இயக்க அறிவுரை


       தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்

            நிலையும் பிரிவோரின்  

                        பிழையும்

       =======================

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

           ************************

மாற்று கொள்கை உடையோரும் கூட தங்களுக்குள் அடிக்கடி முன்னுதாரணம் காட்டி ரகசியமாக  பேசிக்கொள்ளும் அளவு சமூக சேவைகளும் உறுதியான நடவடிக்கைகளும் கொண்ட ஒரு இயக்கம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்

கட்சிகளாக இருந்தாலும் சரி சமுதாய இயக்கங்களாக இருந்தாலும் சரி அவைகள் பலம் பெற்று தனியான ஒரு வலிமையை பெறும் போது அந்த வலிமையை பலவீனப்படுத்தவும் அவர்களின்  ஒற்றுமையை சீர்குலைக்கவும்  இறைவனால் சபிக்கப்பட்ட சாத்தான் புதைகுழி தோண்டுவது என்பது வாடிக்கை தான் 

அவ்வாறு களம் இறங்கும் சாத்தான் ஒரு இயக்கத்தை அல்லது கூட்டமைப்பை சிதைப்பதற்க்கு  தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் ஆயுதம் மூன்று

1-அவர்களுக்கு இடையில் பதவி மோகத்தை தூண்டுவது

2-  நீயா நானா என்ற ஆணவத்தின் பாகுபாட்டை விதைப்பது

3- தனது கருத்துக்கு முக்கியதுவம் தருவது இல்லையே என்ற தாழ்வு மனப்பான்மையை வளர்த்துவது

இந்த உள்நோக்கங்கள் தான் பல விதங்களில் பரிணாமம் பெற்று  வெறுப்புணர்வுக்கு மூல ஆயுதமாக மாற்றப்படுகிறது

தற்போது தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாத் சந்தித்து கொண்டிருக்கும் சரிவுக்கும் குழப்பங்களுக்கும் மூல காரணமே இவைகள்  தான் என்பதை  சிந்தனையாளர்கள் புரிந்தே வைத்துள்ளனர்

அதனால் தான் மாற்று கொள்கை உடையோர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை கடந்த காலங்களில்  கடுமையாக விமர்சித்து இருப்பதை விட அந்த ஜமாத்தை சார்ந்து இருந்து பிறகு வெளியே வந்தவர்களால் தான் அதிகமாக  தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறது

இதில் நியாயம் அநியாயம் பேசியே காலத்தை கழிக்கும்  நபர்களும் நடுநிலையாளர்களும் ஒன்றை தெளிவாக  புரிந்து கொள்ள வேண்டும்

ஒரு இயக்கத்தில் இருந்து வெளியேறும் நபர் அல்லது வெளியேற்றப்படும் நபர் அந்த இயக்கத்தில் இத்தனை காலம் இணைந்து இருந்ததற்க்கு  அழைப்புபணி தான் முக்கியம் என்று வாதிட்டால்  அவர் அதில் இருந்து வெளியேறிய பின்னால்  அவரால் இயன்ற   பணியை மட்டும் சுயமாக தனியாக பார்க்க வேண்டுமே தவிர

அல்லது அது போன்ற பணிகளை செய்யும் இயக்கங்களோடு   இணைந்து பணியாற்ற வேண்டுமே தவிர

அவர் விலகிய அமைப்பில்  இருந்து அவருக்கு முன்னால் அதிருப்தியில்  விலகியவர்களையோ  அல்லது அதன் நிர்வாகத்தால் பைலா பிரகாரம்  விலக்கப்பட்டவர்களையோ  தேடி தேடி அலைந்து தனிக்கூட்டத்தை உருவாக்க முயற்சி செய்யக்கூடாது

அவ்வாறு வெளியேறிய ஒரு நபர் அல்லது வெளியேற்றப்பட்ட ஒரு நபர்  அதிருப்தியாளர்களை எல்லாம் ஒன்றிணைத்து தனி இயக்கம் காண முயற்சிக்கின்றார் என்றால் அவரும்   பதவி மோகத்தில் சுற்றுகிறார் என்பது தான்  பொருளாகும்

தற்போது முகநூலில் லைவ் நிகழ்ச்சியை பயன் படுத்தி ஆளுக்கு ஆள் தங்கள் அதிருப்தியை தெரிவிப்பதும் கண்டனங்களை பதிவு செய்வதும் வாடிக்கையாகி விட்டது
இது ஆரோக்யமான நடைமுறையும்  அல்ல

