தாய்ப்பால்
பெற்றோரின் கவனமின்மையும்
குழந்தைகளின் ஆரோக்யமும்
=======================
<<<<<<•••••••••••••••••••••>>>>>>
கட்டுரை எண் 1189
13-02-18
ஆக்கம் J .யாஸீன் இம்தாதி
^^________________^^
Bismillahir Rahmanir Raheem
******************
பிள்ளைகளுக்கு படிப்பு முக்கியம் என்பதை உணர்ந்ததை போல் அவர்களை வளரும் பருவத்தில் பராமரிப்பது அதை விட முக்கியம் என்பதை பெற்றோர்கள் மறந்து விடக்கூடாது
சில குழந்தைகள் வளரும் பருவத்தில் புத்தி சுவாதீனம் உடையவர்களாக இருப்பதற்க்கு அவர்களின் பெற்றோர்களின் வளர்ப்பு கவனமின்மையே மூல காரணம் என்றே குழந்தை நல ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்
குழந்தைகள் படிப்பில் கவனம் குன்றியவர்களாக இருந்தால் அவர்களை டியூசன் அனுப்ப வேண்டும் என்று பெற்றோர்கள் முடிவு செய்வார்களே தவிர அது தொடர்பான இதர காரணங்களை யோசிப்பது இல்லை
பள்ளி கூடங்களில் நடத்தப்படும் பாடங்கள் அவர்களின் செவிகளில் சரியாக விழுகிறதா
போர்ட்டுகளில் எழுதி போடப்படும் பாடங்களை குழந்தைகளின் பார்வைகள் தெளிவாக பார்க்கும் நிலையில் உள்ளதா
உறங்க வேண்டிய நேரத்தில் வீட்டில் அதிகமாக விழித்திருந்து பாடம் நடத்தும் போது தூக்கத்தில் அவர்களின் கவனம் சிதறுகிறதா
என்றெல்லாம் உன்னிப்பாக கவனிப்பது மிகவும் முக்கியமானது
வளரும் பருவத்தில் குழந்தைகளின் கண் பார்வையும் செவிப்புலனும் சரியாக இயங்காது போனாலும் சிறு பிள்ளைகள் புத்தி சுவாதீனம் உடையோராக வளரும் சூழல் உருவாகும்
இதில் மிகவும் முக்கியமானது தாய்ப்பாலாகும்
தாய்ப்பால் என்பது குழந்தைகளின் பசியை ஆற்றும் பானம் மாத்திரம் அல்ல
மாறாக ஒரு குழந்தையின் உடல் வளர்ச்சிக்கும் சிந்திக்கும் ஆற்றலுக்கும் தாய்ப்பாலே மிகவும் அத்தியாவசியமானது
பசு மாடுகளில் இருந்து கறக்கப்படும் தூய்மையான கலப்படம் இல்லாத பாலை தவறாது தினமும் குழந்தைகளுக்கு கொடுத்தாலும் அந்த பால் ஒரு போதும் குழந்தையின் தாய்ப்பாலுக்கு ஈடாகாது
இளம்பருவத்தில் தாய்பால் கொடுத்தால் இளமையின் கவர்ச்சி வேகமாக குறைந்து விடும் என்று சில அறிவிலிகள் செய்யும் பிரச்சாரத்தை உண்மை என்று நம்பி ஊறும் தாய்ப்பாலை கூட கொடுக்காது மார்பின் பால் சுரப்பிகளை நாசமாக்கி வருகின்றனர்
தாய்ப்பால் கொடுப்பது குழந்தையின் எதிர்காலத்திற்க்கு மட்டும் அல்ல பெண்களின் உடலியல் மென்மை தன்மையை மெருகுபடுத்தும் என்ற உண்மையை மறந்து விட கூடாது
குழந்தை ஒரு பெண்ணிண் கருவில் உருவானது முதல் பெண்களின் மார்பு சுரப்பிகள் தாய்ப்பாலை உருவாக்கும் தகுதியை பெறுகிறது என்பதும் அதற்கான மாற்றத்தை பெறுகிறது என்பதும் தாய்பால் கொடுக்காது போனால் மார்பு வலி இயற்கையிலேயே ஏற்படுவதும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது தாய்மார்களின் முக்கிய கடமை என்பதை (இறைவனே) இயற்கையே விதியாக்கி உள்ளது என்பது தான் உண்மை
சுருக்கமாக சொன்னால் சுரக்கும் தாய்ப்பாலை குழந்தைகளுக்கு தராது மறுப்பது குழந்தைகளுக்கு தாய்மார்கள் செய்யும் துரோகம் இறைவனுக்கு செய்யும் பாவம் என்பதை மறந்து விட வேண்டாம்
