தடம் புரளும் தவ்ஹீத்
தடம் புரளும் தவ்ஹீத்வாதிகளும்
தேவையற்ற ஆய்வுகளும்
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
10-04-18- செவ்வாய்
*********************
கட்டுரை எண் 1136
-------------------
ஆக்கம் J .YASEEN IMTHADHI
********************
BISMILLAHIR RAHMANIR RAHEEM
★★★★★★★★★★★
இஸ்லாத்தில் இது கூடுமா ? அது கூடுமா ?அதற்க்கு என்ன தீர்வு ? இதற்க்கு என்ன தீர்வு ? என்று அடிக்கடி முழுமையான மார்க்க ஞானம் இல்லாத விசயத்தில் தலையிட்டு சர்ச்சை செய்து அமல் செய்ய வேண்டிய நேரத்தையும் காலத்தையும் வீணாக்கும் ஏகத்துவவாதிகளே இன்று அதிகரித்து விட்டனர்
இதுவரை படித்த ஹதீஸ்களையாவது நாம் நடை முறை படுத்துகிறோமா என்று கவலையோடு சுயபரிசோதனை செய்வதை விட நேரடியாக நாமே படிக்காத ஹதீஸ்களை அல்லது உலமாக்களுக்கு இடையில் கருத்து வேறுபாடுள்ள ஹதீஸ்களை ஞானமில்லாது பேசி பேசியே முஸ்லிம் சமுதாயத்தில் பிளவுகளை ஏற்படுத்தி இன்பம் காணும் ஏகத்துவவாதிகளே இன்று அதிகம்
ஹதீஸ் கலை வல்லுனர்களான ஏன் நாம் படிக்கும் ஹதீஸ்களையே பதிவாக்கி வைத்துள்ள புகாரி போன்ற இமாம்களை கூட மார்க்கத்திற்க்கு விரோதமான பல ஹதீஸ்களை முட்டாள்தனமாக பதிவாக்கி வைத்துள்ளனர் என்று பிறர்கள் கூறும் தகவல்களை தூக்கி கொண்டு சர்ச்சை செய்வதிலேயே நேரத்தை கடத்துகின்றனர்
ஹதீஸ் கலையில் ஞானம் இல்லாத நமது பகுத்தறிவுக்கே முரண்பாடாக தோன்றும் ஹதீஸ்களை கூட
புகாரி இமாம் போன்றோர்கள் தங்களது புத்தகங்களில் பதிவாக்கி வைத்துள்ளனர் என்றால் அதற்க்கு காரணம் என்ன ?
அல்லது நாம் தான் அவர்கள் சிரமபட்டு பதிவாக்கிய ஹதீஸ்களை தேவையற்று சர்ச்சை செய்கிறோமா ? என்று வேதனையோடு சுய பரிசோதனை செய்ய வேண்டிய தவ்ஹீத்வாதிகள்
ஹதீஸ் கலை வல்லுனர்களின் ஞானத்தை தியாகத்தை குறை பேசி திரிவது அறிவீனமாகும்
எதை முஸ்லிம்கள் அறிந்திருந்தும் அதை செயல் முறை படுத்த கவனம் தவறி வாழ்கிறார்களோ அது போன்ற பல நல்ல விசயங்களை மக்களுக்கு வலியுருத்தி பழகுங்கள்
அறிஞர்கள் மொழி பெயர்த்து எழுதி வைத்துள்ள நான்கு ஹதீஸ்களை அறிந்திருப்பதால் அல்லது அறிஞர்களின் பயான்களை அதிகம் கேட்பதால் தங்களுக்கும் ஹதீஸ்களை ஆய்வு செய்யும் திறமை வந்து விட்டதாக கற்பனையில் மமதை கொள்ளாதீர்கள்
இந்த மமதை நம்மையும் வழிகெடுத்து மக்களையும் தவறான சிந்தனைக்கு அழைத்து செல்லும்
ஹதீஸ்களை முற்றிலும் மறுக்கும் அஹ்ல குர்ஆன் எனும் வழிகேடர்கள் உருவானதும் கூட இது போன்ற காரணங்களால் தான்
தொழுகையை தக்க காரணம் இல்லாது தவற விட்ட மனிதன் காஃபிர் என்றும் கூட நபிமொழிகள் ஏராளம் உள்ளது
அதனால் அந்த ஹதீஸ்களை காரணம் காட்டி நம் சமுதாயத்தில் தொழாதவர்களை எல்லாம் காஃபிர் என்று முத்திரை குத்தி அழைக்க முற்பட்டால்
ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தில் 80÷சதவிகித மக்களை காஃபிர்கள் என்று தான் பத்வா கொடுக்க வேண்டும்
காரணம் தொழுகையை சரிவர நிறைவேற்றாத முஸ்லிம்கள் தான் தற்காலத்தில் குறிப்பாக தமிழகத்தில் மிகவும் அதிகம்
சுருக்கமாக சொன்னால் அவ்வாறு பிரச்சாரம் செய்யும் குடும்பத்தினர்களில் கூட குறைந்த பட்சம் மூன்று நபர்களையாவது காஃபிர்களாக ஒதுக்கி வைக்கும் அவல நிலை தான் ஏற்படும்
நாம் அறிந்த செய்திகளை மக்களுக்கு எத்தி வைப்பது தான் இஸ்லாம் கூறும் அழைப்பு பணியே தவிர
அதை நடைமுறை படுத்தாதவர்களை எல்லாம் அவர்களே தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லி கொண்டு இருக்கும் சூழலில்
நாம் அவர்களை காஃபிர்களாக்குவது மார்க்க வரம்பு மீறும் செயல்களாகும்
ஒருவரிடம் காஃபிர்களின் செயல்பாடு இருக்கின்றது என்று அக்கரையோடும் ஆதாரங்களோடும் சுட்டிகாட்டுதல் என்பது வேறு
அவரையே காஃபிராக்கி சமுதாயத்தில் இருந்தே அந்நியப்படுத்துவது என்பது வேறு
மறுமை நாளில் இறைவனின் நீதி மன்றத்தை நம்பும் நாம் அந்த நாளில் இறைவன் வழங்க இருக்கும் தீர்ப்புகளை நாமே இங்கு கூறி கொண்டு சர்ச்சை செய்து கொண்டு மறுமையில் இறைவனின் கோபத்திற்க்கும் சாபத்திற்க்கும் ஆளாக வேண்டாம்
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment