ஸ்டீபன் மரணமும் நாத்தீக மரணமும்
ஸ்டீபன் ஹாகிங் மரணமும்
நாத்தீகத்தின் மரணமும்
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
கட்டுரை எண் 1126
-------------------
ஆக்கம். ஜே.யாஸீன் இம்தாதி
*************************
Bismillahir Rahmanir Raheem
*********************
எந்த ஒரு மனிதனின் மரணமும் அந்த குடும்பத்தை சார்ந்தவருக்கும் அந்த சமூகத்தை சார்ந்தவருக்கும் இழப்பாக அமையும்
ஆனால் உலகில் அரிதான சிலர்களின் மரணம் மட்டுமே ஒட்டு மொத்த மனித சமுதாயத்திற்க்கும் இழப்பாக அமையும்
அதில் ஒருவர் தான் 15-03-18 அன்று மரணமான ஸ்டீபன் ஹாகிங் என்ற இயற்பியல் ஆய்வாளர்
இளம் வயதில் கை கால்கள் செயல்படாத சூழலிலும் அவருடைய அறிவியல் சார்ந்த சிந்தனையின் மூலம் உலகம் உணர்ந்து கொண்டதே பிக் பேங்க் (பெரு வெடிப்பு கொள்கை தியரி ) எனும் அறிவியல் உண்மை
அதாவது ஒட்டு மொத்த பிரபஞ்சமும் அண்ட சராசரங்களும் நம் கண்ணுக்கு தென்படாத துகள் அளவு தான் பல இலட்ச கோடி ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தது
அது வெடித்த பின் அதில் இருந்து பல பாகங்களில் சிதறியதே இந்த அண்ட சராசரம்
அந்த வெடிப்பின் தாக்கம் இன்னும் விரிவடைந்து கொண்டு செல்வதால் மல்டி யுனிவெர்ஸ் ( பல பிரபஞ்சம் வான்மண்டலத்தில் ) இந்த நிமிடம் வரை உருவாகி கொண்டே உள்ளது என்பதே பிக்பேன்ங் தியரி எனும் கொள்கை
=======================
இந்த அதிசயமான கண்டுபிடிப்பை கண்டு இறைவனை மறுத்து நாத்தீகனாக மாறிய கூட்டம் ஏதோ தங்கள் முட்டாள்தனமான வாதத்திற்க்கு மனிதனின் இது போன்ற அரிய பல கண்டு பிடிப்புகளை காரணமாக்கி மமதை கொண்டனர்
ஏற்கனவே இருக்கும் ஒன்றை அல்லது மறைந்திருக்கும் ஒன்றை அறிவின் மூலமும் அறிவியல் துணையின் மூலமும் தேடி அறிந்து கொள்வதை தான் கண்டு பிடிப்பு என்று சொல்கின்றோம்
கண்டு பிடித்தல் என்பது வேறு இல்லாத ஒரு பொருளை ஒரு துணை சாதனமும் இல்லாமல் உருவாக்குதல் அல்லது ! படைத்தல் ! என்பது வேறு என்ற இந்த வேறுபாட்டை நாத்தீகர்கள் சரியாக புரியவில்லை
இதில் இருந்து அது வந்தது அதில் இருந்து இது வந்தது என்று முடிவே இல்லாது பேசுவதை பகுத்தறிவாக கருதும் நாத்தீகர்கள்
எந்த பிக்பேன்ங் தியரி மூலம் அனைத்தும் உருவானது என்று ஸ்டீபன் ஹாகிங் கூறினாரோ
அந்த பிக்பேன்ங் எனும் பெருவெடிப்பு உருவானதற்க்கு எந்த துகள் மூல காரணமாக இருந்ததோ அந்த துகள் தானாகவே எப்படி வந்தது ?
யாருடைய ஆற்றலால் வந்தது ?
யாருடைய கட்டளையால் வெடித்தது?