===================
இணைந்து வாழும் தம்பதியர்கள் கருத்து வேறுபாடுகளால் பிரிந்து செல்லும் சூழ்நிலையில் கூட குழந்தைகளுக்கு தாய்ப்பாலை கொடுக்க மறுக்க கூடாது என்பதும்
அவ்வாறு தாய்ப்பால் கொடுக்க (கணவனின் மேல் உள்ள வெறுப்பில்) தாய் பாலை கொடுக்க ஊதியம் கேட்டாலும் அந்த ஊதியத்தை கூட விவாகரத்து செய்யும் கணவன் கொடுக்க வேண்டும் என்று இஸ்லாம் தாய்ப்பாலின் அவசியத்தை வலியுருத்தி உள்ளது
وَالْوَالِدٰتُ يُرْضِعْنَ اَوْلَادَهُنَّ حَوْلَيْنِ كَامِلَيْنِ لِمَنْ اَرَادَ اَنْ يُّتِمَّ الرَّضَاعَةَ وَعَلَى الْمَوْلُوْدِ لَهٗ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوْفِ لَا تُكَلَّفُ نَفْسٌ اِلَّا وُسْعَهَا لَا تُضَآرَّ وَالِدَةٌ بِوَلَدِهَا وَلَا مَوْلُوْدٌ لَّهٗ بِوَلَدِهٖ وَعَلَى الْوَارِثِ مِثْلُ ذٰ لِكَ فَاِنْ اَرَادَا فِصَالًا عَنْ تَرَاضٍ مِّنْهُمَا وَتَشَاوُرٍ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا وَاِنْ اَرَدْتُّمْ اَنْ تَسْتَرْضِعُوْٓا اَوْلَادَكُمْ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ اِذَا سَلَّمْتُمْ مَّآ اٰتَيْتُمْ بِالْمَعْرُوْفِ وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ بِمَا تَعْمَلُوْنَ بَصِيْرٌ
(தலாக் சொல்லப்பட்ட மனைவியர், தம்) குழந்தைகளுக்குப் பூர்த்தியாகப் பாலூட்ட வேண்டுமென்று (தந்தை) விரும்பினால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிரப்பமான இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதல் வேண்டும்
தாய்மார்களுக்கு (இஸ்லாமிய சட்டப்படி ) முறைப்படி உணவும், உடையும் கொடுத்து வருவது குழந்தையுடைய தகப்பன் மீது கடமையாகும்
எந்த ஓர் ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் (எதுவும் செய்ய) நிர்ப்பந்திக்கப்பட மாட்டாது
தாயை அவளுடைய குழந்தையின் காரணமாகவோ (அல்லது) தந்தையை அவன் குழந்தையின் காரணமாகவோ துன்புறுத்தப்படமாட்டாது
(குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அதைப் பரிபாலிப்பது வாரிசுகள் கடமையாகும்
இன்னும், (தாய் தந்தையர்) இருவரும் பரஸ்பரம் இணங்கி,(குழந்தையின் உடல் நிலையை) ஆலோசித்துப் பாலூட்டலை நிறுத்த விரும்பினால் அது அவர்கள் இருவர் மீதும் குற்றமாகாது
(தாயின் மார்பில் பால் சுரக்காத நிலையில் )ஒரு செவிலித்தாயைக் கொண்டு உங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்ட விரும்பினால் அதில் உங்களுக்கு ஒரு குற்றமுமில்லை
ஆனால், (அக்குழந்தையின் தாய்க்கு உங்களிடமிருந்து) சேரவேண்டியதை முறைப்படி செலுத்திவிட வேண்டும்
அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்
நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்ப்பவனாக இருக்கிறான் என்பதை அ
றிந்து கொள்ளுங்கள்
(அல்குர்ஆன் : 2:233)
நட்புடன் J .இம்தாதி
Comments
Post a Comment