சலனம்

         சலனமே கண்ணியத்தின்

          அபாயகரமான  மரணம்

  °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
        12-04-18-வியாழன் கிழமை
             *********************
          கட்டுரை எண் 1138
                   -------------------
   ஆக்கம் J .YASEEN IMTHADHI
              ********************   
                       بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
           ★★★★★★★★★★★

இனக்கவர்ச்சியால் ஏற்படும் சலனங்கள் தான் உயரிய இடத்தில் இருக்கும் ஒரு மனிதனை கூட கீழ் நிலையில் தரம் தாழ்த்தி விடுகிறது

வாயில் உமிழ் நீர் தொடர்ந்து சுரப்பதை போல் இளமை வேகம் இருக்கும் வரை ஆணுக்கும் பெண்ணுக்கும் சலனம் என்பது இனகவர்ச்சி என்பது  இயற்கையாகவே ஏற்படும் ஒரு  பலவீனமாகும்

தற்காலத்தில் அந்நிய தொடர்புகள் எளிமையாக்கப்பட்ட விஞ்ஞான வளர்ச்சியில் ஒவ்வொரு மனிதனும் இவ்விசயத்தில் தடம் புரளுவது சகஜமாகி வருகிறது

இதில் திட்டமிட்டு தவறுகளில் சிக்குபவர்களை சீரிய வழியின் பக்கம் இழுத்து வருவது சற்று சிரமமான காரியம் காரணம் அந்த தவறை அவன் அறிந்து கொண்டே நடைமுறை படுத்துகின்றான்

அதே நேரம் சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும் தனிமை வாய்ப்புகளாலும்  அகப்படும் நல்லோர்கள் தான் சலன விவகாரத்தில் அறிந்தும் அறியாமலும்  அதிகம் சிக்கி விடுகின்றனர்

அதனால் தான் மதிப்பும் மரியாதையும் பெற்று சமுதாயத்தில் வலம் வருபவர்களில் சிலர்களும் கூட இந்த சலனத்தால் சீரழிந்து அதனால்  மரியாதை இழந்து சமூக மக்களிடம் அவமானப்பட்டு வருவதை அடிக்கடி பரவலாக  காண முடிகின்றது

திருமணத்திற்க்கு முன்னால் இது போல் சலனத்தில் சிக்குபவர்கள் கூட ஒரு வகையில் அதில் இருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்பும் சூழல்களும் அமைந்து விடுகிறது

அதே நேரம் திருமணத்திற்க்கு பின்னால் இந்த சலனத்தில் சிக்கும் ஆண்களும் பெண்களும் ( தம்பதியர்கள்)  கடுமையான மன   உளைச்சல்களையும்  வாழ்வியல் துன்பங்களையும் அனுபவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர்

அதில் இருந்து அவர்கள் இறைவனிடம்  பாவமன்னிப்பு கோரினாலும் சமுதாயம் அவர்களை நிம்மதியாக இருக்க விடுவது இல்லை

சலனத்தால் உடல் ரீதியாக  எற்பட்ட தவறான உறவுக்கு பின்னால் தனது குறைந்த  வருமானத்தை காரணம் காட்டி இந்நிலையில் உன்னை நான் மறு திருமணம் செய்ய முடியாது என்று அதுவரை கள்ள தொடர்பில் இருந்த  பெண்ணை புறக்கணிக்கும் ஆண்கள் ஒரு விதம்

அந்நிய ஆணுடன் கள்ள தொடர்பில் சிக்கிய ரகசியங்கள் வெளிச்சத்திற்க்கு வரும் போது அந்த பெண்ணை ஏற்கனவே  திருமணம் செய்திருந்த கணவனின்  புறக்கணிப்பால் வாழ்கை இழந்து கையில் பெற்றெடுத்த  பிள்ளைகளுடன் சமுதாயத்தில் இருந்து அவமானப்படுத்தப்பட்டு எதிர் காலத்தை நாசமாக்கி கொண்ட குடும்ப  பெண்கள் (மனைவியர்கள்)
ஒரு விதம்

இவர்களின் சந்ததிகள் இவர்கள் செய்த தவறின் காரணத்தால் அவர்களின்  வருங்காலத்தில்  சமுதாயத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாத சூழலில் தனிமை பட்டு அவமானப்படும் சந்ததிகள் ஒரு புறம்

இது போன்ற மோசமான நிலைக்கு மூலமான காரணம் சலனம் எனும் இனக்கவர்ச்சியே

இந்த சலனத்தில்  நாம் சிக்காது இருக்க வேண்டுமானால் அதற்கான தனிமை சூழல்களையும்  தொடர்பு வழிகளையும்  முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்

குறிப்பாக வாட்சப் முகநூல் போன்ற சாதனங்கள் தான் இந்த கள்ள தொடர்புகளுக்கு ஆணி வேறாக அமைந்துள்ளது

