ஆள் சேர்ப்பது  விளம்பரதாரர்களின் வேலை

وَالْوَزْنُ يَوْمَٮِٕذِ اۨلْحَـقُّ‌  فَمَنْ ثَقُلَتْ مَوَازِيْنُهٗ فَاُولٰۤٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ‏ 

அன்றைய தினம் (அவரவரின் நன்மை தீமைகளை) எடைபோடுவது உறுதி; அப்போது யாருடைய (நன்மையின்) எடை கனத்ததோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள்

            (அல்குர்ஆன் : 7:8)

وَالسّٰبِقُوْنَ الْاَوَّلُوْنَ مِنَ الْمُهٰجِرِيْنَ وَالْاَنْصَارِ وَالَّذِيْنَ اتَّبَعُوْهُمْ بِاِحْسَانٍ ۙ رَّضِىَ اللّٰهُ عَنْهُمْ وَرَضُوْا عَنْهُ وَاَعَدَّ لَهُمْ جَنّٰتٍ تَجْرِىْ تَحْتَهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۤ اَبَدًا‌  ذٰ لِكَ الْـفَوْزُ الْعَظِيْمُ‏ 

இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களும், அவர்களை(எல்லா) நற்கருமங்களிலும்  பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்; அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள்

அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான் அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள்

இதுவே மகத்தான வெற்றியாகும்

      (அல்குர்ஆன் : 9:100)

             நட்புடன் J .இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்