ஆன்மீக ஏமாற்றம்
இயல்பை வெல்ல முடியாத
மனித படைப்பு
=========================
09-02-18
கடவுளை மறுப்பவனே அவனது பகுத்தறிவை கொண்டு அழகாக சிந்திக்கும் போது
அந்த பகுத்தறிவை கடவுள் படைத்ததாக நம்பும் ஆன்மீகவாதிகள் அதை விட கூடுதலான சிந்தனையை தான் மக்களுக்கு முன் வைக்க வேண்டும்
ஆனால் கடவுளை நம்பும் மக்களிடம் தான் அதிகமான மூட நம்பிக்கைகளும் தெளிவற்ற சொற்களும் உளரல்களும் அதிகமாக காணப்படுகின்றது
கடவுளை மறுக்கும் கொள்கையே ஆன்மீகவாதிகளின் முட்டாள்தனமான செயல்பாடுகள் மற்றும் மூட நம்பிக்கைகளினால் தான் வளர்ந்தே உள்ளது
உடைகளை நடைகளை வித்தியாசமாக காட்டி கொண்டு ஆன்மீகத்தின் பெயரால் யார் எதை சொன்னாலும் அதை கடவுள் வார்த்தையாக கருதுவது தான் ஆன்மீகவாதிகளின் சிந்தனை நாசமா போவதற்க்கு மூல காரணம்
ஆண்டாள் விவகாரத்தில் ஆண்டாள் அமைதியாக இருந்தாலும் ஆண்டாளின் பெயரை சொல்லி போலி ஆன்மீகவாதிகள் ஏற்படுத்தும் குழப்பங்களும் விரோதங்களும் தான் அதிகம்
ஆண்டாள் விவகாரத்தில் சம்மந்தப்பட்ட நபர் ஆண்டாள் சந்நதியில் வந்து மன்னிப்பு கேட்கும் வரை நான் உண்ணாவிரதம் இருப்பேன் என்று கூறி அதை நடைமுறை படுத்தினால் அவர் ஆன்மீக பக்தியில் பேசுகிறார் என்றும் கூட ஏற்கலாம்
ஆனால் லோகமாதா ஆண்டாள் கட்டளை போட்டால் உண்ணா விரதத்தின் போது நான் ஆகாரம் சாப்பிடுவேன் என்று ஒருவர் அந்தர்பல்டி அடித்தால் அதற்க்கு பெயர் தான் பக்தியான ஆன்மீகமா
பசி எடுத்தால் சாப்பிடுங்கள் என்று ஆண்டாள் கட்டளை போட வருவார் எ
ன்றால் அவருக்கான சாப்பாட்டையும் ஆண்டாளே கொண்டு வந்து கொடுத்து விட்டு செல்லலாமே
தன்னால் மட்டும் அல்ல யாராலும் சாகும் வரை உணவு இல்லாது இருக்க இயலாது என்று தெரிந்து கொண்டே சாகும்வரை உண்ணாவிரதம் என்று அறிவித்து விட்டு அதிலிருந்து தன்னை தற்காத்து கொள்ள ஆன்மீகத்தின் பெயரால் சொல்லும்
பொய்களே இவை
நாம் எப்படி உண்ணுகிறோமோ பருகுகிறோமோ இல்லறத்தை நாடுகிறோமோ இதே போல் அனைத்து விதமான பலவீனங்களையும் உள்ளடக்கி பிறப்பவனே மனிதன்
அவன் விஞ்ஞானியானாலும் மெஞ்ஞானியானாலும் ஆன்மீகத்தில் கரை
கடந்தவராக இருந்தாலும் இது தான் நிலை
பொது இடங்களிலும் மேடைகளிலும் உடைகளிலும் நடைகளிலும் நம்மை விட்டு வேறுபட்டவர்களாக தங்களை காட்டி கொள்வார்களே தவிர
தனிமையில் அனைவரும் நம்மை போன்ற
சாதாரண மனிதர்களே
மனக்கட்டுப்பாடுகளில் மனிதனுக்கு மனிதன் சில நேரங்களில் ஏற்ற தாழ்வுகள் இருக்கலாமே தவிர இயற்கையான உணர்ச்சிகளில் ஆசைகளில் தேடல்களில் எவரும் விதி விலக்கு பெற்றவர்களே அல்ல
இப்போதே குறித்து வைத்து கொள்ளுங்கள்
ஆண்டாள் கனவில் தோன்றி என்னை சாப்பிட சொன்னார் என்று இவர் நம் காதில் பூவை சுற்றத்தான் போகிறார்
அதற்கான நாடகமே இது
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment