ஏப்ரல் பூல்

   முட்டாள்கள் உருவாக்கிய முட்டாள்

               தினம்  APRIL FOOL

     °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

            01-04-18- ஞாயிறு
             *********************
          கட்டுரை எண் 1133
                   -------------------

   ஆக்கம் J .YASEEN IMTHADHI
              ********************
  BISMILLAHIR RAHMANIR RAHEEM
           ★★★★★★★★★★★

காமாட்சி உன் புருஷன் வண்டியில அடிபட்டு  செத்து போயிட்டானாமே

அய்யோ என்னடி சொல்றே  ?

இல்லடி இன்னைக்கு ஏப்ரல் பூல் தானே அதான் சும்மா சொன்னேன்

                 ****************

மீனாட்சி உன் புருஷன் கோகிலாவே கூப்பிட்டு ஓடி போய்டானாமே

ஆத்தாடீ என்னடி சொல்றே கழுதை  !!!!!

இல்லடி இன்னைக்கு ஏப்ரல் பூல் தானே அதான் சும்மா தமாசுக்கு  சொன்னேன்

                        **********
அப்படியா சரி சரி  அது போகட்டும்

ஆமா உன் புருஷன் உன் தங்கச்சியை சைட்ல  வைச்சிருக்கிறதா இன்னைக்கு  பேப்பர்ல போட்டிருக்கானே நீ பார்க்கலையா 

என்னடி திடீர்னு பெரிய குண்டை தூக்கி போடுறே ?

அட மூதேவி !!! வருஷம் வருஷம் நீ எல்லாத்தையும் ஏப்ரல் பூல்லே முட்டாளாக்கீட்டு சுத்துறே

ஆனா உன் புருஷன் உன்னையே உண்மையில் முட்டாளாக்கி பல வருஷமா சுத்துறான் புரியுதா  ?

      =======================

பிறரை ஏமாற்றி மகிழ்வதற்க்கு என்று ஏப்ரல் முதல் தேதியை உலகம் முழுவதும்   நினைவு கூறப்படுகிறது என்றால் எந்தளவுக்கு மனிதனின் பகுத்தறிவு செயல் இழந்துள்ளது என்பதற்க்கு இதுவே சரியான  சான்றாகும்

ஒருவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி அதை கண்டு  நாம் அகமகிழ்வது என்பது மனிதாபிமானம்

ஒருவரை ஏமாற்றி அதன் மூலம் அவர் இழிவை சந்தித்து அல்லது கவலை கொள்வதை கண்டு  மகிழ்வடையுதல் என்பது  திருடர்களின் கொள்ளையர்களின் தீய குணாதிசயமாகும்

        *************************

கிரிகோரியன் காலண்டரை கி.பி. 1582 ஆண்டு முதல் நடை முறைப்படுத்தியவர் பிரெஞ்சின் ஒன்பதாம் சார்லஸ் மன்னன் என்பவன்

அன்றிலிருந்து தான் புத்தாண்டு என்பது  ஜனவரி ஒன்றாம் தேதி என்று மாற்றப்பட்டது

அதற்கு முன்புவரை மார்ச் 25 முதல் ஏப்ரல் ஒன்றாம் தேதி வரை எட்டு நாள்கள் புத்தாண்டு கடைபிடிக்கப்பட்டு வந்தது

உலகில் பலர்கள் இம்முறையை ஏற்று கொண்டாலும் கனிசமான நபர்கள் இவர்களின் புத்தாண்டை ஏற்றுக்கொள்ளவில்லை

இந்நிலையில் புதிய புத்தாண்டு முறைக்கு தங்களை மாற்றி கொண்ட மக்கள்  பழைய புத்தாண்டு முறையை பின்பற்றி வந்த மக்களை   கேலி செய்ய துவங்கினர்

அவ்வாறு கேலி செய்வதற்க்கும் கிண்டல் செய்வதற்க்கும்  ஏமாற்றி மகிழ்வதற்க்கும்  முட்டாள்களாக அவர்களை சித்தரிப்பதற்க்கும்  தேர்வு செய்த நாள்தான் ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி ஆகும்



படிக்கும் போதே முட்டாள்தனமாக தோன்றும் கிரிகோரியன் வருடப்பிறப்பை  ஏற்றவர்களின் செயல்கள் தான் முட்டாள்தனமாக உள்ளதே தவிர

இதில் மனிதனின்  பகுத்தறிவு  மூலம் சிந்திக்க வேண்டிய ஒரு படிப்பினையும் இல்லை

மக்களை முட்டாளாக்க  முட்டாள்கள் ஏற்படுத்திய முட்டாள் தினத்தை முட்டாள்களே முந்தி கொண்டு கொண்டாடுவார்கள்

عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اَلْمُؤْمِنُ غِرٌّ كَرِيْمٌ، وَالْفَاجِرُ خَبٌّ لَئِيْمٌ

(விசுவாசி) கள்ளம் கபடமற்றவராகவும், கண்ணியமானவராகவும் இருப்பார் ஆனால்  பாவியோ, (மக்களை ) ஏமாற்றுபவனாகவும், கீழ்த்தரமானவனாகவும் இருப்பான்'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

               நூல்  அபூதாவுத்

عَنْ اَبِيْ بَكْرِ نِ الصِّدِّيْقِ ؓعَنِ النّبِيِّ ﷺ قَالَ: لاَ يَدْخُلُ الْجَنَّةَ خَبٌّ وَلاَ بَخِيْلٌ وَلاَ مَنَّانٌ

ஏமாற்றுபவர், கருமித் தனம் உள்ளவர், உபகாரம் செய்த பின் சொல்லிக்காட்டுபவர் ஆகியோர் சுவனம் செல்லமாட்டார்கள்'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

                    நூல்  திர்மிதி

            நட்புடன் J .இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்