உயிரும் உண்மையும்

 
           உயிரும் உண்மையும்
             
     =======================

     <<<<<<•••••••••••••••••••••>>>>>>
            கட்டுரை எண் 1187
                    05-02-18
    ஆக்கம்  J .யாஸீன் இம்தாதி

            ^^________________^^
     Bismillahir Rahmanir Raheem
              ******************

நாற்பது வயதை அடைந்த ஒரு மனிதனிடம்

நாற்பத்தி  இரண்டு வருடம் முன்பு நீ  எங்கிருந்தாய் என்று கேட்டால்

அதற்க்கும் கூட தெளிவான பதிலை அந்த மனிதனால் சொல்ல முடியாது

பாசத்தோடு கை குழந்தையை அரவணைத்துள்ள தாயிடம் இந்த குழந்தை எப்போது எந்த நாள் அல்லது எந்த நிமிடம் உங்கள் கருவில் உருவாக துவங்கியது என்று கேட்டால் அதற்க்கும் கூட தெளிவான பதிலை அந்த தாயால் சொல்ல முடியாது

நீங்கள் எந்த தேதியில் எந்த கிழமையில் எந்த நிமிடத்தில் மரணத்தை சந்திக்க போகிறீர்கள் என்று எந்த மனிதனிடம் கேட்டாலும் அதற்க்கும் எவராலும் தெளிவான உறுதியான  பதிலை சொல்ல முடியாது

உங்கள் உடலில் உயிர் என்ற ஆன்மா எந்த இடத்தில் என்ன நிறத்தில் என்ன எடையில்  எந்த சுவையில் அமைந்துள்ளது என்று கேட்டாலும் எந்த மனிதனாலும் தெளிவான பதிலை சொல்ல முடியாது

பல்லாயிரம் கோடி கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கிரகங்களுக்கு அறிவியல் சாதனங்களை அனுப்பி அவைகளை  வேவு பார்க்கும் மனிதனுக்கு அவனது உடலில் எந்நேரமும் ஒட்டி உள்ள உயிரை பற்றிய எந்த ஞானமும் இது வரையிலும் கண்டு பிடிக்கப்படவில்லை

இனியும் பல ஆண்டுகள் கடந்தாலும் அதை பற்றிய ஞானம் இதே நிலையில் தான் இருக்கும்

அப்படியானால் அந்த உயிரை தந்தவன் யார்  ?

இயற்கை தான் நமக்கு உயிரை தந்தது என்று குருட்டு நாத்தீகம் பேசினால் அந்த இயற்கைகே அழிவுகள் தொடர்ந்து வருவது ஏன்  என்பதற்க்கான விளக்கம் என்ன ?

மனிதனின் குறுகிய பார்வையில் தான் இவைகள் யாவும் இயற்கை

ஆனால் அவைகளை படைத்த இறைவனின் பார்வையில் இவை யாவுமே செயற்கை தான்

செயற்கையாக உருவாக்கப்படும் எந்த ஒன்றுக்கும் காரணங்கள் இருக்கும்

அதே போல் இறைவனால் செயற்கையால் உருவாக்கப்பட்ட உயிர்களுக்கான காரணங்கள் என்ன ?

இதை போதிக்கவே இவ்வுலகில் இறைதூதர்கள் அனுப்பப்பட்டார்கள்

அந்த மெய்யான இறைதூதர்கள் யார் ?

அவர்கள் மனித சமுதாயத்திற்க்கு சொல்லி தந்த போதனைகள் என்ன? என்பதை கண்டறியவே இறைவனால் மனிதனுக்கு வழங்கப்பட்டது தான் பகுத்தறிவு

அந்த பகுத்தறிவுக்கு யாருடைய சொற்கள்  பொய்யாகவும் வாழ்வியல்  நடைமுறைக்கும் இயற்கை அமைப்புக்கும்  சாத்தியம் இல்லாததாகவும் முரண்பட்டதாகவும் நகைப்புக்கு உரியதாகவும் எதிர் கேள்விகளுக்கு விளக்கம் சொல்ல இயலாததாகவும்  இருக்கிறதோ அவர்களே போலி மதகுருமார்கள்
போலி ஆன்மீகவாதிகள்

கடவுளால் அனுப்பப்பட்ட எந்த இறைதூதர்களும் தன்னையே கடவுளாக வணங்குமாறு கட்டளை போட மாட்டார்கள்

ஆன்மீகத்தின் பெயரை சொல்லி தங்களது வாழ்கை வளத்தை மேம்படுத்தி கொள்ள மாட்டார்கள்

நீங்கள் வேறு நான் வேறு என்று வெளித்தோற்ற உடையாலும் வித்தியாசமான  நடையாலும் போலியாக நடிக்க மாட்டார்கள்

அத்தகையவர்களை கண்டறிய பயங்கரமான  ஞானங்கள் தேவை இல்லை

உலகில் இருக்கும் வேதங்களே போதுமானது

அந்த வேதங்களில் எது பாதுகாப்பாகவும்  மனித கரங்களால் மாசுபடுத்த முடியாததாகவும் மனித வாழ்கைக்கு தீர்வு சொல்லும் விதமாகவும் அமைந்துள்ளதோ அதுவே இறைவேதம் இறைவனால் அனுப்பப்பட்ட  இறைதூதர்கள் சொன்ன வேதம்

அவ்வகையில் திருமறை குர்ஆன் மனித சமுதாயத்திற்க்கு பல அறைகூவல்களை விடுகிறது

சற்று நேரம் ஒதுக்கி அந்த வேதத்தின் வரிகளை  சிந்தியுங்கள் அப்போது  அறிவில் மாற்றம் ஏற்படும்

அவ்வாறு ஏற்பட்டால் அதை ஏற்று கொள்ளுங்கள் இல்லாவிட்டால் திருக்குர்ஆனையும்  புறக்கணியுங்கள்

அது அவரவர் சுய விருப்பம்

كَيْفَ تَكْفُرُوْنَ بِاللّٰهِ وَڪُنْتُمْ اَمْوَاتًا فَاَحْيَاکُمْ‌ ثُمَّ يُمِيْتُكُمْ ثُمَّ يُحْيِيْكُمْ ثُمَّ اِلَيْهِ تُرْجَعُوْنَ‏ 

நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்

பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்

மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்

இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்

           (அல்குர்ஆன் : 2:28)

اَفَلَا يَتَدَبَّرُوْنَ الْقُرْاٰنَ اَمْ عَلٰى قُلُوْبٍ اَ قْفَالُهَا‏ 


மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா?

    
(அல்குர்ஆன் : 47:24)

           நட்புடன் J .இம்தாதி

    

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்