நட்பின் எதிர்பார்பு

    உன் நண்பனே என் அன்பன்

       
   <<<<<<•••••••••••••••••••••>>>>>>
            கட்டுரை எண் 1201
                    4-03-18
    ஆக்கம்  J .யாஸீன் இம்தாதி

            ^^________________^^

     Bismillahir Rahmanir Raheem
              ******************

என்னை காணும் போதெல்லாம் போலியாக புன்னகை வீசும் என் நண்பனை விட

நேரடியாக உன்னிடம்  காணும் தவறுகளை முறையோடும் கண்டிப்போடும்  அக்கரையோடும்  சுட்டிக்காட்டும் உன் நண்பனே எனக்கு அன்பானவன்

ஆடை அலங்காரத்தை என்னில் சீர் செய்யும் என் நண்பனை விட
உன் உள்ளத்தின் அலங்காரத்தின் மீது அக்கரை காட்டும் உன் நண்பனே எனக்கு அன்பானவன்

மது மாதுவை ரசித்து பேசியே என் நேரத்தை நாசமாக்கும் என் நண்பனை விட

தீய பழக்கங்களை கண்டித்து பேசுவதையே ருசித்து பேசும் உன் நண்பனே எனக்கு அன்பானவன்

நட்பை காரணம் காட்டி அவன் செய்யும் தப்புக்கு என்னையும் தாளம் போட வைக்கும் என் நண்பனை விட
தப்புக்கு ஒப்பு ஊதாமல் அதை உப்புக்கு கூட ஒத்துக்கொள்ளாது ஒதுங்கி செல்லும் உன் நண்பனே எனக்கு அன்பானவன்

காகிதங்களில் காதல் கதைகளை தீட்டி என் மனதையும் இன கவர்ச்சிக்கு உள்ளாக்கும் என் நண்பனை விட

அதே காகிதத்தில் போதனைகளை மெருகூட்டி எழுதி தந்து அன்றாடம் அதை  பயில கற்பிக்கும்  உன் நண்பனே எனக்கு அன்பானவன்

நட்புக்கு எல்லை தாண்டி என் குடும்ப பெண்களின் கற்பை கூட அந்தரங்கத்தில் ரசிக்கும் என் நண்பனை விட

நட்புக்கும் கற்புண்டு என்று கூறி அதே நட்புக்கு வட்டத்தை மீறாது எல்லை தாண்டாது கண்ணியம் காக்கும் உன் நண்பனே எனக்கு அன்பானவன்

ஒருவனிடம் நட்பு ஏற்படுத்தும் முன் அவனது நண்பனின் செய்கைகளை உரசி பார்ப்பதே நாம் நட்பு கொள்ள முயற்சிக்கும் நபரின் தன்மையை நமக்கு புரிய வைத்து விடும்

சுருக்கமாக சொன்னால் எனது நண்பன் என் பாசத்திற்க்கு உரிய வேடதாரியாக இருப்பதை விட

அவன்  நல்ல பண்பனாக சிறந்த அன்பனாக  இருப்பதையே என் நட்பில் நான் எதிர் பார்க்கிறேன்

عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ ؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: اِنّ اَبَرَّ الْبِرِّ صِلَةُ الْوَلَدِ اَهْلَ وُدِّ اَبِيْهِ

நன்மைகளில் சிறந்த நன்மை, (தந்தையின் மரணத்துக்குப்பின்) தந்தையுடன் நட்பு கொண்டவர்களுடன் மகன் அழகிய முறையில் நடந்து கொள்வது'' என நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

               நூல்  - முஸ்லிம்

عَنْ مُعَاذٍؓ اَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: يَكُوْنُ فِيْ آخِرِ الزَّمَانِ اَقْوَامٌ اِخْوَانُ الْعَلاَنِيَةِ اَعْدَاءُ السَّرِيْرَةِ، فَقِيْلَ: يَا رَسُوْلَ اللهِﷺ فَكَيْفَ يَكُوْنُ ذلِكَ؟ قَالَ: ذلِكَ بِرَغْبَةِ بَعْضِهِمْ اِلي بَعْضٍ وَرَهْبَةِ بَعْضِهِمْ اِلي بَعْضٍ

இறுதிக் காலத்தில் சிலர் வெளித்தோற்றத்தில் நண்பர்களாகவும், அந்தரங்கத்தில் விரோதிகளாகவும் இருப்பார்கள் என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதற்கு

யாரஸூலல்லாஹ், இது எதன் காரணமாக ஏற்படும்?

எனக் கேட்கப்பட்டது

தன்னுடைய சுய நலத்துக்காக வெளிரங்கத்தில் ஒருவர் மற்றவருடன் நட்புக்கொள்வார் அந்தரங்க விரோதத்தினால் அவ்விருவரும் ஒருவர் மற்றவரைப் பார்த்து பயப்படுவார்'' என நபி (ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள் என்று ஹஜ்ரத் முஆத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

     நூல்  - முஸ்லிம் - அஹ்மத்

اِنَّمَا وَلِيُّكُمُ اللّٰهُ وَرَسُوْلُهٗ وَالَّذِيْنَ اٰمَنُوا الَّذِيْنَ يُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَيُؤْتُوْنَ الزَّكٰوةَ وَهُمْ رَاكِعُوْنَ‏

நிச்சயமாக உங்களுக்கு உற்ற நண்பர்கள்: அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்; எவர் ஈமான் கொண்டு, தொழுகையை கடைபிடித்து ஜகாத்தும் கொடுத்து, (அல்லாஹ்வின் கட்டளைக்கு எந்நேரமும்) தலைசாய்த்தும் வருகிறார்களோ அவர்கள்தாம்

        (அல்குர்ஆன் : 5:55)

         நட்புடன்  J.இம்தாதி


Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்