காமுகர் தினம்

       காதலர்  ( காமுகர்) தினம்

<<<<<<•••••••••••••••••••••>>>>>>
            கட்டுரை எண் 1191
                    14-02-18
    ஆக்கம்  J .யாஸீன் இம்தாதி

            ^^________________^^
     Bismillahir Rahmanir Raheem
              ******************

திருமணத்திற்க்கு பின் கணவன் மனைவியை நேசிப்பதும் மனைவி கணவனை நேசிப்பதும் தான் எதார்த்தமான காதல் அவசியமான காதல்

சுருக்கமாக சொன்னால் உடலியல் காமத்தை தாண்டி பல வாழ்கை படித்தரங்களில் கணவன் மனைவிக்கு இடையில் சங்கமிப்பது தான் காதல்  

ஊரே அலங்கோலமாக  கோவனம் கட்டினால் அழகான ஆடை உடுத்தி நடந்து கொண்டிருப்பவனும் அவனது அழகிய நாகரீகமான ஆடையை கழட்டி வீசி விட்டு  அவனது  ஊர் போலவே தானும் கோவனத்தை கட்டி நடப்பது தான் மேன்மை என்று  கருதும் மனப்போக்கு அநேகமான மனிதர்களிடம் காணப்படுகிறது

இது தான் தற்போது இளைய சமுதாயத்தில் அதிகரித்து வருகிறது


பக்குவப்படாத வயதில் படிக்கும் வயதில்  இனக்கவர்ச்சி எனும் காமத்திற்க்கு காதல் என்று ஏமாற்று பெயர் வைத்து கொண்டு

பெற்றோர் உற்றார்கள்  காதில் பூவை சுற்றி விட்டு

முறையில்லாத ஜோடிகளோடு  பார்க் பீச் சினிமா தியேட்டர் என்று ஊர் சுற்றி விட்டு

ஒழுக்க கேடான காரியங்களுக்கு  தூபமும்  போட்டு கொண்டு  அலைவதற்க்கு பெயர் தான் தற்போது கொண்டாடப்பட்டு வரும் காதலர் எனும்  (காமுகர்) தினம்



எப்போதும்  காதலை மையமாக வைத்து தயாரிக்கப்படும்  திரைப்படங்களும்

காதலர் தினத்தில்  இலாபம் ஈட்டும்  வணிகங்களும் 

காதலை தெய்வீகமானது என்றும்

காதலில் வெற்றி பெற யாரை வேண்டுமானாலும் எதிர்க்கலாம் என்றும் 

அது தான் அடிப்படை  தியாகம் என்றும்

காலம் காலமாக இளைய தலைமுறையை  மூளை சலவை செய்கிற காரணத்தால்
வாழ்கையே இது தான் என்று தனது லட்சிய கனவுகளை நாசமாக்கி சிந்திக்க வேண்டிய வயதில் படிக்க வேண்டிய வயதில்  உழைத்து தனது  குடும்பத்தை முன்னேற்ற பாடுபட வேண்டிய வயதில் இளைய தலை முறையினர்கள் இனகவர்ச்சி எனும் மனநோயில் தள்ளாடி அலைகின்றனர்


தேவையான வயதில் தனக்கு  விரும்பியவரை இரு குடும்பத்தார் சம்மதத்தோடும் ஆலோசனையோடும் முறையாக  திருமணத்தின் மூலம் இணைவது குற்றம் இல்லை

அதே நேரம் காதல் பெயரால் பெற்றோர் காதில் பூவை சுற்றி விட்டு ஊர் மேய்வதும் மணிக்கணக்கில் தனிமையில் ஏதோ அதிசய சாதனை நிகழ்த்திவிட்டதாக பூரிப்படைவதும் தனது அந்தரங்க தகவல்களை பரிமாறிக்கொள்வதும் தான் மனித சமூகத்தை சீரழிவின் பக்கம் அழைத்து செல்கிறது



இதன் மூலம் திருமணத்திற்க்கு முன்பே பல ஏமாற்றுதல்களை மனஉளைச்சல்களை இரு சாராரும் அனுபவிப்பதை ஊடகங்களில் அடிக்கடி  கண்டும் திருந்தாதவர்கள் நிச்சயம் அதே போல் பாதிப்புகளை அவசியம் தனது வாழ்விலும் சந்திப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை

       நட்புடன்   J .இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்