சீரழியும் பூசாரிகளும் சீரழிக்கப்படும் குழந்தைகளும்

  சட்டங்களை மதிக்காத பூசாரிகளும்

    சீரழிக்கப்படும் குழந்தைகளும்

           ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

        
     23-04-18- திங்கள்   கிழமை
             *********************

          கட்டுரை எண் 1146
                   -------------------
   ஆக்கம் J .YASEEN IMTHADHI
              ********************   
                       بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
           ★★★★★★★★★★★
     

ஆன்மீகத்தை கற்று தரும் போதகர்களாகவும் கடவுளுக்கு சேவை செய்யும் தியாகிகளாகவும் மக்களால் மதிக்கப்பட கூடியவர்கள் கோயிலில் அர்ச்சகர்களாக வேலை செய்யும்  பூசாரிகளாவர்

சமீபகாலமாக குழந்தைகளிடமும் சிறுமிகளிடமும் பெண்களிடமும் பாலியல் சேட்டைகளில் அதிகமாக ஈடுபடுபவர்களாகவே அன்றாடம் செய்திகளில் காண முடிகின்றது

அதன் உச்சகட்டமாக ராம் என்ற 65 வயது  கோவில் பூசாரி உட்பட எட்டு நபர்கள் கூட்டு சேர்ந்து ஆசிபா எனும் எட்டு வயது சிறுமியை ஒரு வாரமாக கொடூரமாக கற்பழித்து கோவில் கருவறையில்  படுகொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது

இதன் விளைவாக 12 வயது சிறுமிகளிடம் பாலியல் ரீதியாக தவறாக நடக்கும் குற்றவாளிகளுக்கு  மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்ற மசோதாவும் சமீபத்தில் பாரத பிதமர் நரேந்திர மோடி தலைமையில் அவசரமாக  கொண்டு வரப்பட்டுள்ளது

மரண தண்டனை சட்டம் அரியணை ஏற்றப்படுவதற்க்கு முன்பாகவே அதற்க்கு நாங்கள் கட்டுப்படவும்  மாட்டோம் பயப்படவும் மாட்டோம் என்கின்ற தோரணையில் சில பூசாரிகளின் பாலியல் நடவடிக்கைகள்  அமைந்துள்ளது

அவ்வகையில் சென்னை கண்ணகி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி கோயிலில் பூசாரியாக வேலை பார்க்கும் உதயகுமார் என்பவர் கோயில் அருகில் விளையாடி கொண்டிருந்த  சூளைமேட்டை சேர்ந்த மூன்றரை வயது சிறுமியிடம் பாலியல் சேட்டைகளை அரங்கேற்றி உள்ளார்

குழந்தை அழுவதை கண்ட குடும்பத்தார்கள் அந்த குழந்தையிடம் விசாரித்த போது கோயில் பூசாரி தன்னிடம் சில்மிஷம் செய்ததையும் இதே போல் பல சிறுமிகளிடம் அப்பகுதியில் அந்த பூசாரி ராம்குமார் செய்திருப்பதையும் விசாரணை மூலம் கண்டறிந்து உடனடியாக பூசாரி உதயகுமாரை அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் பொது மக்கள்  ஒப்படைத்து உள்ளனர்

இது போன்ற பூசாரிகளை எதிர்த்து இந்து சமுதாய மக்களும் இந்து இயக்கங்களும்  கடுமையாக கண்டனம் தெரிவித்து தக்க தண்டனை பெற்று தராவிட்டால் கோயிலின் புனிதத்தையும்  நன்மதிப்பையும்  பூசாரிகளே முற்றிலும்  கெடுத்து விடுவார்கள் என்பதை மறந்து விட கூடாது

குறிப்பாக இந்திய அளவில் அமைந்திருக்கும் சில கோயில் சிற்பங்களும் அதன் உருவங்களும்  ஆபாசத்தை தூண்டும் விதமாகவும் ஒழுக்க கேடுகளை கற்று தரும் விதமாகவும்  வடிவமைக்கப்பட்டு இருப்பது  தான் பூசாரிகளே இந்த தவறை பாவம் என்று உணராததின் காரணம் ஆகும்

ஆசாரியானாலும் சரி அல்லது  பூசாரியானாலும் சரி அல்லது  யாராக இருந்தாலும் சரி

ஒரு ஆண் எப்போதும் ஆண் என்ற நிலையில் இருந்து மாறவே  முடியாது மாறவும் மாட்டார்கள்  என்பதையும்

மேலும் ஆண்கள் குமரி பெண்களை மட்டும் அல்ல பிறர்களின் பெண்  குழந்தைகளை கூட அந்தரங்கத்தில் பெண்ணாக மட்டுமே பார்ப்பார்கள் என்பதையும் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நினைவூட்டி வருகிறது

இது தான் இயற்கை அமைப்பு இந்த விதியை தாண்டி ஆணாலும் பெண்ணாலும் ஒரு போதும் நடக்கவே இயலாது

சந்தர்பங்களும் அதற்க்கு ஏற்ற சூழல்களும் தனிமைகளும் அமைந்தால் ஆணும் பெண்ணும் நிச்சயம் வழிகேடுகளை மட்டுமே தேர்வு செய்வார்கள்

தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் சிறு வயது பெண் குழந்தைகளுக்கு அரைகுறை ஆடையை  அணிய வைத்து ஆபாசபான பாடல்களுக்கு  ஏற்று அவர்களை ஆட வைத்து பெற்றோர்கள் அதை கண்டு ரசிப்பது

பேஷன் எனும் பெயரில் சிறுமிகளுக்கும்  அரைகுறையான ஆடைகளை அணிய வைத்து ரசிப்பது
போன்றவைகளை முற்றிலும் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும்

தனது வயதுக்கு ஏற்ற முறையான  துணை இல்லாத ஆண்களும் வேசிகளிடம் செல்வதை அவமானமாக கருதும் ஆண்களும் அந்தரங்கத்தில் மேலை நாட்டு சீரழிவு  ஆபாசங்களுக்கு அடிமை பட்ட ஆண்களும் தான்

இது போல் குழந்தைகளிடமும் தங்கள் சில்மிஷத்தை வெளிப்படுத்துகிறார்கள்  என்ற உண்மைகளையும் புரிந்து கொள்ளுங்கள்

எதுவாக இருந்தாலும் தனிமையில் கடவுளுக்கு அஞ்சாதவன் அரசாங்கத்தின்  கடுமையான தண்டனைக்காவது ஓரளவு அஞ்சுவான் என்பதை நாட்டு மக்கள் புரிந்து குற்றவியல் சட்டங்களை கடுமையாக ஆக்க வேண்டும் என்று குரல் கொடுத்து அதை பொது இடத்தில் நிறைவேற்றவும்  குரல் கொடுக்க வேண்டும்

          நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்