சினிமா சினிமா
ஒழுக்கேடுகளை ஊக்குவிக்கும்
சினிமா துறையும்
அறிவுக்(?)களஞ்சியங்களும்
<<<<<<•••••••••••••••••••••>>>>>>
கட்டுரை எண் 1193
15-02-18
ஆக்கம் J .யாஸீன் இம்தாதி
^^________________^^
Bismillahir Rahmanir Raheem
******************
அந்நியவனை பார்த்து கண் அடித்தல் என்பதே விபச்சாரிகளின் சங்கை மொழி
உடல் அசைவுகளில் கூட அதற்கான வாடகை எவ்வளவு என்பதை வெளிப்படுத்தும் சூட்சமம் தெரிந்த நபர்களே விலை மாதர்கள் அதாவது விபச்சாரிகள் விபச்சாரகர்கள்
அது போன்ற கண் அடித்தலை குடும்ப பெண்களோ பொது இடங்களில் நடக்கும் பெண்களோ செய்தால் அவர்களை கேவலமாக பார்க்கும் உலகம் கடுமையாக விமர்சிக்கும் உலகம்
அதே காரியத்தை ஆயிரக்கணக்கான மக்கள் பார்க்கும் திரைப்படங்களில் ஒரு நடிகனோ நடிகையோ செய்தால் அவர்களை நடிப்பின் சிகரம் என்றும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள் என்றும் புத்தி கெட்டு புகழ்வது தான்
கேவலமானவர்களின் ஈன புத்தியாகும்
தற்போது அது போன்ற ஒரு கேவலத்தை தான் ஊடகங்கள் மலையாள நடிகை
பிரியா பிரகாஷ் வாரியருக்கு
தலைப்பு செய்தியாகவும் சிறப்பு செய்தியாகவும் வெளியிட்டு தங்களது ஈனபுத்தியை வெளிப்படுத்தி கொண்டுள்ளது
அறிவை சொல்லி தருவதாக காட்டப்படும் கல்லூரி வகுப்பறையில் தான்
சகமாணவனை பார்த்து கண் அடித்து விபச்சார அழைப்பு விடுவது போல் இக்காட்சி அமைக்கப்பட்டுள்ளது
இதை கண்டிக்க வேண்டிய கல்லூரி நிர்வாகிகள் கூட மவுனச்சாமியார்களின் வேடம் போடுவதில் கின்னஸ் சாதனை பெற்றுள்ளனர்
காரணம் பணம் தந்தால் கல்லூரிகளை கூட காதல் திரைப்படங்கள் எடுக்க ஒதுக்கி தருவார்கள் என்பதை பல நேரங்களில் பல கல்லூரிகளின் நிர்வாகம் நிரூபித்தும் காட்டி உள்ளது
அதனால் தான் ஒரு காலத்தில் கல்லூரி மாணவ மாணவியர்களை போல் நடித்து காதல் திரைப்படங்களை எடுத்த பட அதிபர்கள்
தற்போது சிறுவர் சிறுமியர்கள் படிக்கும் பள்ளிக்கூடங்களிலும் காதல் திரைப்படங்களை தயாரித்து வளரும் பிள்ளைகளின் பகுத்தறிவை முடமாக்கி வருகின்றனர்
டீச்சரோடு மாணவன் காதல்
மாணவனோடு டீச்சருக்கு காதல்
என்பன போன்ற பல அருவெருப்பான திரை கதைகளையும் வடித்து அதன் மூலமும் பல கோடிகளை கூத்தாடிகள் ஈட்டி வருகின்றனர்
பத்து வயது உள்ள ஒருவருக்கு பகுத்தறிவை போதிக்கிறார்களோ இல்லையோ
காமத்தை மோகத்தை அதை நடைமுறை படுத்தும் தவறான வழிமுறைகளை மட்டும் சரியாக செய்து வருகின்றனர்
ஆன்மீகத்தின் பீடங்கள் மன அமைதியின் இருப்பிடங்கள் என்று சொல்லப்படுகின்ற புனிதமான கோயில் சாமிகளின் சந்நதிகளில் கூட காதல் பாடல்கள் காம பார்வைகளை படமாக்கி அதையும் விற்று கோயில்களின் புனிதத்தை தொடர்ந்து கெடுத்து வருகின்றனர்
A படத்தை துவக்கும் போதும் கூட சாமி சிலைகளுக்கு முன் நின்று பக்திமயத்தோடு விளக்கை ஏற்றி அவைகளுக்கு பூமாலை போட்டு சிறப்பு பூஜைகளை செய்து தான் அருவெருப்பான திரைப்படங்களை கூட தயாரிக்கின்றனர்
இவ்விசயத்தில் கோயில்களை நிர்வகிக்கும் நபர்களும் இதை அறிந்தும் மவுனிகளாக இருக்கும் மதகுருமார்கள் தான் இந்த குற்றத்திற்கான முதல் காரணிகள்
இளைய சமுதாயம் சீர்கெட்டு போகிறதே என்று வருத்தப்பட்டு நாடகமாடுவதை விட
சீர்கெடுக்கும் சூழல்களை கலைந்து சீர்கேடுகளை தயாரிக்கும் பட அதிபர்களை பொது இடத்தில் தூக்கில் தொங்க விட்டால் தான் நாட்டில் ஒழுக்கம் தலைத்தோங்கும்
நண்பர்கள் என்றாலே அவர்கள் மதுபானத்தை ஒன்றாக அருந்தும் கழிசடைகள் தான் என்று ஒவ்வொரு படத்திலும் காட்டப்படும் காட்சிகளில் நடிக்கும் ஈனக்கூத்தாடிகளையும் அதை தயாரிக்கும் பட அதிபர்களையும் சட்டம் இயற்றி தூக்கில் தொங்க விட வேண்டும்
பணத்திற்காக யாருடனும் எப்படி வேண்டுமானாலும் வேசிகளாக தாசிகளாக மனைவியாக மருமகள்களாக மாமியாராக உத்தமிகளாக சத்தியவானிகளாக மாறி மாறி போலியாக நடிக்கும் சினிமா நடிகர் நடிகைகளை ரசிக்கும் மனநோயில் இருந்து நாட்டு மக்கள் மாறாதவரை இந்த அவலம் தொடரும்
நட்புடன் J. இம்தாதி
Comments
Post a Comment