முஸ்லிம்களின் அழிவுகளும் காரணங்களும்
விளைவுகளின் மூல காரணிகளே
முஸ்லிம்கள் தான்
<<<<<<•••••••••••••••••••••>>>>>>
கட்டுரை எண் 1200
1-03-18
ஆக்கம் J .யாஸீன் இம்தாதி
^^________________^^
Bismillahir Rahmanir Raheem
******************
உலகளவில் முஸ்லிம்கள் என்பதற்காக இஸ்லாமிய விரோதிகளால் முஸ்லிம்கள் தாக்கப்படுவது ஒரு ரகம்
முஸ்லிம்களின் அறியாமையாலும் அறிவீனத்தாலும் பதவி மற்றும் சுயநல மோகத்தாலும் பல விதங்களில் முஸ்லிம்கள் இஸ்லாத்தின் எதிரிகளால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதும் ஒரு ரகம்
இதில் முதலாம் ரகத்தை மட்டும் பெரிதுபடுத்தி முன்னிலைபடுத்தி முஸ்லிம்களால் தற்கால பாதிப்புகளை பரவலாக பேசப்படுகிறதே தவிர இரண்டாம் ரகத்தை பற்றி முஸ்லிம்களும் கூட சிந்திப்பது இல்லை
இஸ்லாமிய ஆட்சி இல்லாத நாடுகளில் முஸ்லிம்கள் துன்பப்படுத்தபடுவதை விட இஸ்லாமிய ஆட்சி நடக்கும் அரபு நாடுகளில் தான் அநேகமான முஸ்லிம்கள் இன்னல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்
அப்படியானால் இதற்க்கு யார் பொருப்பு ? யாரை குற்றவாளியாக இவ்விசயத்தில் கூற முடியும்
இஸ்லாமிய ஆட்சியாளர்களை எதிர்த்து கிளர்ச்சிகளை செய்வது அல்லது அவர்களுக்கு எதிரான மாற்று அணிகளை ரகசியமாக உருவாக்குவது அல்லது அவர்களை எதிர்க்கும் முஸ்லிம் அல்லாத நபர்களோடும் யூத நஸ்ரானிகளின் ஆட்சியாளர்களோடும் நேரடியாக அல்லது மறைமுகமாக ஆதரவு தெரிவித்து கைகோர்த்து நிற்பது இவையாவுமே முஸ்லிம்கள் செய்து வரும் மாபெறும் பிழையாகும்
இதற்க்கு பின்னனியாக இருப்பது அவர்களின் பதவி மோகமும் தனது கொள்கை அல்லாத முஸ்லிம்கள் மீது உள்ள குரோதமான விருப்பும் அதை சார்ந்த வெறுப்புமாகும்
தற்காலத்தில் இஸ்லாமிய எதிரிகளின் தாக்குதலுக்கு உள்ளான முஸ்லிம்களை விட அரபுலகில் முஸ்லிம்களான ஷியா மற்றும் சுன்னத் ஜமாத் ஆட்சியாளர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள விரோதத்தாலும் குரோதத்தாலும் அழிவுகளை சந்தித்து வரும் முஸ்லிம்கள் தான் மிகவும் அதிகம்
நெருப்பை தானாகவே மூட்டி விட்டு அந்த நெருப்பு பல உயிர்களை பலி வாங்கும் போது இதற்க்கு நாங்கள் காரணம் அல்ல என்று நடிப்பது அநேக முஸ்லிம் நாடுகளின் நடைமுறையாக மாறிவிட்டது
கருத்து வேறுபாடுள்ள முஸ்லிம் சமுதாயம் தங்களுக்கு மத்தியில் ஏற்படும் விவகாரங்களுக்கு குர்ஆன் ஹதீசோடு நிறுத்தி கொள்ளாது அந்நியர்களின் உதவிகளை நாடாது இருந்தால்
எந்த ஒரு இஸ்லாமிய விரோதியும் முஸ்லிம்களின் சமூகத்தில் நேரடியாகவோ அல்லது ரகசியமாகவோ அறவே நுழைய முடியாது என்பதை முதலில் முஸ்லிம்கள் புரிய வேண்டும்
அவ்வாறு அவர்கள் நமக்கு ஆதரவு தெரிவிப்பது போல் நுழைந்தாலும் அவர்கள் மூலம் பாதிக்கப்படுவது முஸ்லிம் சமூகம் தான் என்பதை மறந்து விட கூடாது
காரணம் இஸ்லாம் அல்லாத எந்த கொள்கைவாதிகளும் அவர்கள் இஸ்லாத்திற்காகவும் முஸ்லிம் சமூகத்திற்காகவும் உளப்பூர்வமாக பரிந்து பேசுவார்கள் என்று நினைப்பதே மடமைத்தனம்
وَلَنْ تَرْضٰى عَنْكَ الْيَهُوْدُ وَلَا النَّصٰرٰى حَتّٰى تَتَّبِعَ مِلَّتَهُمْ
(நபியே!) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள்
(அல்குர்ஆன் : 2:120)
எவருடைய இஸ்லாமிய ஆட்சியிலும் குடிமக்களுக்கு பாதிப்புகளும் வரம்பு மீறல்களும் சில நேரம் ஏற்படவே செய்யும் அது போன்ற ஆட்சியாளர்களை பெற்றுள்ள முஸ்லிம் சமூகம் பொறுமை காக்காது
