மனித நேயமே இஸ்லாம்

        மதம் என்பது நம்பிக்கை

மனித நேயமே  இஸ்லாமியனின்

                    தும்பிக்கை
              
   ÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

      16-04-18- திங்கள்  கிழமை
             *********************
          கட்டுரை எண் 1140
                   -------------------
   ஆக்கம் J .YASEEN IMTHADHI
              ********************   
                       بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
           ★★★★★★★★★★★

புனிதமான கோவிலில் வைத்து ஆஷிபா எனும்  சிறுமியின் உடலில்  காமத்தை கொடூரமாக  சிந்திய எட்டு ஹிந்துத்துவ மதவெறியர்களை  கயவர்களை கண்டித்து  பேசினால்

கோயிலின் புனிதத்தை கெடுத்து பேசுவதாக திசை திருப்பும் காவிகளும்  மதவெறியர்களும்

அவர்கள் புனிதமாக மதிக்கும் கோயிலின் உட்புறத்தில் சிறுமி ஆஷிபாவின் மீது காமக்கழிவை கொட்டிய ராம் என்ற 65 வயதுடைய பூசாரி  கிழவனை கண்டிக்காது அவனது கழிசடை காரியத்தை  புனிதமாக்கி வருகின்றனர்

இதற்க்கு பெயர் தான் இந்து மத பக்தி என்றால் அந்த பக்தியாளன் இந்து மதத்திற்க்கு துரோகம் செய்கிறான்

அந்த கேடுகெட்ட  கிழவனுக்கு வக்காலத்து வாங்கி தினமும் இந்து மதத்திற்க்கு பாவம் செய்கின்றான்

கோயில்களும் சர்ச்சுகளும் பள்ளிவாசல்களும் மதம் சார்ந்த ஆன்மீகவாதிகளுக்கு  புனிதம் வாய்ந்தது என்பது அறிவுள்ள எவரும் ஏன் மதங்களை மறுக்கும் மனிதனும் கூட  மறுப்பது இல்லை

அதே நேரம் ஆன்மீகத்தை மூலதனமாக்கி  திசை திருப்பி அயோக்கியர்களை விடுவிக்க முயற்சித்தால் அதை கடுமையாக கண்டிப்பதில் முஸ்லிம்கள் சளைத்தவர்கள் அல்ல

ஆஷிபா எனும் சிறுமி கோயிலில் வைத்து கற்பழிக்கப்பட்டதை  போல் இந்து மதம் தழுவிய ஒருவரின் மகள்  கோகிலாவோ 
அல்லது கிருஸ்தவ மதம் தழுவிய ஒருவரின் மகள் வேதிகாவோ

பள்ளிவாசலில் வைத்து கற்பழிக்கப்பட்டால் அப்போதும் இதை விட கடுமையாக வலிமையாக எதிர்ப்போம்

எவ்வகையிலும் அது போன்ற கழிசடைகளுக்கு முட்டு கொடுத்து நியாயத்தை இஸ்லாத்தின் பெயரால் குழி தோண்டி புதைக்க மாட்டோம்

ஆனால் இது போன்ற ஒரு கேடு கெட்ட சம்பவம் பள்ளிவாசல்களில் இதுவரை நடந்ததும் இல்லை இனி நடக்கப்போவதும் இல்லை

காரணம் இஸ்லாத்தை பின்பற்றாத முஸ்லிம்களும் கூட பள்ளிவாசலின் புனிதத்தை எப்போதும் மதிப்பான்

கால்களின் முட்டிக்கு மேலே வேட்டியை மடித்து கட்டி ரோட்டில் ஒழுங்கீனமாக நடக்கும் முஸ்லிமும் கூட பள்ளிவாசல் நுழையும் போது அதே வேட்டியை கழட்டி விட்டு தூய்மையான வேட்டியை அணிந்து கால்  கரண்டை அளவு மறைத்தே பள்ளியில் நுழைவான்

துர்வாடை வீசும் மதுபானத்தை அருந்தும் முஸ்லிமும் கூட பள்ளிவாசலில் நுழையும் போது போதை தெளிந்த பிறகே அத்தர் மனம் கமழ பள்ளிவாசலில் நுழைவான்

கேடுகெட்ட வார்த்தைகளை வாயில் இருந்து கொட்டும் முஸ்லிமும் கூட பள்ளிவாசலில் நுழைந்தால் அந்த வாய்களுக்கு பூட்டு போட்டு கொண்டே நுழைவான்

காமக்கழிவுகளை அல்ல இயற்கை கழிவான சிறுநீரை கழித்தாலும் அதை பல முறை கழுவி தனது  உடலை தூய்மையாக்கிய பின்பே பள்ளிவாசலில் நுழைவான்

மதம் மார்க்கம் என்பது  ஒவ்வொரு சாராரின் தனிப்பட்ட   நம்பிக்கை ஆனால் அதை தாண்டிய  மனிதநேயமே மூலமாக கலந்திருப்பது தான்  இஸ்லாம் எனும் எங்கள் மார்க்க நம்பிக்கை

அந்த மனித நேயமே எங்கள்  உறுதியான  தும்பிக்கை

                    *************

6484. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
எவருடைய நாவு மற்றும் கையி(ன் தொல்லைகளி)லிருந்து பிறர்கள் பாதுகாப்பு பெறுகிறார்களோ அவர்களே  (உண்மையான) முஸ்லிம் ஆவர்

அல்லாஹ் தடுத்த( தீமையான பாவமான காரியங்களில் இருந்து)  விலகியவரே (உண்மையான) தியாகி  ஆவார்
என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

                   நூல்  புகாரி

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُوْنُوْا قَوَّا امِيْنَ لِلّٰهِ شُهَدَآءَ بِالْقِسْطِ‌ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَاٰنُ قَوْمٍ عَلٰٓى اَ لَّا تَعْدِلُوْا‌  اِعْدِلُوْا هُوَ اَقْرَبُ لِلتَّقْوٰى‌ وَاتَّقُوا اللّٰهَ‌  اِنَّ اللّٰهَ خَبِيْرٌ بِمَا تَعْمَلُوْنَ‏ 

முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக இறைவனுக்கு  நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள்

எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு(அவர்கள் விவகாரத்தில்  நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம்

நீதி செய்யுங்கள் இதுவே  பயபக்திக்கு மிக (இறை)நெருக்கமாகும் இறைவனுக்கு அஞ்சுங்கள்

நிச்சயமாக இறைவன்  நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்

           (அல்குர்ஆன் : 5:8)

           நட்புடன் J . இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்