சத்தியத்தை உடைத்து சொல்

          வீரியமே சத்தியத்தின்

                முதுகெழும்பு

      =======================
     <<<<<<•••••••••••••••••••••>>>>>>
            கட்டுரை எண் 1188
                    10-02-18
    ஆக்கம்  J .யாஸீன் இம்தாதி

            ^^________________^^
     Bismillahir Rahmanir Raheem
              ******************

நன்மைகளை உண்மைகளை  தெளிவாக அழுத்தமாக சொல்ல வேண்டும் என்ற கருத்தில் இருப்போரும் கூட

அவர்கள் கண்ணில் தென்படும் தீமைகளை கண்டு கொள்ளாது இருப்பதும் அல்லது அதன் தீமைக்கு ஏற்ற நிலையில் வலைந்து நெளிந்து  கொடுத்து பேசுவதும்  உண்மையான கோழைத்தனம்


மதுபானம் அருந்தாதீர் என்ற மேலோட்டமான  சொல்லை விட மதுபான கடைகளை குடியிருப்புகளுக்கு இடையில் நிறுவும் போது அதை கடுமையாக எதிர்த்து களம் இறங்குவது தான் தீமையை எதிர்க்கும் சரியான முறையாகும் 

காரணம் மதுபானம் அருந்தும் எவரும் அதை தீமை என்று உணர்ந்தே தான் நடைமுறை படுத்துகின்றனர்

தீ கையை சாம்பலாக்கும் என்று போதனை செய்த பிறகும் அதன் பின்னனியை அறியாத குழந்தைகள் நம் உத்தரவை மீறி தீயின் மீது  கரங்களை வைக்க  சென்றால் அவர்களை அதிலிருந்து மீட்ட மீண்டும் நாம் முயற்சி செய்ய வேண்டும்

அதே நேரம் தீயின் பாதிப்புகளை உணர்ந்தும் தெரிந்தும் வேண்டுமென்றே தனது  கரங்களை தீயின் மீது  ஒருவன் வைத்தால் அவனுக்கு நம் உபதேசம் பயன் அளிக்காது

ஒன்று தீயை அப்புறப்படுத்துவோம் அல்லது அந்த முட்டாள்தனமான காரியத்தை செய்பவனை கண்டிப்போம் தண்டிப்போம்

அறியாமையில் அல்லது நிர்பந்தத்தில்  தவறிழைப்போருக்கு தான் மென்மையான  போதனைகள் பயன் தரும்

அதே நேரம் வேண்டுமென்றே திட்டமிட்டு செய்யும் எந்த ஒரு குற்றத்திற்க்கும் மென்மை போக்குகளை கடை பிடிப்பது  அவனது தீமைகளை தடுக்காது அந்த தீமையிலேயே அவன் நீடிக்க  ஊக்குவிக்கும் என்பதே உண்மை

பொய்களும் அறிவுக்கு முரணான தகவல்களும் பரப்பப்படுவதை கடுமையாக எதிர்த்தால் அந்த பொய்யை பரப்புபவனும் அது போன்றதை இனி மேல் பரப்ப பல முறை யோசிப்பான்  தயங்குவான்

பொய்யான தகவலை பரப்புவோர் நம்  உறவு அல்லது நட்பு என்பதற்காக சமூகவலை தளங்களில்  அவர் பரப்பும் பொய்யான தகவலை அல்லது அறிவியலுக்கும் பகுத்தறிவுக்கும் எதிரான செய்திளை கண்டு கொள்ளாது இருந்தால் அதுவே அவர்கள்  வழிகெட்டு போவதற்க்கும் மூட நம்பிக்கைகளில் தொடர்ந்து  நிலையாக  மூழ்குவதற்க்கும் மூல காரணமாகி விடும்

ஆயிரம் சாக்கு போக்குகளை சொல்லி  தனது தவறான  வாதத்தை அல்லது கொள்கைகளை அல்லது தனது விஷம கருத்துக்களை  ஒருவர்  நிலை நாட்ட முற்பட்டாலும்  நாம் தெளிவாக அழகாக அறிவுப்பூர்வமாக ஆதாரப்பூர்வமாக  சுட்டி காட்டிய செய்திகள் நிச்சயம்  அவரது மனசாட்சியை சுண்டி இழுக்கும் அவரது மனதை நம் தெளிவான கருத்துக்கள் உருத்தவே செய்யும்

அதுவே நாம் போடும் பதிவுகள் அல்லது கண்டனங்கள் நம் எதிரிகளின் சிந்தனையை கூட தட்டி எழுப்பி உள்ளது என்பதற்க்கு தெளிவான ஆதாரம்

இதை நாம் புரியாவிட்டாலும் தனிமையில் நிச்சயம் நம் கருத்தின் நேரடி எதிரிகள் அவசியம் புரிவார்கள்

காரணம் அதுவே சத்தியத்தின் வலிமை

اَلْمُنٰفِقُوْنَ وَالْمُنٰفِقٰتُ بَعْضُهُمْ مِّنْ بَعْضٍ‌ۘ يَاْمُرُوْنَ بِالْمُنْكَرِ وَيَنْهَوْنَ عَنِ الْمَعْرُوْفِ وَيَقْبِضُوْنَ اَيْدِيَهُمْ‌ نَسُوا اللّٰهَ فَنَسِيَهُمْ‌ اِنَّ الْمُنٰفِقِيْنَ هُمُ الْفٰسِقُوْنَ‏ 


நயவஞசகர்களான ஆண்களும்  நயவஞ்சகர்களான பெண்களும்  அவர்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள் தான்

அவர்கள் பாவங்களை தூண்டி நன்மைகளை விட்டும் தடுப்பார்கள்

          (அல்குர்ஆன் : 9:67)

بَلْ نَـقْذِفُ بِالْحَـقِّ عَلَى الْبَاطِلِ فَيَدْمَغُهٗ فَاِذَا هُوَ زَاهِقٌ‌ 


அவ்வாறில்லை! நாம் சத்தியத்தை கொண்டு, அசத்தியத்தின் மீது வீசுகிறோம்

அதனால், (சத்தியம் அசத்தியத்தின் சிரசைச்) சிதறடித்துவிடுகிறது

பின்னர் (அசத்தியம்) அழிந்தே போய்விடுகிறது

       (அல்குர்ஆன் : 21:18)

قَدْ جَآءَكُمْ بَصَآٮِٕرُ مِنْ رَّبِّكُمْ‌ فَمَنْ اَبْصَرَ فَلِنَفْسِهٖ‌  وَمَنْ عَمِىَ فَعَلَيْهَا‌  وَمَاۤ اَنَا عَلَيْكُمْ بِحَفِيْظٍ‏ 


நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஆதாரங்கள் வந்துள்ளன

எவர் அவற்றை (கவனித்து)ப் பார்க்கிறாரோ அது அவருக்கே நன்மையாகும்

எவர் (அவற்றைப்) பார்க்காது கண்ணை மூடிக்கொள்கிறாரோ அது அவருக்கே கேடாகும்

நான் உங்களைக் காப்பவன் அல்ல

(என்று இறைதூதரே! நீர் கூறும்)

          (அல்குர்ஆன் : 6:104)

        நட்புடன்   J .  இம்தாதி




Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்