சுதந்திர வழிகேடு

  அறிவை மூடி மேனியை திறந்து

           !! சுற்றும் பாவைகள் !!

               அல்ல பாவிகள்

    
   <<<<<<•••••••••••••••••••••>>>>>>

            கட்டுரை எண் 1202
                    4-03-18
    ஆக்கம்  J .யாஸீன் இம்தாதி

            ^^________________^^
     Bismillahir Rahmanir Raheem
              ******************

பொது இடத்தில் ஆடைகளால் இழுத்தி மூடி பெண்கள் கண்ணியமாக  நடந்தால் கூட அவர்களையும் கற்பனையால் திறந்த மேனியாக பார்க்கும் மனோபாவம் பல ஆடவர்களிடம் உள்ளது

காரணம் ஆணிண் உடலியல் கூறும் தற்கால ஒழுக்கம் கெட்ட காட்சிகளும் அதை தூண்டும்  வழிகேடுகளும் இதற்க்கு மூல காரணமாக உள்ளது

அதே நேரம் பொது இடத்தில் கண்ணியமான ஆடைகளை அணிந்து செல்லும் பெண்களின் ஆடைகளை அவிழ்க்குமாறும் அல்லது கவர்ச்சி ஆடைகளை அணிந்து ஒழுங்கீனமாக நடக்குமாறும் எந்த ஆடவனும் போராடியது இல்லை

உடலியல் அமைப்பில் அதிகமான ஈர்ப்பு பகுதிகளை இயற்கையாக பெற்றுள்ள பெண்கள் தான் இவ்விசயத்தில் கவனம் செலுத்தி தற்காப்புடனும் நாகரீகத்துடன் பொது இடங்களில் நடந்து கொள்ள கற்று கொள்ள வேண்டும்

ஆண்கள் தங்கள் அறிவாற்றலை  ரசிப்பதை விட தங்கள் மேனியின்  அழகை ரசிப்பவர்கள் என்ற  பலவீனத்தை தங்களுக்கு  சாதகமாக்கி கொண்டு பொது இடங்களில் கூட மறைக்க வேண்டிய  வயிற்று பகுதிகளை  திறந்து போட்டு கொண்டு மேனியின் கனபரிமானங்கள் வெளியில் தெரியும் விதமாக இறுக்கமானஅல்லது இலை போன்ற  மெல்லிசான ஆடைகளை வேண்டுமென்றே அணிந்து செல்வது பெண்கள் தான் என்பதை குழந்தைகள் கூட புரிந்து வைத்துள்ள உண்மையாகும்

நடைபாதைகளில் கவர்ச்சி ஆடைகளை அணிந்து கொண்டு உடல் உறுப்புகளை வேண்டுமென்றே காட்டி கொண்டு சுற்றி திரியும் ஆடவர்களை காண முடியாது

அதே நேரம் ஆண்களை விட கூடுதலாக மறைக்க வேண்டிய உடல்  பகுதிகளை பெற்றுள்ள பெண்கள்  எவ்வித கூச்சமும் இல்லாது பேரூந்து நிலையங்கள் இரயில் நிலையங்கள் சந்தை கடைகள் சாப்பிங்மால்களில்  அலைந்து திரியும் பெண்களில் பலர்களை சர்வ சாதாரணமாக காண முடியும்

தவறு செய்யும் வாசல்களை வேண்டுமென்றே திறந்து வைத்து கொண்டு விளைவுகளில் சிக்கும் போது ஆண்கள் தப்பு செய்வார்கள் என்று அடிக்கடி புலம்புவது பெண்களின் கயமைத்தனம்

காசுக்காக மானத்தை திறந்து காட்டி திரைப்படங்களில் வேஷிகளாய் நடித்து விட்டு என்னை இவன் படுக்கைக்கு அழைத்தான் என்று அடிக்கடி நடிகைகள் அறிக்கை தருவது அயோக்கியத்தனம்

சுதந்திரம் எனும் பெயரில் அனைத்து வழிகேடுகளையும் திறந்து வைத்து நடந்து கொண்டிருந்த அமெரிக்கா மற்றும் மேலைநாட்டு பெண்களே முழுமையான ஆடையில் தான் தங்கள் கண்ணியம் உள்ளது என்று மாற்றங்களை கொண்டு வரும் சூழலில் அதே  குப்பை சிந்தனையை சுதந்திரம் என்று நினைத்து கொண்டு நிர்வாணிகளாக வலம் வரும் காமுக பெண்கள் தற்போது நம் நாட்டில் பெருகி விட்டனர்

எதுவானாலும் பாதிக்கப்படுவதும் புலம்புவதும் பெண்களுக்கு கை வந்த கலையாகிப்போனது

وَقُلْ لِّـلْمُؤْمِنٰتِ يَغْضُضْنَ مِنْ اَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوْجَهُنَّ وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ اِلَّا مَا ظَهَرَ مِنْهَا‌ وَلْيَـضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلٰى جُيُوْبِهِنَّ‌ وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ
(நபியே!) நம்பிக்கையுள்ள பெண்களுக்கும் நீங்கள்   கூறுங்கள் அவர்களும் தங்கள் பார்வையைக் கீழ் நோக்கியே வைத்துத் தங்கள் கற்பையும் பாதுகாத்துக் கொள்ளவும்

தங்கள் தேகத்தில் (பெரும்பாலும்) வெளியில் இருக்கக் கூடியவைகளைத் தவிர தங்கள் (ஆடை ஆபரணம் போன்ற) அலங்காரத்தை வெளிக்காட்டாது மறைத்துக் கொள்ளவும்

தங்கள் முந்தானைகளால் மார்பையும் மறைத்துக் கொள்ளவும்

        (அல்குர்ஆன் : 24:31)



            நட்புடன் J .இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்