ஆன்மீக அரசியலும் நபிகளாரும்

நடிகர் ரஜினியின் ஆன்மீகஅரசியல்
     எனும் வார்த்தைக்கு நிகரில்லாத

   முன்னோடியே நபிகள் நாயகம்

       (ஸல் )அவர்கள் மட்டுமே

    =×=×=×=×=×=×=×=×=×=×=×=×=
      ^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^
              02-01-18 செவ்வாய்
                -----------------------------
                 J. யாஸீன் இம்தாதி
                         !+++++++++!
                   கட்டுரை எண் 1178
          *****************************

அரசியல் என்றாலே சாக்கடை என்று அதை குறிப்பிடும் அளவு தற்போதைய அரசியல் சூழ்நிலை மாறி விட்டது

திருடர்களும் கொள்ளையர்களும் அடக்கு முறை செய்வோரும் தான் அரசியலில் இடம் பெற முடியும் என்றே தற்போது மாறி விட்டது

இத்தகைய சூழ்நிலையில் அரசியல் பிரவேச அறிவிப்பை செய்துள்ள

               நடிகர் ரஜினிகாந்த்

நான் ஆன்மீக அரசியலை கொண்டு வர போகிறேன் என்று அறிக்கை செய்துள்ளார்

அவர் கூறியுள்ள வார்த்தைகளில் ஆன்மீக அரசியல் என்ற வார்த்தை உண்மையில் அழகானது

ஆன்மீக அரசியல் என்ற வார்த்தையை நடிகர் ரஜினிகாந்த் எந்த நோக்கத்தில் சொன்னார் ?அதை எந்த விதத்தில் மக்களும் அரசியல் விமர்சகர்களும் புரிந்துள்ளார்கள் என்பது தனி விசயம்


அதே நேரம் ஆன்மீக அரசியல் என்றால் என்ன ? அதை எவ்வாறு செயல் படுத்த முடியும் என்பதை நடிகர் ரஜினிகாந்தே சரியாக புரிந்து கொள்ளவில்லை


காரணம் ஆன்மீகம் என்றால் என்ன என்பதை நடிகர் ரஜினிகாந்தே இன்று வரை சரியாக புரிந்து கொள்ளவில்லை

அவர் விளங்கி வைத்துள்ள ஆன்மீகம் வருடத்திற்க்கு ஒரு முறை இமயமலை அடிவாரத்திற்க்கு சென்று தியானம் செய்வது தான்


கோடிகணக்கான சொத்துகளுக்கு உரிமை பட்ட நடிகர் ரஜினிகாந்த் அந்த சொத்துக்களின் மூலம் எதை வேண்டுமானாலும் வாங்க இயலும் என்ற சூழ்நிலையில் அவர் விரும்பும் மனஅமைதியை இமயமலை அடிவாரத்திற்க்கு சென்று தான் அவரால் கூட பெற முடியும் என்று நம்பும் சூழ்நிலையில்

அவர் கூறும் ஆன்மீக அரசியலை ஏற்று கொண்டு அவருக்கு நாட்டு குடிமக்கள் வாக்களித்தால் அவரை நம்பிய குடிமக்களுக்கு அவர் எப்படி நிம்மதியான வாழ்கையை தர இயலும் ?

உண்மையில் ஆன்மீக அரசியல் என்ற வார்த்தைக்கு சரியான பொருள் என்னவென்றால் முறையாக இறை நம்பிக்கையை ஏற்று கொண்டு அந்த இறைவனை அஞ்சி தனது பொருப்பிலும் அதிகாரத்திலும் நீதியாக நேர்மையாக ஒழுக்கமுள்ளவராக வீரனாக விவேகம் உள்ளவராக ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இன்றி தர்மத்தை நிலை நிறுத்தி தர்மத்திற்க்கு எதிரான அத்தனை அக்கிரமங்களையும் முடக்கி அக்கிரம் புரிவோரை முறையாக தண்டித்து நல்லோர்கள் அச்சமின்றி வாழ வைக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுப்பது தான் உண்மையில் ஆன்மீக அரசியல்

இந்த ஆன்மீக அரசியலுக்கு உலகில் முன்னோடியாக அவர் எடுத்து கொள்ள வேண்டிய மாமனிதர்


நபிகள் நாயகம்( ஸல்) அவர்களின்

          ஆட்சி முறை தான்

ஆன்மீகத்திற்க்கு வழிகாட்டியாக இருந்து கொண்டே அரசியலுக்கும் முன்னோடியாக விளங்கியவர் நபிகள் நாயகம் ( ஸல்) அவர்கள் மட்டுமே என்பது வரலாற்று உண்மை


பல சொத்துக்களுக்கு உரிமை பட்ட நிலையில் அரசியலில் பிரவேசம் செய்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது அரசியல் காலங்களில் தனது பொருளை குடிமக்களுக்கு வாரி கொடுத்தே ஏழ்மையாகி போன உத்தமர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டுமே

நபிகள் நாயகம்( ஸல்) அவர்கள் அரசியல் சாணக்யனாக இருந்தது முதல் பதினான்கு நுற்றாண்டு கழிந்து விட்ட பிறகும் ஏன் இன்று வரை அவருடைய பெயரிலோ அவருடைய பிள்ளைகளின் பெயரிலோ அவருடைய சந்ததிகளின் பெயரிலோ ஒரே ஒரு சொத்து பத்திரமும் கூட உலகில் இல்லை


ஏன் அவருடைய மரண நேரத்தில் கூட அவரது குடும்பத்திற்காக ஒரு படியின் எடை அளவு கோதுமையை வாங்குவதற்க்கு யூத சமூகத்தை சார்ந்த ஒரு குடிமகனிடத்தில் தனது கவசத்தை அடைமானம் வைத்து அந்த அர்ப்ப கவசத்தை கூட மீட்ட முடியாமல் கடனாளியாகவே மரணத்தை சந்தித்தவர் மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள்