யாருடைய கட்டளையால் அந்த துகள்கள் பிரமாண்டமான கோள்களாக மாறியது?
யாருடைய கட்டளையால் சீராக இந்த நிமிடம் வரை அவைகள் செயல்பட்டு கொண்டுள்ளது ?
யாருடைய கட்டளையால் அந்த துகள்கள் ஜீவன்களாக மாறியது?
யாருடைய கட்டளையால் உயிர் உள்ள பொருளாக உயிர் இல்லாத பொருளாக மாறியது ?
என்பதை எல்லாம் நாத்தீகர்கள் சிந்திக்க தவறி விட்டனர்
அதாவது எதை நுணுக்கமாக சிந்தித்தால் யாவற்றையும் இயக்கி கொண்டுள்ள இறைவனின் ஆற்றலை தெளிவாக புரிந்து கொள்ள முடியுமோ அந்த பகுத்தறிவுக்கு இவர்களே ஆணவம் என்ற பூட்டை போட்டுக்கொண்டனர்
வெடிக்கும் எந்த ஒரு பொருளும் அதன் வலிமை குறைய குறைய செயல் இழந்து விடும் என்பது தான் பகுத்தறிவு
ஆனால் ஸ்டீபன் ஹாகிங் பெரு வெடிப்பு கொள்கை மூலம் பல இலட்ச கோடி ஆண்டுகளுக்கு முன்னால் வெடித்து சிதறிய அந்த துகள்கள்
இந்த நிமிடம் வரை வெடிக்கும் போது ஏற்பட்ட வீரியத்தை விட கூடுதலான வீரியத்தோடு சிதறி கொண்டே இருக்கிறது என்று சொன்னால் அதை இயற்கை என்று நம்புவது தான் பகுத்தறிவா ?
இனி வரும் நூறாண்டுகளுக்கு பின் பிறக்கும் சந்ததிகள் ஸ்டீபன்ஹாகிங் எனும் ஒருவரை இப்போது எங்கள் கண்களுக்கு முன் உயிரோடு கொண்டு வந்து காட்டினால் தான் அப்படி ஒருவர் வாழ்ந்தார் என்று நாங்கள் நம்புவோம் என்று சொல்வது எந்தளவுக்கு அறிவீனமான வாதமோ அதே போல் வாதமே
பிரபஞ்சத்தை படைத்த இறைவனை எங்கள் கண் முன்னால் வந்து காட்டுங்கள் அப்போது தான் நாங்கள் இறைவனை நம்புவோம் என்று கூறும் நாத்தீக சித்தாந்தமும் குருட்டு வாதமே
எது இருந்தாலும் அந்த ஒன்று தானாக உருவாகாது என்பதும் அதை உருவாக்கிய ஒருவன் நிச்சயம் இருப்பான் என்று நம்புவதும் தான் பகுத்தறிவு
=======================
பிக் பேன்ங் தியரி பற்றி குர்ஆன்
اَوَلَمْ يَرَ الَّذِيْنَ كَفَرُوْۤا اَنَّ السَّمٰوٰتِ وَالْاَرْضَ كَانَـتَا رَتْقًا فَفَتَقْنٰهُمَا وَجَعَلْنَا مِنَ الْمَآءِ كُلَّ شَىْءٍ حَىٍّ اَفَلَا يُؤْمِنُوْنَ
நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா?
(இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா?
(அல்குர்ஆன் : 21:30)
++++++++++++++++++++++++
பிரபஞ்சம் விரிகிறது என்பதை
கூறும் வசனம்
وَ السَّمَآءَ بَنَيْنٰهَا بِاَيْٮدٍ وَّاِنَّا لَمُوْسِعُوْنَ
மேலும், நாம் வானத்தை (நம்) சக்திகளைக் கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையவராவோம்
(அல்குர்ஆன் : 51:47)
நட்புடன் J .இம்தாதி
Comments
Post a Comment