பொதுதலத்தில் இவைகளை பரிமாறுவதால் உங்களை சுற்றிய எதிரிகளுக்கும் கொள்கை விரோதிகளுக்கும் இது தங்கள் விரோதத்தை வாரி இறைக்க சந்தர்ப்பமாக அமையுமே தவிர உங்கள் விவகாரங்களுக்கு எவ்வித தீர்வும் இந்த முயற்சியால் கடுகளவும் கிடைக்கப்போவது  இல்லை

இயக்கங்கள் தேவை ஆனால் இயக்கத்தின் கீழ் இருந்தால் தான் நம்மால்  மார்க்க பணி செய்ய முடியும் என்று நினைப்பதே இவர்களின் இந்த  தவறான நடவடிக்கைக்கு அடிப்படையாகும்

இந்திய அளவில் உள்ள எந்த இஸ்லாமிய  இயக்கமும்  ஆட்சி  அதிகாரத்தை பெற்ற அமைப்பு அல்ல

மார்க்க பணியில் மும்முரம் காட்டி வந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பு  இது போன்றோருக்கு விளக்கம் அளிக்கிறோம் எனும் பெயரில் மணிக்கணக்கில் லைவ் நிகழ்ச்சி நடத்துவது என்பது அவசியமில்லாத வேலையாகும்

நேரடியாக மார்க்கத்திற்க்கு தொடர்பில்லாத நிர்வாக ரீதியான விசயங்களையும்  தனி நபர் அந்தரங்க தவறுகளையும் விளக்கம் அல்லது மறுப்பு எனும் பெயரில்  உலகமறிய செய்யும் விதத்தில் டெலிகாஸ் செய்வது  முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்

மறுமையில்  இறைவனின் நீதிமன்றத்தின் தீர்ப்புகளை உறுதியாக நம்பும் முஸ்லிம்கள்  முபாஹலா எனும் சாப அழைப்பு பிராத்தணை  போன்ற அறைகூவல்களை  விடுவது அல்லது அது போல் பிறர்களின் அழைப்புகளை ஏற்று கொள்வதை  தவிர்த்து கொள்ள  வேண்டும்

காரணம் முபாஹலா என்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒரு காரியமே தவிர  இஸ்லாத்தில் முபாஹலா என்பது தொழுகை போன்று  பர்ளான காரியமாகவோ அல்லது வலியுருத்தப்பட்ட சுன்னத்தான காரியமாகவோ அல்லது சிறப்பிற்க்குரிய காரியமாகவோ சொல்லப்படவில்லை என்பதை நினைவில் வைக்க வேண்டும் 

குறிப்பாக தனது ஜமாத்தில் இருந்து விலகியவர்களை அல்லது விலக்கப்பட்டவர்களை நடிகர்கள் என்றும் இயக்கத்தின் கழிவுகள் என்றும் குப்பைகள் என்றும் அவர்களின் பழைய தியாகத்தை மதிக்காது  வசைபாடும் போக்கை தவ்ஹீத் ஜமாத்  கை விட வேண்டும்

ஜமாத்தின் ஆதரவாளர்கள் எனும் பெயரில் இருந்து கொண்டு ஜமாத்தில் இருந்து விலக்கப்பட்டவர்களை அல்லது விலகியவர்களை  பொதுதலங்களில் அநாகரீகமாக விமர்சிப்போரையும் அவர்களை கீழ்த்தரமாக  இகழ்வதையும் யார் என்று கண்டறிந்து அவர்களையும்  கண்டித்து பழக வேண்டுமே தவிர அவர்களை கண்டும் காணாது போல் இருக்கும் சுயநல போக்கை மாற்ற வேண்டும்


இஸ்லாத்தில் ஒருவர் இணைந்து இருப்பதாலோ அல்லது பிரிந்து செல்வதாலோ இஸ்லாத்திற்க்கு எந்த இழப்பும் இல்லை என்று பேசும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள்

அவர்களின் இயக்கத்தில் இருந்து ஒருவர்  பிரிந்து சென்றாலோ அல்லது அதிருப்தி கருத்தை வெளியிட்டாலோ  அவர்களுக்கு விளக்கம் சொல்லி சமூகவலைதளத்தில் பதிவுகளை போட்டு மேலும் மேலும் பித்னாக்களுக்கு வழி வகுப்பது மார்க்க பணிகளை முடக்கி  இயக்க வளர்ச்சியை சீர்குலைக்க  மட்டுமே உதவும் என்பதை இதன் மூலம் இஸ்லாமிய உணர்வுடன் தெரிவித்து கொள்கிறோம்

