அரசியல்வாதிகளின் மடமை
வறுமை கூப்பாடு போடும்
அரசியல்வாதிகள்
=========================
17-03-18 சனிக்கிழமை
--------------------
ஜே.யாஸீன் இம்தாதி
******************
நாட்டு மக்களின் நலனுக்கு வரிப்பணங்கள் செலவு செய்யப்பட்டு அதன் மூலம் நாட்டின் வரிப்பணத்தில் பற்றாகுறை ஏற்பட்டாலோ அல்லது கடன் தொகை அதிகரித்தாலோ அதை எவரும் குறை கூற இயலாது
நம் தமிழகத்தை பொறுத்தவரை குடிமக்களில் எவரும் அடிப்படை தேவைகளை கூட இது வரை அரசாங்கத்தால் நிறைவாக பெறவில்லை
அதே நேரம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொருளுக்கும் செலுத்த வேண்டிய வரிப்பணங்களை மட்டும் நாட்டு மக்கள் சரியாக நிறைவேற்றியே வருகின்றனர்
நடப்பாண்டில் 1,43.962 கோடிகளை கடன் வாங்க தமிழக அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்று சொன்னால்
இந்த அவல நிலையை வெளிப்படுத்தவா தமிழக அரசாங்கம் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது
அல்லது இந்த அவல நிலையை வெளிப்படுத்தி மக்களின் வரிப்பணத்தை மேலும் கூட்டி மக்களின் உழைப்பை சொரண்டி நாசமாக்கவா தமிழக அரசாங்கம் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது
இத்தகைய இக்கட்டான சூழலிலும் கூட ஐம்பது கோடிக்கு மேல் இறந்து போன முன்னால் முதல்வரின் சமாதியை மெருகூட்ட நிதி ஒதுக்கீடு செய்கிறார்களே தவிர
அந்த சமாதியை கோடிகளை கொட்டி மெருகூட்டுவதால் குடிமக்களில் எவருக்கு என்ன பலன் என்பதை கூட சிந்திப்பதற்க்கு முன் வருவது இல்லை
தலைவர்களின் மீது பாசமும் நேசமும் இருந்தால் அதை அவரவர் கட்சிகளின் சார்பாக அல்லது அவர்களின் சொந்த பணத்தில் கட்டி எழுப்ப முயற்சிக்க வேண்டுமே தவிர அவர்கள் போலி நாடகத்தை அரங்கேற்ற மக்களின் வரிப்பணத்தை நாசமாக்குவது அயோக்கியதனமாகும்
நாட்டு மக்களின் வேதனைகளை புரியாமல் தமிழக அரசாங்கத்தின் சாதனைகள் எனும் பெயரில் அடிக்கடி மக்கள் வரிப்பணத்தில் விழாக்களை எடுப்பதை குடிமக்கள் காரி துப்ப வேண்டும்
ஓட்டுக்காக அறிவிக்கும் இலவசங்களை அறிவித்து விட்டு ஆட்சிக்கு வந்த அந்த இலவசங்களை தருவதற்க்கு மக்களின் அத்தியாவசிய தேவைகளின் கட்டணங்களை கூட்டி மக்கள் தலையில் மிளகாய் அரைக்கும் அரசியல் அயோக்கியர்களை எட்டி மிதித்து புறம் தள்ள வேண்டும்
பணவீக்கத்தை பெருக்கும் வட்டியின் வாசல்களை திறந்து வைத்து விட்டு இது போல் வறுமை ஒப்பாரி வைத்து அடிக்கடி நாடகமாடும் அரசியல்வாதிகளை குப்பையில் தூக்கி வீச வேண்டும்
அரசாங்கத்தின் சார்பாக வேலை செய்யும் சாதாரண ஊழியர்களுக்கு எந்த அளவு சம்பள தொகை கொடுக்கப்படுகிறதோ அதே அளவு அரசாங்க பதவிகளை வகிக்கும் அரசியல்வாதிகளின் சம்பளங்கள் அதிரடியாக குறைக்க பலமாக குடிமக்கள் குரல் எழுப்ப வேண்டும்
நாட்டின் வளத்தை கூட்டவும் பொருளாதார மேம்பாடு திட்டங்களை தீட்டி அதை நடைமுறையில் செயல் முறை படுத்தவும் தான் குடிமக்கள் ஓட்டு போட்டு அரசியல்வாதிகளை தேர்வு செய்கிறார்களே தவிர
நாட்டு மக்களை பிச்சைக்காரர்களாக மாற்றுவதற்க்காகவும் அவர்களின் பகுத்தறிவற்ற வறுமை ஒப்பாரிகளை கேட்டு கண்ணீர் வடிப்பதற்காகவும் எவருக்கும் குடிமக்கள் ஓட்டு போடுவது இல்லை
மிக விரைவில் தற்போதைய ஆட்சியாளர்களை விரட்டி அடிக்க மக்களின் மனம் கொதித்து கொண்டுள்ளது என்பதை நிச்சயம் ஆட்சியாளர்கள் உணருவார்கள்
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment