மொழிகளும் இறைவனின் சாட்சியே
மொழிகளின் சிந்தனையே
இறைவனின் சான்று தான்
ஆக்கம் J . யாஸீன் இம்தாதி
♦√♦√♦√♦√♦√♦√♦
Bismillahir Rahmanir Raheem
★---★---★---★
மொழிகள் ++++++ உலகில் தற்போது உயிருடன் உள்ள மொழிகள் 6760 ஆகும்
இதில் இந்தியாவில் மட்டும் 1670 மொழிகள் பேச்சு வழக்கில் உள்ளன
இதில் மூலமொழிகளும் உண்டு அந்த மொழிகளை தழுவிய நூற்றுக்கணக்கான கலவையான மொழிகளும் உண்டு
**********************
மொழிகள் எதற்க்கு ?
---------------------
ஒரு மனிதன் தன் கருத்தை பிறரிடம் கூறவும் கேள்விகளாக கோரவும் பயனபடுவது மட்டுமே மொழியாகும்
++++++++++++++++
விந்தை
-------
ஒரு மொழியை தாய் மொழியாக கொண்ட எவரும் அம்மொழியை கற்பதற்க்கும் அல்லது அதை தனது சந்ததிக்கு பிசகாது கற்றுக் கொடுப்பதற்க்கும் நூறு சதம் முயற்ச்சி செய்வது இல்லை
ஒரு மொழியின் இலக்கணம் கற்காதவர்களும் அந்த மொழியை பேசுவதற்க்கு சிரமப் படுவதில்லை
ஒரு சில வார்த்தைகளை தான் தனது பிள்ளைகளுக்கு சிறு பருவத்தில் தாய் கற்றுக் கொடுக்கின்றாளே தவிர
ஒரு எழுத்தை தொண்டை குழியில் அல்லது நாவின் இந்தப் பகுதியில் இருந்து தான் வெளிப்படுத்த வேண்டும் என்றும் கற்றுத்தருவதும் இல்லை அதை கற்றுக் கொடுக்கும் திறமையும் பெரும்பாலான பெற்றோருக்கும் இல்லை
ஆனாலும் அம்மொழியை மனிதன் சரளமாக பேசுவது எப்படி?
++++++++++++++++++
அறிவு தடுமாறும் நிலை
-----------------------
மேலும் கீழும் உள்ளும் புறமும் நாவுகள் அசையும் பொழுது தான் மொழிகள் ஜனிக்கின்றது
இதில் ஆங்கிலம் பேசுபவனும் தமிழ் பேசுபவனும் தெலுங்கு பேசுபவனும் எம்மொழி பேசுபவனும் தனது நாவுகளை இம்முறையில் தான் அசைக்கின்றான்
இதில் பல மொழிகளின் உதிப்பு எப்படி எந்த முறையில் ஒரே அமைப்பு உள்ள மனிதனின் நாவில் மாறுபட்டு வெளியாகின்றது ?
அனைத்து மொழிகளின் பிறப்பிடமும் நாவு தான் எனும் போது இதில் நான் பேசும் மொழி தான் மேலானது என்று வாதிடுவதில் என்ன நியாயம் உள்ளது?
இது எந்த அறிவாலியாலும் அறிவியலாலும் பதில் கூற முடியாத கேள்வியாகும்
----------------------------------------
மூடத்தனம்
*********
மொழிகளை வைத்து மனித சமூகத்தில் பிரிவினைகளை உயர்வு தாழ்வுகளை கற்பிப்பதில் என்ன அறிவார்த்தம் அடங்கியுள்ளது
ஆங்கிலம் தெரியாத ஒருவனை தாழ்ந்தவன் என்று சொன்னால் அமெரிக்காவில் பிறந்து அம்மொழியை தாய் மொழியாக கொண்ட ஒருவன் கழிவறையை சுத்தம் செய்யும் கீழ்நிலை வேலையை பார்த்தாலும் அவனை உயர்ந்தவன் என்று சொல்வார்களா ?
-----+++++++------
குறுக்குக் கேள்வி
-------------
நாவு இருப்பதால் தான் மனிதன் பேசுகின்றான் என்று இறைவனை மறுப்போர் வாதிட்டால் மனிதனின் நாவை விட பெரிய நாவை பெற்றுள்ள எறுமை மாடுகளும் பிற உயிரினங்களும் ஏன் பேசுவதில்லை ?
இதற்க்கு விடை தெரியாத ஒருவன் இறைமறுப்பாளனாக இருப்பதில் என்ன நியாயம் ?
------++++++--------
படிப்பினை என்ன?
**********
இது போல் விடை தெரிய முடியாத கேள்விகளுக்கு பதில் தேடி அலைவதை விட இந்த ஆற்றலை மனித உடலுக்கு வழங்கிய இறைவனை மட்டுமே துதிப்போம் அவனுக்கு நன்றி உணர்வோடும் இருப்போம் என்ற மனப்பக்குவத்தை படிப்பினையை பெறுவோரே தெளிவான முதிர்ச்சிபெற்ற சிந்தனைவாதியாக இருக்க முடியும்
يَوْمَ تَشْهَدُ عَلَيْهِمْ أَلْسِنَتُهُمْ وَأَيْدِيهِمْ وَأَرْجُلُهُم بِمَا كَانُوا يَعْمَلُونَ
அல்குர்ஆன் 24:24
அந்நாளில் அவர்களுடைய நாவுகளும், அவர்களுடைய கைகளும், அவர்களுடைய கால்களும் அவர்களுக்கெதிராக, அவர்கள் செய்ததை பற்றி சாட்சியம் கூறும்
وَمِنْ آيَاتِهِ خَلْقُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافُ أَلْسِنَتِكُمْ وَأَلْوَانِكُمْ ۚ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِّلْعَالِمِينَ
அல்குர்ஆன் 30:22
மேலும் வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும் உங்களுடைய மொழிகளும் உங்களுடைய நிறங்களும் வேறுபட்டிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் கற்றரிந்தோருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன
நட்புடன் J . இம்தாதி
Comments
Post a Comment