தாய்மார்கள் கடமை
தாய்மார்கள் அதிகாலை எழுவது
அல்லாஹ்வுக்காகவா
பிள்ளைகளுக்காகவா
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
11-04-18- புதன் கிழமை
*********************
கட்டுரை எண் 1137
-------------------
ஆக்கம் J .YASEEN IMTHADHI
********************
BISMILLAHIR RAHMANIR RAHEEM
★★★★★★★★★★★
அதிகாலை கணவன் உறக்கத்தில் இருந்து கண் விழிப்பதை விட மனைவியர்கள் விரைவாக எழுவதை மறுக்க முடியாது
அதே நேரம் கோடை கால விடுமுறை வந்து விட்டால் இஸ்லாமிய குடும்ப பெண்கள் தங்கள் கணவனை விட மிகவும் தாமதமாக எழுவதையும் காண முடிகின்றது
விடுமுறை இல்லாத போது அதிகாலை பஜ்ரு தொழுகையை நிறைவேற்றும் மனைவியர்கள் கோடைகால விடுமுறையின் போது பஜ்ரு தொழுகையை நிறைவேற்றுவதில்லை
அப்படியானால் அதுவரை குடும்ப பெண்கள் அதிகாலை எழுந்தது அல்லாஹ்வுக்கு முக்கியதுவம் கொடுத்த காரணத்திற்காகவா ?அல்லது பிள்ளைகளை நேரமாக ஸ்கூலுக்கு அனுப்ப வேண்டும் என்ற காரணத்திற்காகவா ?
நேரம் அமையும் போது வணங்குவதற்க்கு பெயர் அல்ல இறையச்சம் என்பது
மாறாக எல்லா சூழ்நிலையிலும் எல்லா நேரங்களிலும் கடமையான தொழுகையை நிறைவேற்றுவதற்க்கு பெயர் தான் இறையச்சம்
பிள்ளைகளை நேரமாக பள்ளி கூடங்களுக்கு அனுப்புவதற்காக எழும் போது தொழுகும் தொழுகைக்கு பெயர் இறையச்சம் அல்ல
மாறாக தங்களது பிள்ளைகளையும் அதிகாலை எழ வைத்து அவர்களையும் தங்களோடு இணைத்து கொண்டு பஜ்ரு என்ற கடமையான தொழுகையை நிறைவேற்றுவது தான் இறையச்சம்
உங்கள் பிள்ளைகளை நேரமாக பள்ளிகூடங்களுக்கு அனுப்பி வைத்தீர்களா என்று மறுமை விசாரணை இருக்கப்போவது இல்லை
மாறாக அதிகாலை பஜ்ரு தொழுகையை பற்றிய விசாரணை தான் மறுமையில் முதலிடம் என்பதை தாய்மார்கள் அவசியம் புரிய கடமைபட்டுள்ளனர்
ஒரு சந்ததி பிற்காலத்தில் மார்க்க உணர்வோடு நடப்பதற்க்கும் மார்க்கத்தை புறக்கணித்து நடப்பதற்க்கும் அவர்களை ஈன்றெடுத்த பெற்றோர்கள் குறிப்பாக தாய்மார்கள் தான் என்பதை நினைவில் வையுங்கள்
கணவன்மார்கள் அனைவரும் தொழுகையாளிகள் என்று நாம் வாதிக்கவில்லை
மாறாக பிள்ளைகளின் விசயத்தில் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய இடத்தில் இருப்பது தாய்மார்கள் என்பதை கருத்தில் வைத்து எழுதிய கட்டுரையே இது
عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: رَحِمَ اللهُ رَجُلاً قَامَ مِنَ اللَّيْلِ فَصَلَّي ثُمَّ أَيْقَظَ امْرَأَتَهُ فَصَلَّتْ فَإِنْ أَبَتْ نَضَحَ فِي وَجْهِهَا الْمَاءَ، وَرَحِمَ اللهُ امْرَأَةً قَامَتْ مِنَ اللَّيْلِ فَصَلَّتْ ثُمَّ أَيْقَظَتْ زَوْجَهَا فَصَلَّي فَإِنْ أَبَي نَضَحَتْ فِي وَجْهِهِ الْمَاءَ
ஒருவர் இரவில் எழுந்து தஹஜ்ஜத் தொழுதுவிட்டுத் தன் மனைவியையும் எழுப்புகிறார் அவளும் எழுந்து தொழுகிறாள் (தூக்கம் மிகைத்து) அவள் எழவில்லையென்றால், அவள் முகத்தில் லேசாகத் தண்ணீரைத் தெளித்து எழுப்பிவிடும் மனிதர் மீது அல்லாஹ் அருள் புரிவானாக!
அவ்வாறே, ஒரு பெண் இரவில் எழுந்து தஹஜ்ஜத் தொழுதுவிட்டுத் தன் கணவரை எழுப்பினாள் அவரும் எழுந்து தொழுதார் அவர் எழவில்லையென்றால் அவர் முகத்தில் லேசாகத் தண்ணீரைத் தெளித்து எழுப்பிவிடும் பெண்மணியின் மீதும் அல்லாஹ் அருள் புரிவானாக
என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நூல் நஸாயீ
عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: إِنَّ أَثْقَلَ صَلاَةٍ عَلَي الْمُنَافِقِينَ صَلاَةُ الْعِشَاءِ وَصَلاَةُ الْفَجْرِ
நயவஞ்சகர்களுக்கு தொழுகைகளில் மிகப் பாரமானது இஷா தொழுகையும், ஃபஜ்ருத் தொழுகையுமாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நூல் முஸ்லிம்
நட்புடன் J .இம்தாதி
Comments
Post a Comment