அந்த இஸ்லாமிய ஆட்சியாளர்களையே கடுமையாக எதிர்த்து கிளர்ச்சி செய்து நாங்களே இஸ்லாமிய ஆட்சியை தருகிறோம் என்று விஷ கருத்தை தூவுவது தான் உலகளவில் முஸ்லிம்களின் அனைத்து பாதிப்புகளுக்கும் எதிரிகளின் ஊடுருவலுக்கும் மூல காரணம்
இயன்றவரை முஸ்லிம்களாக வாழ்வது தான் நம் மீது இஸ்லாம் விதியாக்கி இருக்கும் நெறிமுறையே தவிர
இஸ்லாமிய ஆட்சியில் தான் நாம் வாழ வேண்டும் என்றோ அல்லது தவறான இஸ்லாமிய ஆட்சியாளர்களை அடித்து துறத்தி விட்டு புதிய ஆட்சியை நிறுவிய பிறகு தான் நாம் முஸ்லிம்களாக வாழ வேண்டும் என்றோ இஸ்லாத்தில் எங்கும் சொல்லப்படவில்லை
அவ்வாறு இஸ்லாமிய ஆட்சியை மையமாக்கியே எந்த நபிமார்களும் தங்களது பிரச்சாரத்தை வாழ்நாளில் அமைத்தது இல்லை
இஸ்லாமிய நாட்டில் ஆட்சி செய்யும் ஒருவன் இறைவனுக்கு இணை வைக்காதவரை அவனது தவறான நடைமுறைகளுக்காக அவனது ஆட்சியை மாற்ற வேண்டும் என்று முடிவு எடுப்பதற்க்கு எந்த ஒரு அதிகாரமும் முஸ்லிம்களுக்கு வழங்கப்படவில்லை
********************
இஸ்லாமிய ஆட்சியாளர்களை
எதிர்ப்பது
-----------------
3772. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
(எனக்குப் பிறகு) விரைவில் குழப்பங்களும் பிரச்சினைகளும் தோன்றும்
இந்தச் சமுதாயத்தின் (அரசியல்) நிலை (ஒரே தலைமையின் கீழ்) ஒன்றுபட்டிருக்கும்போது, அவர்களிடையே பிளவை ஏற்படுத்த விரும்புகின்றவரை வாளால் வெட்டிக் கொல்லுங்கள் அவர் யாராக இருந்தாலும் சரியே!
இதை அர்ஃபஜா பின் ஷுரைஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
***********************
ஆட்சி குழப்பத்தின் போது
அமைதி அல்லது ஹிஜ்ரத்
**********
5531. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
சில குழப்பங்கள் தோன்றும் அப்போது படுத்து உறங்கிக்கொண்டிருப்பவர் விழித்திருப்பவரை விடவும், விழித்திருப்பவர் (அவற்றுக்காக) எழுந்து நடப்பவரைவிடவும், அவற்றுக்காக எழுந்து நடப்பவர் (அவற்றுக்காக) எழுந்து ஓடுபவரைவிடவும் சிறந்தவர் ஆவார்
அப்போது யார் ஒரு புகலிடத்தையோ காப்பிடத்தையோ பெறுகின்றாரோ அவர் (அதன் மூலம்) தம்மைத் தற்காத்துக் கொள்ளட்டும்!
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
****************
புரட்சியாளர்களுக்கு நபிகளாரின்
கடுமையான மறுப்பு
+++++++
3778. அவ்ஃப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்கள் தலைவர்களில் நல்லவர்கள் யாரெனில், அவர்களை நீங்கள் நேசிப்பீர்கள் உங்களை அவர்கள் நேசிப்பார்கள் உங்களுக்காக அவர்கள் பிரார்த்திப்பார்கள் அவர்களுக்காக நீங்கள் பிரார்த்திப்பீர்கள்
உங்கள் தலைவர்களில் தீயவர்கள் யாரெனில், நீங்கள் அவர்களை வெறுப்பீர்கள் உங்களை அவர்கள் வெறுப்பார்கள் நீங்கள் அவர்களைச் சபிப்பீர்கள் அவர்கள் உங்களைச் சபிப்பார்கள்" என்று கூறினார்கள்
அப்போது, "அல்லாஹ்வின் தூதரே!
அவர்களுக்கெதிராக நாங்கள் வாள் ஏந்தலாமா?" என்று கேட்கப்பட்டது
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வேண்டாம்
உங்களிடையே அவர்கள் தொழுகையை நிலைநாட்டும்வரை (வேண்டாம்) உங்கள் ஆட்சியாளர்களிடம் நீங்கள் வெறுக்கும் (மார்க்கத்திற்கு முரணாண இணைவைப்பு செயல்கள்) எதையேனும் கண்டால், அந்த ஆட்சியாளரின் செயல்பாட்டை வெறுப்பீர்களாக!
கட்டுப்படுதலில் இருந்து உங்கள் கையை விலக்கிவிடாதீர்கள் என்று கூறினார்கள்
நூல்- ஸஹீஹ் முஸ்லிம்
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment