நபிகள் நாயகம்( ஸல்)

      கொள்கை  வரம்பு மீறும்

                  முஸ்லிம்கள்

  =========================

  <<<<<<•••••••••••••••••••••>>>>>>
            கட்டுரை எண் 1194
                    16-02-18
    ஆக்கம்  J .யாஸீன் இம்தாதி

            ^^________________^^
     Bismillahir Rahmanir Raheem
              ******************

( அல்லாஹ் என்பது கடவுளை குறிக்கும் ஓர் அரபு சொல் ஆகும்  )

இறைவனை தவிர வேறு எவரையும் எதையும் எந்த சந்தர்ப்பத்திலும் ஒரு போதும்  வணங்க கூடாது என்பதும் வணக்கத்திற்க்குரிய தகுதியை இறைவன் மட்டும்  தான் பெற்றுள்ளான் என்பதும் உலகில் பல மதத்தவர்களும்  அறிந்துள்ள விசயம்

கடவுள் இல்லை என்று போதித்த புத்தர் என்ற  மனிதரை  கூட  கடவுளாக சித்தரித்து அவர் பெயரிலேயே  தனி மதம் உண்டாக்கி புத்தரின் சொல்லுக்கு எதிராக அவரையே  வணங்கும் அவல நிலையை அவரை நேசிக்கும் சமுதாயமே உண்டாக்கி விட்டனர்

ஆனால் கடந்ந பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னால் அரபுநாட்டில் பிறந்து  கடவுளை போதித்த இறைதூதர் நபிகள் நாயகம்( ஸல்) அவர்கள் மட்டும்  இன்று வரை அவரை நேசிக்கும் சமுதாயத்தவர்களால் சிறந்த  மனிதனாக மட்டுமே மதிக்கப்படுகிறார்

அவரை மதிக்கிறோம் எனும் பெயரில் அமெரிக்கா பாராளு மன்றத்தில் நபிகள் நாயகத்துக்கு கற்பனை வடிவில் சிலை வைத்த போதும்

அவருடைய வரலாற்றில் மனித சமுதாயத்திற்க்கு பல படிப்பினை உள்ளது என்பதை விளக்க அவரை போன்ற கார்ட்டூனை பல பத்திரிக்கைகள் வெளியிட்ட போதும் அதை கடுமையாக கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய சமுதாயம் இஸ்லாமிய சமுதாயம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  எப்படி இருப்பார் ?என்பதற்க்கு கூட உலகில்  ஒரு புகைப்படம் உலகில்  இல்லை

அவருடைய சொற்கள் மட்டுமே இன்று வரை பல முனைகளில்   பாதுகாக்கப்பட்டு வருகிறது

அவர் இறந்த பிறகு அவரை உலகம் மறக்க கூடாது என்பதற்காக அவரை அடக்கம் செய்த இடத்தில் சமாதி கூட எழுப்பப்படவில்லை

அவரை அடக்கம் செய்யப்பட்ட இடம் இன்று வரை வெற்று தரை  மண்ணாகவே இன்று வரை சவுதியில் காணப்படுகிறது

அவரது  சமாதியை சுற்றி எவரும் நெருங்க கூடாது என்பதற்காக தடைகள் போடப்பட்டு காவலர்கள் எப்போதும்  நியமிக்கப்பட்டுள்ளனர்

காரணம் நம்மை போன்று மனிதராக பிறந்து நம்மை போன்றே மனிதராக இறந்து போன நபிகள் நாயகத்தை  அவர் மீது உள்ள அளவு கடந்த  கண்ணியத்தின் காரணமாக அவரை நம்பும் முஸ்லிம் சமுகம்  அவரை கடவுளாக நினைத்து

அவருடைய சமாதியில் விழா எடுத்து விட கூடாது  என்பதற்காகவும்

அவரது சமாதிக்கு முன்பு நின்று கடவுளிடம் கேட்பது போல் கையேந்தியும்  முட்டி போட்டும் சிரம்பணிந்தும்  பிராத்தணை செய்து விட கூடாது என்பதற்காகவும் தான் இந்த ஏற்பாடுகள்

ஒருவருடைய முகம் எப்படி இருக்கும் என்று தெரியாமலேயே அவருடைய அனைத்து சொற்களும் பதினான்கு நூற்றாண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வருவது உலகில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டுமே