மார்க்க ரீதியான போட்டிகளிலும் மேலும்  மார்க்க தொடர்பான  கேள்விகளையும்  சந்தேகங்களையும்   கேட்பதாக துவங்கும் பல அந்நிய தொடர்புகளே ஈமான் உள்ளவர்களையும்  சலனத்தில் சருக்க வைப்பதற்க்கு மூல காரணமாக உள்ளது

ஏற்கனவே அமைந்த இல்லறத்தை இயல்புக்கு மாற்றமாக சிந்திப்பதும் மற்றவர்களின் துணைகளை தனக்கு அமைந்த துணையை விட மேலாக கருதுவதும்  கணவன் மனைவி கடமைகளை உணர்ந்து அதற்க்கு ஏற்று தன்னை மாற்றி கொள்ளாமல் அதிருப்தியான நிலையில் ஊருக்கு மட்டும் கணவன் மனைவியாக  இருப்பதும் மனதை தடுமாற செய்யும் ஒழுக்க கேடுகளை பார்த்து ரசிப்பதற்க்கு தன்னை அடிமையாக்கி கொண்டதும் தான் இதற்க்கு காரணமாக உள்ளது

இந்த மனநோயை மாற்றுவதற்க்கு மருந்துகளோ மாத்திரைகளோ டானிக்குகளோ அல்லது இதை குணமாக்கும் மருத்துவர்களோ உலகில் எங்கும் இல்லை

காரணம் உடலியலுக்கு தான் மருத்துவம் உதவ முடியுமே தவிர உளவியல் விவகாரங்களுக்கு மருந்துகளை மனிதனால் தயாரிக்க முடியாது

இந்நிலையில் நமது தடுமாறும் மனதை உறுதி படுத்துவதும் தவறான பாதைகளை விட்டு தனது  சிந்தனைகளை  மாற்றுவதும் தனிமை சூழல்களை தவிர்ப்பதும் இறையச்ச உணர்வுகளை வளர்த்தி கொள்வதும்  தான் சரியான முறையான செலவுகளே இல்லாத மருத்துவமாகும்

ஆன்ட்ராய்ட் தொலைக்கருவி தான் உங்கள் வாழ்கையையே நாசமாக்கி வருகிறது என்று உங்கள் மனசாட்சியே  சொன்னால் அந்த ஆன்ட்ராய்ட் தொலைகருவியை  உங்கள் அளவுக்கு ஹராமாக்கி
அதை நாசமாக்கி உடைத்து  விடுங்கள்

மேலும் உங்கள் பார்வைக்கு திரை போடுங்கள் உங்கள் உள்ளத்திற்க்கு இறையச்சம் எனும் உறை போடுங்கள்

இது எல்லாவற்றிக்கும் மேல் இயற்கையாய் இறைவன் உங்களுக்கு வாழ்வில்  ஏற்படுத்தி கொடுத்த குடும்ப உறவில் கண் குளிர்ச்சியையும் அகமகிழ்வையும்  இறைவனிடம் அன்றாடம் பிராத்தணை செய்யுங்கள்

எந்த கணவனாலும் தனது மனைவியை திருப்தி படுத்த முடியும் எந்த மனைவியாலும் தனது கணவனை திருப்தி படுத்த முடியும்

காரணம் நிறங்களும் கனபரிமாணங்களும் தான் ஒவ்வொருவருக்கும் மாறுபாடே தவிர இல்லற இனிமைகள் அதற்கான வழிமுறைகள்   அனைவருக்கும் ஒன்று தான் என்பதே நூறு சதவிகிதம் உண்மை




وَالَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا‏ 

மேலும் அவர்கள்

எங்கள் இறைவா எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக என்று பிரார்த்தனை செய்வார்கள்

         (அல்குர்ஆன் : 25:74)

وَلَا تَقْرَبُوا الزِّنٰٓى اِنَّهٗ كَانَ فَاحِشَةً   وَسَآءَ سَبِيْلًا‏ 

நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்

நிச்சயமாக அது மானக்கேடானதாகும்

மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது

          (அல்குர்ஆன் : 17:32)

عَنْ اَبِيْ بَرْزَةَؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: اِنَّمَا اَخْشَي عَلَيْكُمْ شَهَوَاتِ الْغَيِّ فِيْ بُطُوْنِكُمْ وَفُرُوْجِكُمْ وَمُضِلاَّتِ الْهَوَي

உங்கள் வயிறுகள், மர்மஸ்தானங்கள் சம்பந்தப்பட்ட (ஹராமைச் சாப்பிடுதல், விபச்சாரம் போன்ற) மன இச்சைகளில் நீங்கள் மூழ்கிவிடுவதையும், (உங்களை சத்தியப் பாதையிலிருந்து வழி தவறி) வழிகேட்டின் பக்கம் இழுத்துச் செல்லும் மனஇச்சைகளில் நீங்கள் மூழ்கிவிடுவதையும் நான் பயப்படுகிறேன்'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூபர்ஸா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

              நூல்  முஸ்னத்

           நட்புடன் J . இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்