உலகில் குடிமக்களின் வறுமையை முற்றிலும் ஒழித்து அதற்க்கு மூல காரணமாக உள்ள வட்டியை தடை செய்து ஏன் அவருடைய ஆட்சியில் குடிமக்களில் ஒருவர் கடனாளியாக மரணித்து விட்டால் கூட அவருடைய கடனை எனது அரசாங்கமே ஏற்க்கும் என்று உலகில் இது வரை எந்த அரசாங்கமும் செய்ய இயலாத ஒரு பொது அறிவிப்பும் செய்து நாட்டின் பொருளாதாரத்தை உச்சியில் கொண்டு வந்த நபிகள் நாயகத்தின் ஆன்மீக அரசியல் அவருடைய குடும்பத்தை மாத்திரம் வறுமையில் தள்ளிய வரலாறே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வரலாறு


பதி மூன்று ஆண்டு காலம் அக்காலத்தில் உலக வல்லரசுக்கு அதிபதியாக இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆட்சியில் வன்முறைகளோ கற்பழிப்புகளோ தற்கொலைகளோ வழிப்பறி கொள்ளைகளோ நடைபெற்றதாக ஒரு வரலாறு இல்லை அவ்வாறு நடை பெற்ற அரிதிலும் அரிதான சில சம்பவங்களில் குற்றவியல் சட்டத்தை தாட்சன்யம் இன்றி நடைமுறை படுத்தி குற்றவாளிகள் குலை நடுங்கும் விதமாகவும் நல்லோர்கள் நிம்மதியாக வாழும் பூங்காவாகவும் தனது நாட்டையே மாற்றி அமைத்து ஆன்மீக அரசியலுக்கு முன்னுதாரணமாக விளங்கியவர் மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள்



மக்களின் வரிப்பணத்தை நாசமாக்கி இறந்தவர்களுக்கு சமாதிகளை எழுப்பிய சம்பவங்களோ பயனற்ற மணிமண்டபங்களை எழுப்பிய சம்பவங்களோ ஒழுக்க கேடுகளை ஊக்குவிக்கும் காரணிகளை ஊக்க படுத்திய சம்பவங்களோ கடுகளவும் அவரது ஆட்சியில் இல்லை என்பது தான் நபிகள் நாயகம்( ஸல்)அவர்களின் ஆன்மீக அரசியல்


உயிரோடு இருக்கும் போதே தனக்கு மெழுகு சிலை அமைத்து அதை ரசிக்கும் அரசியல்வாதிகளுக்கு மத்தியில்

தனது பெயரால் விழா எடுக்க கூடாது

தனது காலில் விழ கூடாது

வரம்பு மீறி தன்னை புகழ கூடாது

தனது புகழை எடுத்து கூற பிற தலைவர்களை அவமதிக்க கூடாது
இழிவு படுத்த கூடாது

என்றெல்லாம் சுய கொள்கையை வடித்து அதில் இம்மி அளவும் மாறாமல் முரண்படாமல் ஆன்மீகத்திலும் அரசியலிலும் சாணக்யனாக வாழ்ந்து காட்டியவர் மாமனிதர் நபிகள் நாயகம்( ஸல்)அவர்கள்

பதிமுன்று வருட காலம் நபிகள் நாயகம் (ஸல்)அவர்களின் ஆட்சியை எதிர்த்து அந்நாட்டில் வாழ்ந்த குடிமக்கள் ஒன்றிணைந்தோ அல்லது தனி குழுக்களாக இருந்து கொண்டோ ஒரே ஒரு சிறு ஆர்ப்பாட்டமோ போராட்டமோ உண்ணாவிரதமோ ஏன் பொது கூட்டமோ அல்லது கண்டன கூட்டமோ நடத்தியதாக ஒரு துணுக்கு செய்தியும் கூட நபிகள் நாயகம் (ஸல்)அவர்களின் வாழ்விர் இல்லை என்று சொல்லும் அளவு ஆன்மீக அரசியலை உலகுக்கு வழிகாட்டி சென்றவர் மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டுமே


முகம் அறியாத ஒருவர் இன்று உலகில் வாழும் கோடிக்கணக்கான இஸ்லாமிய இதயங்களில் நல்லோர்களின் இதயங்களில் யாரை விடவும் மேலான இடத்தில் நிகரில்லா வழிகாட்டியாக வாழ்ந்து கொண்டுள்ளார் என்றால் அது நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் மட்டுமே


இறைவனை நம்பி அவன் அருள் வேண்டி உலகில் வாழ்வதே ஆன்மீகம் என்ற சிந்தனையை தாண்டி

வாழும் போது தவறு செய்தால்

அக்கிரமம் இழைத்தால்

மனிதர்களுக்கு சங்கடங்களை ஏற்படுத்தினால்

அதிகார பலத்தால் வரம்பு மீறி நடந்தால்

நம் மரணத்திற்க்கு பின் மீண்டும் ஒரு நாள் இறைவன் நம்மை எழுப்பி கேள்வி கேட்பான் என்றும்

அதற்க்கு கடுமையாக தண்டனை தருவான் என்றும் உலக வாழ்வில் அடக்கத்துடன் இறையச்சத்துடன் நடப்பதே ஆன்மீகம்

அதன் அடிப்படையில் ஆட்சி புரிவதே ஆன்மீக அரசியல்

        ++++++++++++++++++

2200. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் ஒரு யூதரிடம் தம் கவசத்தை அடைமானம் வைத்து உணவுப் பொருளைக் கடனாக வாங்கினார்கள்

               நூல் ஸஹீஹ் புகாரி

                    +++++-+++-++

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்