காதல் விபரீதங்கள்

            காதல் விளைவுகள்

  
<<<<<<•••••••••••••••••••••>>>>>>

            கட்டுரை எண் 1204
                    11-03-18
    ஆக்கம்  J .யாஸீன் இம்தாதி

            ^^________________^^
     Bismillahir Rahmanir Raheem
              ******************

காதல் விவகாரத்தில் எது போன்ற விளைவுகள் ஏற்பட்டாலும் அதில் உடனடி குற்றவாளி கூண்டில் நிறுத்தப்படுவது ஆண் இனம் மட்டுமே

பெண் என்றவுடன் ஏதோ உலக  அதிசய படைப்புகளை போல் அவர்களை பார்க்கும் போதெல்லாம் பல் இழித்து கொண்டு அவர்களுக்கு பின்னால் திருமணத்திற்க்கு முன் முறையற்று அலையும் ஈனபுத்தியுடைய  ஆடவர்கள்  இருக்கும் வரை இந்நிலை மாறப்போவது இல்லை

காதல் விவகாரத்தில் தோல்வியை அல்லது ஏமாற்றுதலை  சந்திக்கும் ஒரு ஆடவன் அப்பெண்ணை கொலை செய்யும் அளவு அல்லது அவள் உடலில் திராவகம் ஊற்றி சேதப்படுத்தும் அளவு கொடூர செயலில்  ஈடுபடுகிறான் என்றால் அந்தளவுக்கு அப்பெண் இவனோடு ஊர்சுற்றும் போதும் கள்ளத்தனமாக மொபைல் மூலம் இவனோடு தொடர்பு கொண்டிருக்கும் போதும் அவனுடைய மூளையை சலவை செய்திருக்கிறாள் என்பது தான் எதார்த்தமான  உண்மை

எந்த காதலியும் தனது காதலனோடு கள்ளத்தனமாக பேசுவதற்க்காக காதலனுக்கு மொபைல்  ரீசார்ஜ் செய்து விடுவதில்லை 

அவளை விரும்பும் ஆடவன்  தான் பிறர்களிடம் கடனை வாங்கியாவது அவளுக்கு ரீசார்ஜ் செய்வதை ஏதோ புனித காணிக்கையாக கருதுகின்றான்  இது தான் அதிகமாக நடக்கும் ஒரு அவலம்

இதில் வேடிக்கை என்னவென்றால் தனது  காதலிக்கு மொபைல்  ரீசார்ஜும் செய்து விட்டு அவளிடம் தினமும்  மணிக்கணக்கில் பேச இவனே தனது மொபைலுக்கும் அன்றாடம் கவுரவ  பிச்சை எடுத்தாவது ரீசார்ஜ் செய்து அவளோடு பேசிக்  கொள்வான்

அப்படியானால் இவனால் காதலிக்கப்படும் பெண்ணுக்கு இவனால்  செய்து விடப்பட்ட அந்த  ரீசார்ஜ் யாரிடம் பேசுவதற்க்கு ?

இங்கு தான் கள்ளத்தனமாக  காதலிக்கும் ஒரு ஆடவனின்  மடமைத்தனம் துவங்குகிறது

நாளடைவில் இவனை நம்பி வாழும் சொந்த குடும்பத்திற்க்கு செய்ய வேண்டிய செலவுகளை விட கூடுதலாக இவன் அந்தரங்கமாக பேசும் அப்பெண்ணுக்காக செய்ய முற்பட்டு விடுகிறான்

தனது ஏடிஎம் கார்ட்டை கூட காதலியை நம்பி திருமணத்திற்க்கு முன்பே அவளிடம் ஒப்படைக்கும் அரைலூசுகள் மிகவும் அதிகம்

காதல் கண்ணை மறைக்கும் என்பது பொய் மொழி காதல் பகுத்தறிவையே  முடக்கும் என்பது தான் எதார்த்தமான மொழி

வாழ்வில் போராடி பல தியாகம் செய்து பல அவப்பெயர்களை சந்தித்து மனஉளைச்சலுக்கு உள்ளாகி ஒரு பெண்ணை திருமணம் செய்வதற்க்கு திருமணம் என்பது உலக அதிசயம் அல்ல

மனிதன் மலம் ஜலம் கழிப்பது எந்தளவுக்கு எளிமையானதோ அது போலவே ஒரு ஆணுக்கு திருமணத்தின் மூலம் முறையாக  பெண் துணை கிடைப்பதும்

ஒரு பெண்ணுக்கு அதே போல் திருமண பந்தத்தின் மூலம்  ஆண் துணை கிடைப்பதும் எளிமையானது

காதலித்து திருமணம் செய்தால் தான் இல்லற வாழ்வு இனிக்கும் என்று நினைப்பதே ஒரு பிரம்மை சுருக்கமாக சொன்னால் அது ஒரு உளவியல் நோய்

கற்பனை திரைப்படங்களும் கூத்தாடிகளும் தான் இதை சினிமாவில் புனிதமாக காட்டி பணம் ஈட்டுகிறார்களே தவிர எதார்த்த வாழ்வில் நடிகர் நடிகைகளில் அநேகமானவர்களே நிஜ வாழ்வில் காதலித்து திருமணம் செய்து ஒரு சில மாதம் அல்லது வருடங்களிலேயே  விவாகரத்தை பெற்றவர்கள் தான் அதிகம்

ஒரு பெண் எப்படி தன்னை அறிமுகம் செய்தால் அவள் நம்மிடம் காதலை சொல்லுவாள் என்று பல பொய்களை மெய்களை போல் சித்தரித்து

முதல் அறிமுகமே போலியாக துவங்குவது தான் தற்போது நடை முறையில் உள்ள  அநேகமான ஆடவனின்  காதல்

ஒரு ஆண் எப்படி தனது அழகை ரசிப்பான் என்று திட்டமிட்டு அதற்க்கு ஏற்று தனது  வெளித்தோற்றத்தில் பல ஈர்ப்புகளை செயற்கையாக உருவாக்கி  வேஷமிடும் கோலம் தான் அநேகமான பெண்களின் காதல்

இந்த உண்மைகளை பல ஊடக உண்மைகளை  விளைவுகளை சுட்டிக்காட்டி எச்சரிக்கை செய்தாலும்
   இளைய சமூகம் அவர்களின் பருவத்தில் சரியாக  உணரப் போவதும் இல்லை

எதார்த்தமான வாழ்கையை சிந்தித்து திருந்தப்போவதும் இல்லை

அவர்களை ஈன்ற பெற்றோர்கள் இவர்களால் வருந்துவதும் பல அவமானங்களை எதிர் கொள்வது  தான் மிச்சம்

        நட்புடன்  J  .இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்