புனிதமான காதல்
கூத்தாடிகளின் காதலும்
நிஜ வாழ்வு உண்மைகளும்
<<<<<<•••••••••••••••••••••>>>>>>
கட்டுரை எண் 1192
14-02-18
ஆக்கம் J .யாஸீன் இம்தாதி
^^________________^^
Bismillahir Rahmanir Raheem
******************
காதல் என்றால் அது தெய்வீகமானது என்றும்
காதலித்து திருமணம் செய்வோர் தான் ஒருவரையொருவர் புரிந்து பாசத்தோடும் நேசத்தோடும் இணைந்து மரணம் வரை பிரியாமல் வாழ்வார்கள் என்றும்
இளையவட்டங்களுக்கு எந்த பெற்றோரும் சொல்லி கொடுத்து வளர்த்துவதும் இல்லை
பள்ளி கூடங்களிலே கல்லூரிகளிலே பாடங்களாக போதிப்பதும் இல்லை
காரணம் ஒரு ஆணுக்கு பெண் துணை என்பதும்
ஒரு பெண்ணுக்கு ஆண் துணை என்பதும் நவீன கண்டு பிடிப்போ பரம ரகசியமோ இல்லை
வாழ்கை துணையை தேர்வு செய்ய பெரிய பெரிய தியாகங்கள் செய்ய வேண்டும் என்ற அவசியமும் இல்லை
உலகம் தோன்றிய நாள் முதல் இந்த நிமிடம் வரை சாதாரணமாக நடைபெற்று வரும் ஒரு நிகழ்வு தான்
திருமணத்திற்க்கு முன்பு இவளோடு வாழ்ந்தால் தான் வாழ்கை இனிக்கும் அல்லது இவரோடு வாழ்ந்தால் தான் வாழ்கை இனிக்கும் என்று நினைப்பதெல்லாம் ஓர் கற்பனை பிரம்மையே
ஆண் பெண் இரு சாராரும் எதிர் தரப்பு இரு சாராரின் உளவியலை உடலியலை அறிவுப்பூர்வமாகவும் அறிவியல் பூர்வமாகவும் அறிந்து கொள்ளும் எவராலும் எந்த துணையோடும் திருமணம் எனும் பந்தத்தின் மூலம் மன நிம்மதியை பெற முடியும்
இது இல்லை என்றால் அது ! அது இல்லை என்றால் இது! இந்த இரண்டும் இல்லை என்றால் தானாக கிடைப்பதின் மூலமே திருப்தியை பெறலாம் என்று முடிவு தான் திருமண தேர்விலும் கையாள வேண்டிய விசயமாகும்
தான் விரும்பிய ஒருவர் தனக்கு கிடைக்கவில்லை என்பதற்காக அவரை நினைத்தே வாழ்நாளை வீணாக்குவது
அல்லது விரும்பிய ஒருவர் தன்னை ஏமாற்றி விட்டார் என்பதற்காக அவர் மீது ஆசிட் ஊற்றுவது
அல்லது ஆணவ கொலைகளை செய்வது
அல்லது கள்ளத்தனமாக குடும்பத்தை விட்டு அவப்பெயரை ஏற்படுத்தும் விதம் அந்நியர்களோடு ஓடி போவது
இவை யாவுமே வாழ்கையின் எதார்தத்தை புரியாத அறிவிலிகள் செய்யும்
காரியங்களாகும்
இவர்களுக்கு இது போன்ற முட்டாள்தனமான சிந்தனையை தொடர்ந்து விதைப்பது சினிமா எனும் சீரழிவு துறையாகும்
அதே நேரம் சினிமாவில் காதலை புனிதமான காட்டிகளாக காட்டி அதே போல் வாழ்கையிலும் காதலித்து திருமணம் செய்த பல நடிகர் நடிகைகள்
திருமணம் செய்த சில மாதங்களிலேயே எதற்காக இவரை நாம் காதலித்து திருமணம் செய்தோம் என்று புலம்புவதையும் வருத்தப்படுவதையும் விவாகரத்து கேட்டு நீதிமன்ற வாசல்களில் காத்து நிற்பதையும் விவாகரத்து பெற்ற பின் காதலிக்காத வேறு ஒருவரை திருமணம் செய்து நிம்மதியாக வாழ்வதையும் பரவலாக பார்க்க முடிகின்றது
கூத்தாடிகளை முன்னோடிகளாக கருதும் எவரும் அவர்களின் நிஜ வாழ்கையை பார்க்காது படத்தில் அவர்கள் நடிக்கும் நிழல் வாழ்கையை பார்த்து தான் பகுத்தறிவு எனும் மூளையை இழக்கின்றனர்
அத்தகைய கூத்தாடிகளை பற்றிய ஓர் வீடியோ தொகுப்பே இது
https://youtu.be/xooR1H_MjOI
படிக்க வேண்டிய வயதில் உழைத்து குடும்பத்தை முன்னேற்ற வேண்டிய வயதில்
நமக்கு துணையாக அமைய வேண்டியது ஆணழகனா ?அல்லது உலக அழகியா ?என்று காம போதையில் சுற்றுவதை விட
திருமணம் செய்ய வேண்டிய வயதில் தான் நாம் இதை யோசிக்கிறோமா ?
நாம் விரும்பும் ஒருவரின் தனிப்பட்ட வாழ்கை எப்படிபட்டது?
அவருடைய வருமானம் என்ன ? அவருடைய கொள்கை என்ன ?
வாழ்வியலின் பாடத்தை அறிந்து பக்குவப்பட்டவராக இருக்கின்றாரா? அல்லது லட்சியமே இல்லாது வாழ்நாளை வீணாக்கும் நபராக உள்ளாரா ?
என்றெல்லாம் சிந்தித்து இரு குடும்பத்தார்களின் சம்மதத்தோடும் சமூக அங்கீகாரத்தோடும் முறையான திருமணத்தின் மூலம் இணைந்து அதன் பின் ஒருவரை ஒருவர் புரிந்து வாழ்வின் சிரமங்களை சகித்து பிணைப்போடு இருப்பதற்க்கு பெயர் தான் மெய்யான காதல்
வரவேற்கப்பட வேண்டிய உண்மையான
கண்ணியமான காதல்
நட்புடன் J .இம்தாதி
Comments
Post a Comment