சார்ந்து சிந்தித்தல்
சார்ந்து சிந்தித்தலே சரியான
!! பார்வை !!
<<<<<•••••••••••••••••••••>>>>>>
கட்டுரை எண் 1205
11-03-18
ஆக்கம் J .யாஸீன் இம்தாதி
^^________________^^
Bismillahir Rahmanir Raheem
******************
விரைவாக ஓடும் இரயில் பெட்டிகளை தரையில் நின்று பார்க்கும் ஒருவனுக்கு அந்த பெட்டிகளின் அணிவரிசையும் அமைப்பும் அவனுடைய கண்களுக்கு சீராக தெரியாது
அதே இரயில் பெட்டியில் பயணம் மேற்கொள்பவன் அந்த இரயில் பல கிலோ மீட்டர் விரைவான வேகத்தில் சென்றாலும் அதன் வாசல் ஓரத்தில் நின்று கொண்டு அல்லது அதன் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து கொண்டு ஓடும் அந்த இரயில் பெட்டிகளை கவனித்தால் அவனுடைய கண்களுக்கு அந்த இரயில் பெட்டிகளும் அதன் ஓடும் அமைப்புகளும் தெளிவாக தெரியும்
அதே நேரம் தரையில் நின்று ஓடும் இரயிலை வேடிக்கை பார்க்கும் மக்களை விரைவாக செல்லும் இரயில் பெட்டியில் பயணம் செய்யும் ஒருவனுக்கு தெளிவாக பார்க்க இயலாது
காரணம் இது மனித கண்களில் உள்ள குறைபாடு இல்லை
மாறாக எதை பற்றிய உண்மையை நாம் அறிவதாக இருந்தாலும் அதை சார்ந்து நமது சந்தனையை அமைக்கும் போது தான் அதன் உண்மையை நம்மால் உணர முடியும்
பிரசவத்தின் போது தாய்மையின் வேதனையை நாம் புரிவதாக இருந்தால் அவர்களை சார்ந்து நாம் சிந்திக்கும் போது தான் அந்த தாய்மையின் வேதனையை நம்மால் அறிய முடியும்
இல்லாவிட்டால் அவர்கள் வேதனையில் வெளிப்படுத்தும் ஓசையை மட்டும் தான் நம்மால் காதால் செவியுற முடியும்
கணவன் மனைவிக்காக உழைக்கும் போது அனுபவிக்கும் சிரமத்தையும் மனைவி கணவனுக்காக உழைக்கும் போது அனுபவிக்கும் சிரமத்தையும் தள்ளி நின்று வேடிக்கை பார்க்காது அவர்கள் போலவே நம்மையும் கற்பனையில் உருமாற்றி சிந்திக்கும் போது தான் அவர்களின் தியாகமும் சேவையும் நம்மால் உணர முடியும்
வீட்டிலேயே இருந்து கொண்டு தொலைகாட்சியை பார்த்து கொண்டு சமையலை செய்வதெல்லாம் ஒரு கஷ்டமான வேலையா ? என்று மனைவியின் தியாகத்தை கணவன் குறைத்து மதிப்பிடுவதும்
நினைத்த நேரத்தில் வெளியே ஜாலியாக சென்று விட்டு நண்பர்களோடு அரட்டையடித்து விட்டு
நாளு காசு பணம் சம்பாரிப்பதெல்லாம் என்ன பெரிய கஷ்டமா ?என்று கணவனின் தியாகத்தை மனைவி குறைத்து மதிப்பிடுவதும்
இது போன்ற காரணங்களால் தான்
எவருடைய தியாகத்தையும் பணியையும் எப்போதும் நாம் குறைத்து மதிப்பீடு செய்ய கூடாது
எவருடைய கஷ்டத்தையும் முயற்சிகளையும் அவரவர் பக்கம் நின்று யோசித்தாலே தெளிவாக நம்மால் உணர முடியும் என்பதற்கே இந்த சிறிய சிந்தனை எடுத்து காட்டு பதிவு
عَنِ ابْنِ عَبَّاسٍؓ أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: أَرْبَعٌ مَنْ أُعْطِيَهُنَّ فَقَدْ أُعْطِيَ خَيْرَ الدُّنْيَا وَاْلآخِرَةِ: قَلْباً شَاكِرًا وَلِسَاناً ذَاكِرًا وَبَدَناً عَلَي الْبَلاَءِ صَابِرًا وَزَوْجَةً لاَ تَبْغِيهِ خَوْناً فِي نَفْسِهَا وَلاَ مَالِهِ
நன்றி செலுத்தும் உள்ளம்
அல்லாஹ்வை தியானிக்கும் நாவு
துன்பங்களைச் சகிக்கும் உடல்
தன் கற்பிலும் கணவனின் செல்வத்திலும் மோசடி செய்யாத பத்தினியான மனைவி
ஆகிய இந்த நான்கு பாக்கியங்களும் எவருக்குக் கொடுக்கப்பட்டதோ, அவர் இம்மை, மறுமையின் நன்மைகள் யாவற்றையும் பெற்றுக் கொண்டார் என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நூல் - தப்ரானி
நட்புடன் J .இம்தாதி
Comments
Post a Comment