                     இப்படிக்கு

       1- நபிவழி நண்பர்கள்
       2- நபிவழியே நம்வழி
       3- அறிவமுதமே இஸ்லாம்
       4- இனிக்கும் இஸ்லாம்
       5 - தவ்ஹீத் நண்பர்கள்

      இஸ்லாமிய வாட்சப் குரூப்
             அட்மின்கள் மற்றும்

        1- குமரிமாவட்டம்  சேக்
        2- குமரிமாவட்டம்  தாஹிர்
        3- குமரிமாவட்டம் நிஜாம்
        4- தூத்துக்குடி  சேக்
        5- திருச்சி அப்பாஸ்
        6-  ஜித்தா பாபுசேட்
        7- காரமடை  கனிமுஹம்மத்

இக்கருத்தில் உடன்பாடு உடையோர் கட்டுரையில் எவ்விதமான மாற்றமும் செய்யாமல் தங்கள் குரூப் பெயர்களை இந்த பதிவின் இறுதியில்  இணைத்து அல்லது தனிப்பட்ட பெயர் மற்றும் ஊர் அடையாளத்தோடு  சேர் செய்து கொள்ளலாம்

      +++++++++++++++++++++

وَاعْتَصِمُوْا بِحَبْلِ اللّٰهِ جَمِيْعًا وَّلَا تَفَرَّقُوْا‌ وَاذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَيْكُمْ اِذْ كُنْتُمْ اَعْدَآءً فَاَ لَّفَ بَيْنَ قُلُوْبِكُمْ فَاَصْبَحْتُمْ بِنِعْمَتِهٖۤ اِخْوَانًا  وَكُنْتُمْ عَلٰى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَاَنْقَذَكُمْ مِّنْهَا ‌ كَذٰلِكَ يُبَيِّنُ اللّٰهُ لَـكُمْ اٰيٰتِهٖ لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ‏ 

இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்

நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்

அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்

நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள்  உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து  அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்

இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள் அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான்

நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்

         (அல்குர்ஆன் : 3:103)

اِنَّ الَّذِيْنَ فَرَّقُوْا دِيْنَهُمْ وَكَانُوْا شِيَـعًا لَّسْتَ مِنْهُمْ فِىْ شَىْءٍ‌  اِنَّمَاۤ اَمْرُهُمْ اِلَى اللّٰهِ ثُمَّ يُنَـبِّـئُـهُمْ بِمَا كَانُوْا يَفْعَلُوْنَ‏ 
நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினர்களாகப் பிரிந்து விட்டனரோ அவர்களுடன் (நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை; அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது - அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான்

          (அல்குர்ஆன் : 6:159)

قَوْلٌ مَّعْرُوْفٌ وَّمَغْفِرَةٌ خَيْرٌ مِّنْ صَدَقَةٍ يَّتْبَعُهَاۤ اَذًى‌ وَاللّٰهُ غَنِىٌّ حَلِيْمٌ‏ 

கனிவான இனிய சொற்களும், மன்னித்தலும்; தர்மம் செய்தபின் தொடர்ந்து தொல்லை கொடுப்பதை விட மேலானவையாகும்தவிர அல்லாஹ் (எவரிடத்தும், எவ்விதத்) தேவையுமில்லாதவன்; மிக்க பொறுமையாளன்

          (அல்குர்ஆன் : 2:263)

عَنِ ابْنِ عُمَرَ ؓ اَنَّ النَّبِيَّ ﷺ كَانَ يَقُوْلُ: وَالَّذِيْ نَفْسِيْ بِيَدِهِ مَا تَوَادَّ اثْنَانِ فَيُفَرَّقُ بَيْنَهُمَا اِلاَّ بِذَنْبٍ يُحْدِثُهُ اَحَدُهُمَا

என் உயிர் எவன் வசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக!

ஒருவரை யொருவர் நேசித்து வந்த இரு முஸ்லிம்களுக்குள் பிளவு ஏற்படுவதற்கு, அவ்விருவரில் ஒருவரால் நிகழ்ந்த பாவத்தைவிட வேறு காரணம் இருக்க முடியாது என நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள்

என ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

      நூல் - முஸ்னத் அஹ்மத்

       *************************
 


Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்