சிலைகள்
சிலைகளும் பகுத்தறிவு
குறைகளும்
<<<<<<•••••••••••••••••••••>>>>>>
கட்டுரை எண் 1203
8-03-18
ஆக்கம் J .யாஸீன் இம்தாதி
^^________________^^
Bismillahir Rahmanir Raheem
******************
திரிபுராவில் பீஜேபி கட்சியை சார்ந்தவர்களால் லெனின் சிலை உடைப்பு
தமிழகத்தில் பெரியார் சிலை உடைப்பு
அம்பேத்கர் சிலை உடைப்பு
இதனால் ஏற்பட்டுள்ள காரசாரமான விவாதங்களும் குடும பிடி சண்டைகளும் இதுவரை நிறுவப்பட்டுள்ள சிலைகளால் மனித சமுதாயத்திற்க்கு கிடைத்துள்ள நன்மைகள்
சிலைகளின் கைகள் துண்டிக்கப்பட்டதால் அல்லது இத்துப்போன சிலைகள் இரண்டாக முறிந்ததால் இதுவரை ஏற்பட்டுள்ள ஜாதி சண்டைகள் கலவரங்கள் ஏராளம்
வீதிக்கு வீதி சுகாதாரத்தை பேணும் குப்பை தொட்டிகள் இல்லா விட்டாலும் தெருவுக்கு தெரு சிலைகளின் ஆதிக்கம் தான் நம் அரசியல் தலைவர்களின் சாதனைகள்
மக்களுக்கு தேவையான சிறிய அளவு திட்டங்களை தீட்ட பல முறை ஆலோசனை கூட்டம் நடத்தும் நமது அரசியவ்வாதிகள் செத்துப்போனவர்களுக்கு மக்களின் வரிப்பணத்தில் இருந்து கோடிகணக்கில் சிலைகளை நிறுவுவதற்க்கும் சமாதிகளை எழுப்புவதற்க்கும் மணிமண்டபங்களை கட்டுவதற்க்கும் அவைகளை புணர்நிர்மானம் செய்வதற்க்கும் வருடா வருடம் அவைகளுக்கு விழா எடுத்து கொண்டாடுவதற்க்கும் நீண்ட ஆலோசனைகளை செய்ததும் இல்லை மக்களின் வரிப்பணம் இது போன்ற வெட்டி செலவுகளுக்கு பயன்படுத்தப் படுகின்றது என்ற துளி அளவு கவலையும் பட்டது இல்லை
நம் நாட்டில் தான் உயிரோடு உள்ள
தலைவனுக்கும் சிலை
மரணித்து போன நபருக்கும் சிலை
அரசியல்வாதிக்கும் சிலை
ஆன்மீகவாதிக்கும் சிலை
கடவுளுக்கும் சிலை
கடவுளை மறுப்பவனுக்கும் சிலை
நடிகனுக்கும் சிலை
மிருகங்களுக்கும் சிலை
தலைவர்களின் சொல்லை கேட்டு நடப்பது தான் தலைவர்களுக்கு தரும் மரியாதையே தவிர தலைவர்களின் கற்சிலை மீது வருடா வருடம் மாலை போடுவது என்பது மரியாதை இல்லை
காரணம் எந்த கல்லும் எதையும் விளங்க போவது இல்லை
சிலைகளை நிறுவுவதும் பகுத்தறிவுக்கு எதிரானது பிறர்கள் மதிக்கும் சிலைகளை இழிவு படுத்துவதின் மூலம் அந்த சிலைக்குரியவரின் கொள்கையை முறியடித்து விட்டதாக கற்பனையில் நினைப்பதும் பகுத்தறிவுக்கு எதிரானது
பகுத்தறிவு இல்லாத ஆடு மாடுகள் கூட கற்களை நோக்கி வணங்குவது இல்லை
பகுத்தறிவு பெற்ற மனிதனோ தனது கைகளால் செதுக்கிய கற்களை ஆராதனை செய்கின்றான்
கல்லை கல்லாக பார்க்காதீர்கள் அதை கடவுளாக அல்லது தலைவர்களாக பாருங்கள் என்று கூறுவது தான் மடமை
கல்லை கல்லாக மட்டுமே பார்ப்பது தான் அறிவுடமை
يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْاَنْصَابُ وَالْاَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطٰنِ فَاجْتَنِبُوْهُ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ
ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும் அம்புகள் எறிந்து குறி கேட்பதும் ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்
ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்
(அல்குர்ஆன் : 5:90)
நட்புடன் J .இம்தாதி
Comments
Post a Comment