மக்தப்பாடசாலைகள் மாற்றம் தேவை

    ஜமாஅதுல் உலமாக்களுக்கும்

     முஸ்லிம் ஜமாத்துகளுக்கும்

      அன்பினிய  வேண்டுகோள்
           ***********************

       24-04-18- செவ்வாய் கிழமை
             *********************

            கட்டுரை எண் 1147
                   -------------------

   ஆக்கம் J .YASEEN IMTHADHI
              ********************   
                       بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
           ★★★★★★★★★★★

வழிகேடுகளை தேடி சென்று  மறைந்து செய்யும் காலம் மாறி வழிகேடுகளே நம்மை தேடி ஓடி  வந்து  வழிகெடுக்கும் காலம் இது

அதனால் தான் அரசியல் தலைவர்கள்  முதல் ஆன்மீக குருமார்கள் வரை கற்பழிப்பு மற்றும் பாலியல் விவகாரங்களில் அடிக்கடி  விமர்சிக்கப்பட்டு வருவதை பரவலாக பார்க்கிறோம்

ஓடும் இரயிலில் கற்பழிப்பு ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் கற்பழிப்பு என்பதை தாண்டி ஆன்மீகத்தை கற்று தரும்  கோயில் கருவறையில் கற்பழிப்பு என்ற நிலைக்கு வந்து விட்டது

இது போல் விவகாரங்களில் இது வரை இறைவனை தொழுதவதற்காக எழுப்பப்பட்டுள்ள பள்ளிவாசல்களின் பெயர்களோ அல்லது மதரசாக்களின் பெயர்களோ ஊடகங்களில்  விமர்சிக்கப்பட்டது இல்லை
காரணம் ஆன்மீகத்தை போதிக்கும் இடங்களை முஸ்லிம்கள் எப்போதும் புனிதமாகவே கருதி வருகின்றனர்

அதே நேரம் இது போன்ற விமர்சனங்களில் முஸ்லிம்களின் புனித இடங்கள் மற்றும் மதரசாக்கள் விசயத்தில் சற்று மாறுதல்களை முன்னேற்பாடுகளை  ஏற்படுத்துவது அவசியமாக உள்ளது

குறிப்பாக காலையும் மாலையும் முஸ்லிம் இளஞ்சிறார்களுக்கு குர்ஆனை கற்று தரும் மக்தப் மதரசாக்கள் பரவலாகவே செயல் பட்டு வருகிறது

இந்த மதரசாக்களில் சிறுவர்கள்  முதல் பன்னிரெண்டு வயது வரை உள்ள முஸ்லிம் மாணவ மாணவியர்கள் ஒன்றிணைந்து ( அதாவது ஒரே வகுப்பில்) படிக்கும் சூழலே பெரும்பாலும் உள்ளது

சிறுவர்களுக்கும் சரி சிறுமிகளுக்கும் சரி பள்ளிவாசல்களில் பணியாற்றும் உலமாக்களே அல்லது அரபு பாடசாலையில் ஆலிமுக்கு படிக்கும்  இளைஞர்களே ஆசிரியர்களாக அதிகமாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்

இந்நிலை தொடருமானால் இனி வருங்காலங்களில் சில நேரம் பிறர்களின் விமர்சனங்களுக்கு மதரசாக்களும்  உள்ளாக்கப்படலாம் அல்லது சாத்தானிய வலைகளில் ஆசிரியர்களோ அல்லது மதரசாக்களில் பயிலும் மாணவ மாணவியர்களோ சில வேளை  சிக்க வைக்கப்படலாம்

இதை கருத்தில் கொண்டு மக்தப்  மதரசாக்களை நடத்தும் முஸ்லிம் ஜமாத்துகள் அதிரடியாக சில மாற்றங்களை கொண்டு வர முயற்சி செய்ய  வேண்டும்

1- மாணவர்களுக்கு தனி பாடசாலை மாணவிகளுக்கு தனி பாடசாலை

2-குழந்தைகளாக இருந்தாலும் ஆண்களுக்கு ஆலீம்களையும்  பெண்களுக்கு ஆலீமாக்களையும்  தனியாகவே நியமனம் செய்ய  வேண்டும்