அவர் ஆன்மீக வழிகாட்டியாக அரபுலகின் மன்னராக வாழ்ந்த நேரத்தில் கூட அவருடைய கால்களை தொட்டும் மரியாதை செய்வதை அவர் வரும் போது எழுந்து நின்று வரவேற்பதை கடுமையாக கண்டித்தவர் என்பது அவருடைய வரலாற்றை படிப்போருக்கு தெரிந்த விசயமே

ஆனால் முஸ்லிம்களில் பலர் இதை கூட புரியாது

மனிதர்களாக வாழ்ந்து மனிதர்களாகவே மரணத்தை தழுவிய நல்லடியார்களுக்கு மகான்களுக்கு  சமாதிகளை எழுப்பி அதன் மீது தர்ஹா என்று சொல்லப்படும் கட்டிடங்களை கட்டி வைத்து கொண்டு

அங்கே சென்று பிராத்தணை செய்கின்றனர் ஆடு மாடுகளை பலி கொடுக்கின்றனர்

இது போன்ற காரியங்கள் இஸ்லாத்திற்க்கும் எதிரானது பகுத்தறிவுக்கும் முரணாணது என்பதை விளங்கி

உலகம் முழுவதும் கட்டப்பட்டுள்ள நாகூர் தர்ஹா ஏர்வாடி தர்ஹா போன்ற அனைத்து சமாதிகளும் தரைமட்டம் ஆக்கப்பட்டு சமநிலை செய்யப்பட வேண்டும்

மனிதன் தனது தூய நடவடிக்கையால் இறைவனிடம் புனிதனாக ஆகலாம்

ஆனால் வணங்கப்படும் இறைவனாக ஒரு விநாடி கூட ஆக முடியாது

ஒரு மனிதன் கூறும் அழகிய சொற்கள் தான் அவர் மீது மரியாதையாக மாறி அதுவே பக்தியாக பரிணாமம் பெற்று நாளடைவில் அவரையே கடவுளாக நினைத்து வழிபடும் சூழ்நிலையை உண்டாக்கி விடுகிறது

இது தான் பல தெய்வ வழிபாடுகள் உருவானதற்க்கு மூல காரணம்

நல்லோர்களில் எவரும் இறைவனை தவிர்த்து விட்டு என்னை வணங்குங்கள் என்று ஒரு போதும் சொல்ல மாட்டார்கள்

தீயோர்களில் எவரும் தன்னை மக்கள் அளவுக்கு மீறி புகழும் போது அதை கண்டித்து பேச மாட்டார்கள்

        ===================

மர்யமின் மகன் (இயேசுநாதர் எனும் ஈசா என்ற  இறைதூதரை அவர்களின் (கிருஸ்தவ சமூகம் வரம்பு மீறி புகழ்ந்து கடவுளாக ஆக்கிவிட்டதை போல்) என்னையும் வரம்பு மீறி( கடவுளாக) புகழாதீர்கள்

நான் இறைவனின் அடிமையாகவும் தூதராகவும் உள்ளேன்

    அறிவிப்பாளர் - இப்னு அப்பாஸ்

                   நூல்  - புகாரி
      =====================

قُلْ اِنَّمَاۤ اَنَا بَشَرٌ مِّثْلُكُمْ يُوْحٰٓى اِلَىَّ اَنَّمَاۤ اِلٰهُكُمْ اِلٰـهٌ وَّاحِدٌ‌   فَمَنْ كَانَ يَرْجُوْالِقَآءَ رَبِّهٖ فَلْيَـعْمَلْ عَمَلًا صَالِحًـاوَّلَايُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهٖۤ اَحَدًا‏ 

(நபிகள் நாயகமே ) நீர் சொல்வீராக

நிச்சயமாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே!

நிச்சயமாக உங்களுடைய இறைவன்  ஒரே இறைவன் தான்  என்று எனக்கு இறை செய்தி அறிவிக்கப்பட்டு உள்ளது

எவன் தன்னுடைய இறைவனைச் சந்திக்கலாம் என ஆதரவு வைக்கின்றானோ அவன் நல்ல செயல்களைச் செய்து

தன் இறைவனை வணங்குவதில் வேறெவரையும் இணையாக்காது இருக்கட்டும்

       (அல்குர்ஆன் : 18:110)

         நட்புடன் J . இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்