வாழும் நாட்களில் தீனின் நாட்கள் எத்தனை

     வாழும் நாட்களில் உனது மார்க்க

                நாட்கள்  எத்தனை   ?

÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

      20-04-18- வெள்ளி  கிழமை
             *********************

          கட்டுரை எண் 1143
                   -------------------
   ஆக்கம் J .YASEEN IMTHADHI
              ********************   
                       بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
           ★★★★★★★★★★★

       
1-இஸ்லாத்தை அறிவதற்காக நேரம் ஒதுக்குவது  ஒரு புறம்

2-அறிந்தவற்றை நடைமுறை படுத்த செய்யும் முயற்சிகள் மறு புறம்

ஒன்றை அறிவதற்க்கு முன்னால் அதை முறையாக  நடைமுறை படுத்த முடியாது என்பதும்

அறிந்தவற்றை கொண்டு முறையாக நடை முறை படுத்தாது அந்த அறிதலை வைத்து மாத்திரம்  மறுமையில் சுவனம் பெற இயலாது என்பதும் அனைவரும் அறிந்து வைத்துள்ள உண்மையாகும்

இஸ்லாத்தை  அறிவதில் செலுத்தும்  ஆர்வத்தின்  கால் பகுதியை கூட அதை நடைமுறை படுத்துவதில் கவனம் செலுத்துவது இல்லை என்பது வாழ்வியல் சுயபரிசோதனை செய்யும் அனைவராலும் எளிமையாக  புரிய முடியும்

இஸ்லாமிய வாட்சப் குரூப்களில் அங்கம் வகிக்கும் நபர்கள் அந்த குரூப்களில் வரும் தகவல்களை மறு நிமிடமே  பிறர்களுக்கு  Share  செய்வதை மட்டும் நல்ல அமலாக சிறந்த அமலாக  கருதும் அவலம் இன்று  ஆண் பெண் அநேகரிடமும் கூடி போய் விட்டது

பதிவுகளை முழுமையாக படிக்காது போனாலும் அதில் திருகுர்ஆன் ஹதீஸ்களின் வரிகளை மேலோட்டமாக கண்டவுடன் அதை பதிவுகளின் சாரத்தில்  ஒப்பீடு செய்து பார்க்காமல் Share செய்யும் நிலையே அதிகரித்து விட்டது

மனிதனை வழிகெடுக்கும் சாத்தானும் கூட பல அறிவு நுணுக்கத்தை அறிந்தவன் என்பதே திருக்குர்ஆன் சொல்லும் விடையாகும்

ஆதலால் அவனது அறிதல் கல்வியை  கொண்டு சாத்தான் மறுமையில்  சுவனம் செல்ல இயலுமா ?

ஐம்பது வருட வாழ்நாளை பெற்ற ஒரு மனிதன் அவனது வாழ்நாளில் இருபத்தி ஐந்து வருடங்களை  இரவில் தூங்கியே கழிக்கின்றான்

அதாவது ஒரு நாளின்  24 மணிநேரத்தில் 12 மணி நேரத்தை தூக்கத்தில் மட்டுமே கழிக்கிறான்

அவ்வகையில் 50 வருடம் வாழ்நாளை பெற்ற மனிதன் 25 வருடம் மட்டுமே கண்  விழிப்பில் உள்ளான்

இந்த கண் விழிப்பில் அவனது குழந்தை மற்றும்  விளையாட்டு பருவத்தில் பத்து வருடத்தை கழித்து விட்டால் அவன்  சுயநினைவோடு வாழும் 25 வருடத்தில் 15 வருடங்கள் மட்டுமே ஐம்பது வருடத்தில்  மீதமாக உள்ளது

இந்த 15 வருடங்களில் ஒவ்வொரு மனிதனும் அவனது சுய  வாழ்கைக்கு ஒதுக்கும் நேரமே பல மடங்காக உள்ளது

அவ்வகையில் கடமையான ஒரு தொழுகைக்கு கால் மணி நேரம் ஒதுக்கினால் ஒரு நாளின் 24 மணி நேரத்தில்  கடமையான  வணக்கத்தை நிறைவேற்ற ஒதுக்கும் மொத்த நேரம் ஒரு மணிநேரமும் கால் மணி நிமிடங்களாகும்

அதாவது ஒன்றேகால் மணிநேரங்களாகும்

பதினைந்து வருடத்தின் மொத்த நாட்கள் 5475 நாட்களாகும்

இதில் தினம் ஒன்றேகால் மணி நேரம் கணக்கில் 5475 நாட்களுக்கு 6843.75 மணி நேரம் மட்டுமே ஒதுக்கப்படுகிறது

அதாவது நாள் கணக்கில் 285 நாட்கள் மட்டுமே

ஐம்பது வருடங்களில் அதாவது 18250 நாட்களில்  மொத்தம் 285 நாட்கள் மட்டுமே ஒரு முஸ்லிம் தனது கடமையான தொழுகையை நிறைவேற்ற நேரத்தை ஒதுக்குகிறான்

சுருக்கமாக சொன்னால் மறுமையில்  சுவன வாழ்வை பெறுவதற்க்கு ஈமான் நிறைந்த ஒரு முஸ்லிமே அவனுடைய ஐம்பது வருட வாழ்நாளில் வெறும்  285 நாட்களை மட்டுமே இறை வணக்கத்தை நிறைவேற்ற  ஒதுக்குகிறான்

அப்படியானால் வாரத்துக்கு ஒரு முறை தொழுகும் முஸ்லிம் அவனது வாழ்நாளில் எத்தனை மணி நேரத்தை இறைவனுக்காக ஒதுக்கி இருப்பான்  ? என்று சிந்தியுங்கள்

365×50=18250 வைத்துள்ள ஒரு மனிதன்  அந்த ரூபாயில்  இருந்து வெறும் 285 ரூபாயை மட்டும் செலவு செய்வது  எந்தளவுக்கு அர்ப்பத்திலும் மிக அர்ப்பமானதோ 

அதே போல் தான் ஐம்பது வருட வாழ்நாளை பெற்றுள்ள ஒரு உண்மையான முஸ்லிம் அல்லாவுக்காக ஒதுக்கும் நேரமும் இந்த ஒப்பீடின் படி  அர்ப்பத்திலும் மிகவும் அர்ப்பமானது

எனவே மார்க்க விவகாரங்களை அறிவதில் காட்டும் ஆர்வத்தை குறைத்து விட்டு இதுவரை  அறிந்துள்ள மார்க்க செய்திகளை  இயன்றவரை  செயல்படுத்துவோம் இன்ஷா அல்லாஹ்

فَاتَّقُوا اللّٰهَ مَا اسْتَطَعْتُمْ وَاسْمَعُوْا وَاَطِيْعُوْا

ஆகவே, உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்

(அவன் போதனைகளைச்) செவிதாழ்த்திக் கேளுங்கள் அவனுக்கு வழிபடுங்கள்

          (அல்குர்ஆன் : 64:16)

اۨلَّذِىْ خَلَقَ الْمَوْتَ وَالْحَيٰوةَ لِيَبْلُوَكُمْ اَيُّكُمْ اَحْسَنُ عَمَلًا   وَهُوَ الْعَزِيْزُ الْغَفُوْرُۙ‏ 

உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்

            (அல்குர்ஆன் : 67:2)



   நட்புடன்  J .யாஸீன் இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்