3-பொருளாதாரத்தில் பலவீனம் உள்ள ஜமாத்துகளாக இருந்தால் மாணவர்களுக்கு மட்டும் மதரசாக்களில் ஓதி தரும் ஏற்பாட்டை செய்து விட்டு  மாணவிகளுக்கு அந்தந்த ஊரில் ஓத தெரிந்த பெண்களிடமோ  அல்லது அந்த ஊரின்  ஆலீமாவையோ தொடர்பு கொண்டு அதற்க்கு நேரம் ஒதுக்கி தருமாறு ஜமாத் மூலம் வலியுருத்த வேண்டும்

4-குறிப்பாக இந்த மாறுதல்களை ஏற்படுத்த முன் வராதவர்கள் அவசியமாக ஓதி தரும் இடங்களில் CCTV கேமராக்களை அனைவருக்கும் தென்படும் விதமாக உடனடியாக மாட்டி விட வேண்டும்

5- குழந்தைகளாகவே இருந்தாலும் ஓதி தரும் போது  அவர்களை நெருக்கமாக வைப்பது கொஞ்சுவது போன்ற காரியங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்

காரணம் ஆசிரியர்களின்  எண்ணங்களில் சாத்தானிய தீண்டுதலை கட்டுப்படுத்தி இருந்தாலும் அதை பார்க்கும் பார்வையாளர்கள் தவறாக புரிய கூடும்

அல்லது ஆசிரியர்களின் மீது கொண்ட விருப்பு வெறுப்பின் காரணமாக பாலியல் தொடர்பாக இட்டு கட்டி அவதூறுகளை பரப்பி விட கூடும்

இவைகளை கருத்தில் கொண்டு ஜமாத்துல் உலமாக்களும் முஸ்லிம் ஜமாத்துகளும் முஸ்லிம் இயக்கங்களும் ஒன்றிணைந்து மக்களுக்கு மத்தியில் இதை பற்றி உண்டான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்

இக்கட்டுரையை அனைவரும் அறியும் வண்ணம் அதிகமாக சமூகவலைதலங்களில் பரப்பவும்

இயலுமானால் துண்டு பிரசுரம் மூலம் அச்சடித்து ஜும்மாக்களில் மக்களுக்கு பொதுவாக விநியோகம் செய்யலாம்

وَلِتَصْغٰٓى اِلَيْهِ اَفْـِٕدَةُ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ وَلِيَرْضَوْهُ وَلِيَقْتَرِفُوْا مَا هُمْ مُّقْتَرِفُوْنَ‏

(ஷைத்தான்களின் அலங்காரமான பேச்சை) மறுமையை நம்பாதவர்களின் உள்ளங்கள் செவிமடுப்பதற்காகவும் அதை திருப்தி கொள்வதற்காகவும் அவர்கள் செய்து வந்ததையே தொடர்ந்து செய்வதற்காகவும் (இவ்வாறு ஷைத்தான்கள் மயக்கினர்)

          (அல்குர்ஆன் : 6:113)

يٰبَنِىْۤ اٰدَمَ لَا يَفْتِنَـنَّكُمُ الشَّيْطٰنُ كَمَاۤ اَخْرَجَ اَبَوَيْكُمْ مِّنَ الْجَـنَّةِ يَنْزِعُ عَنْهُمَا لِبَاسَهُمَا لِيُرِيَهُمَا سَوْءاٰتِهِمَا  اِنَّهٗ يَرٰٮكُمْ هُوَ وَقَبِيْلُهٗ مِنْ حَيْثُ لَا تَرَوْنَهُمْ‌  اِنَّا جَعَلْنَا الشَّيٰطِيْنَ اَوْلِيَآءَ لِلَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ‏ 

ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவரையும், அவர்களுடைய மானத்தை அவர்கள் பார்க்குமாறு அவர்களுடைய ஆடையை அவர்களை விட்டும், களைந்து, சுவனபதியை விட்டு வெளியேற்றியது போல் அவன் உங்களை (ஏமாற்றிச்) சோதனைக்குள்ளாக்க வேண்டாம நிச்சயமாக அவனும், அவன் கூட்டத்தாரும் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்  நீங்கள் அவர்களைப் பார்க்க முடியாதவாறு   மெய்யாகவே நாம் ஷைத்தான்களை நம்பிக்கையில்லாதவரின் நண்பர்களாக்கி இருக்கிறோம்

           (அல்குர்ஆன் : 7:27)

     எதிர்பார்ப்புடன்  J .இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்