ஆத்தீகம் நாத்தீகம்

       பகுத்தறிவை முடமாக்கும்

  நாத்தீகமும்  களப்பட ஆத்தீகமும்

    ========================
     <<<<<<•••••••••••••••••••••>>>>>>

            கட்டுரை எண் 1190
                    13-02-18
    ஆக்கம்  J .யாஸீன் இம்தாதி

            ^^________________^^
     Bismillahir Rahmanir Raheem
              ******************

வாழும் வரை தலைவன்
மடிந்து விட்டால் இறைவன்

இது தான் தமிழர் பண்பாடு 

          நாம் தமிழர் கட்சி

    சீமானின் புதிய மொழி இது


பகுத்தறிவு பேசுவோரும் அடிக்கடி அவர்களின்  பகுத்தறிவுக்கே  எதிராகவும் உளருவார்கள்  என்பதற்க்கு சீமானின் இம்மொழியே ஆணித்தரமான  சான்று

கல்லை வணங்கினால் அந்த  கல்லுக்கு விளங்குமா    ?

கல்லுக்கு மாலை போட்டால் அந்த  கல்லுக்கு விளங்குமா  ?

என்று சிலை வணங்கிகளிடம் பகுத்தறிவு பேசிவிட்டு

அதன் மூலம் தங்களை பகுத்தறிவு பகலவன் என்று பீற்றிவிட்டு



மனிதனாக பிறந்து மனிதனாகவே  இறந்து போன

     !!ஈ வெ ரா பெரியாருக்கு!!

சாமி சிலையை விட பெரிய சிலையை உண்டாக்கி அதற்க்கு மாலை போட்டு வருடா வருடம் பெரியார்  நினைவு நாளாக கற்பனையில் நினைத்து கொண்டு 

ஒன்றும் விளங்க இயலாத அந்த  பெரியார் சிலைக்கு முன் நின்று கைகூப்பி வணங்கும் மூடநம்பிக்கையை அரங்கேற்றும் அவல நிலையை தவறு என்று விளங்கும் வரை சீமானும் சிலை வணங்கியே

அதாவது அவர்களின் வாதப்படி மூடநம்பிக்கையின் உடன் பிறப்பே



பல காலம் நாத்தீகம் பேசி வழக்கமாக வணங்கி வந்த சிலைகளின் உருவங்களை  தான் இவர்கள் மாற்றி உள்ளார்களே  தவிர மூடநம்பிக்கைகள்  இவர்களிடமும் மாறவில்லை



தமிழனுக்கு ஒரு கடவுள் தெலுங்கனுக்கு ஒரு கடவுள் என்றால்

இரு புறம் இருக்கும் ஊமையனுக்கு யார் கடவுள்  ?

பாஷைகளை பேச இயலாத பன்றி நாய் போன்ற  மிருகங்களுக்கும் கால்நடைகளுக்கும்  பறவைகளுக்கும் யார் கடவுள்  ?



கருப்பு சட்டையை அணிவதால் பகுத்தறிவு பிறப்பது இல்லை

மாறாக கருப்பு சிந்தனையை அகற்றினால் தான் வெண்மை சிந்தனை பிறக்கும்


காண்பவைகளை எல்லாம் கடவுளாக நினைப்பதும் காண்பவைகளை எல்லாம் கடவுளாக நினைப்பது தவறு என்று கூறி விட்டு கடவுளை மறுத்த மனிதனையே கடவுளாக சித்தரிப்பதும் ஒரே மூட நம்பிக்கை தான்


கடவுளை போல் யாரும் எதுவும் இல்லை என்பது தான் சிந்தனை தெளிவு


கடவுளை மறுப்பதும் படைப்புகளை கடவுளாக கருதுவதும் நல்ல சிந்தனையில் ஏற்பட்டுள்ள எலும்பு முறிவு 

என்னுள் இறைவன் இருக்கிறான் எங்கும் இறைவன் இருக்கிறான் என்பது போலியான அத்வைதம்

நாம் எங்கே இருந்தாலும் நம்மை இறைவன் கண்காணிப்பான் என்று கருதுவதே அழகிய இறை நம்பிக்கை


அஸ்த்திவாரத்தை வலுப்படுத்தாது கட்டிடங்களை அழகு படுத்துவதில் பலன் இல்லை

கடவுளின் தனித்தன்மையை புரியாத எவராலும் சரியான ஆத்தீகனாகவும் இருக்க முடியாது

சரியான நாத்தீகனாகவும் இருக்க
முடியாது



قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌ‌ ‏ 
(இறைதூதரே !) நீர் கூறுவீராக அல்லாஹ் (கடவுள்) அவன் ஒருவனே

اَللّٰهُ الصَّمَدُ‌ ‏ 
அல்லாஹ் (கடவுள் எவரிடத்திலும் ) தேவையற்றவன்

لَمْ يَلِدْ   ۙ وَلَمْ يُوْلَدْ ۙ‏

அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை

وَلَمْ يَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ‏ 

அவனுக்கு நிகராக எவரும் (எதுவும் எங்கும் ) இல்லை

(அல்குர்ஆன்  அத்தியாயம் 112)

اَيُشْرِكُوْنَ مَا لَا يَخْلُقُ شَيْـٴًـــــا وَّهُمْ يُخْلَقُوْنَ‌ ‌ ‏

எந்தப் பொருளையும் படைக்க இயலாதவற்றையா இவர்கள் (இறைவனுக்கு ) இணையாக்குகிறார்கள்?

இன்னும், அவர்களோ (ஏக இறைவனால் தான் ) படைக்கப்பட்டவர்களாயிற்றே!

      (அல்குர்ஆன் : 7:191)

وَالَّذِيْنَ يَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَا يَخْلُقُوْنَ شَيْــٴًــا وَّهُمْ يُخْلَقُوْنَ‏ 


இறைவனையன்றி  )வேறு எவர்களை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ,

அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள்

அவர்(களால் பிரார்த்திக்கப்படுபவர்)களும் படைக்கப்பட்டவர்களாவார்கள்

        (அல்குர்ஆன் : 16:20)

    நட்புடன்   J.இம்தாதி
  

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்