புத்தாண்டு

   2018 புத்தாண்டின் பலன்

   குடித்து விட்டு கும்மாளம்  

*************************** ^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^
       02-01-18 செவ்வாய்
          -----------------------------
         J. யாஸீன் இம்தாதி
              !+++++++++!
        கட்டுரை எண் 1177
                                   بسم الله الرحمن الرحيم

        *****************************

சென்ற 2017 ஆண்டு புத்தாண்டில் தமிழகத்தில் 175 கோடிக்கு மதுபானம் விற்றது என்பதே சகிக்க முடியாத ஒன்றாக இருந்தது

ஆனால் 2018 இந்த ஆண்டு புத்தாண்டில் 212 கோடியை தாண்டி தமிழகத்தில் மது பானம் விற்பனை கலை கட்டியது என்று இன்றைய செய்தியில் சொல்லப்பட்டுள்ளது

புத்தாண்டை முன்னிட்டு ஆண்களும் பெண்களும் கும்மாளம் போட்டு ஆடுவதிலும் மதுபான போதையில் மூளை இழந்து தள்ளாடுவதிலும் தான் முன்னேற்றம் அடைந்துள்ளனர்


புத்தாண்டு தினத்தில் ஆடைகளை தூய்மையாக அணிந்து கொண்டு அதில் நறுமணம் கமழும் பல வாசனை திரவியங்களை தடவி கொண்டு ஊர் சுற்றும் இவர்கள் எப்போதும் தூய்மையாக வைக்க வேண்டிய தங்களது வாய்களை மட்டும் மதுபானம் அருந்தி குப்பை தொட்டியை விட அதிகம் நாற்றம் பிடித்த ஒன்றாக ஆக்கி கொண்டு சுற்றுவதே வருடா வருடம் புத்தாண்டு ஏற்படுத்தியுள்ள சமூக(?) மாற்றம்


உழைப்பதும் புத்தாண்டு போன்ற விசேஷ தினங்களை வாடிக்கையாக கொண்டாடுவதும் மதுபானம் குடிப்பதற்க்கு தான் என்ற அவல நிலையே தற்போது ஏற்பட்டு விட்டது

வெளித்தோற்றத்தில் அழகாக சுற்றும் பல இளம்பெண்களும் கூட அவர்கள் அருகில் செல்லும் போது கழிவறையை விட மோசமான துர்வாடை உடையவர்களாக மதுபான பிரியர்களாக மாற்றி அமைத்த பெருமை புத்தாண்டு கொண்டாட்டத்தையே சாரும்


சடங்குக்காக புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று அர்த்தமற்ற பதிவுகளை சமூக வலைதளங்களில் போடும் ஒவ்வொருவரும் இந்த நிலையை பார்த்து இதற்காகவா ? நாம் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு பண்டிகைகளுக்கும் புத்தாண்டுக்கும் நல்வாழ்த்து பதிவுகளை போட்டு கொண்டுள்ளோம் என்று நினைத்து வெட்கி தலை குனிய வேண்டும்



கேடு கெட்ட மதுபோதையில் மூளை இழந்து நம் நாட்டு குடிமக்கள் சுற்றும் வரை மதுக்கடைகளை முன்நின்று நடத்தும் எந்த தரிகெட்ட அரசாங்கங்களும் ஒரு நாளும் திருந்த போவது இல்லை


காரணம் பம்பாய் கல்கத்தா போன்ற தொழில் நகரங்களில் நாய்களுக்கு லைசன்ஸ் கொடுப்பதை போல் விபச்சார விடுதிகளுக்கு லைசன்ஸ் கொடுத்து அதன் மூலம் வரும் கேவலமான வரிப்பணங்களை வைத்தும் நாட்டுக்கு திட்டங்களை தீட்டுபவர்கள் தான் நம் நாட்டு அரசாங்க அதிபதிகள்


புனிதர் இயேசு பிறந்த நாளை அதாவது புத்தாண்டை ஒட்டி அநேகமானோர் குடித்து விட்டு அரைகுறை ஆடையோடு பார்க்குககளிலும் பீச்சுகளிலும் நட்சத்திர ஹோட்டல்களிலும் கும்மாளம் போடுவதும் ஒழுக்க கேடான காரியங்களை நடை முறை படுத்துவதும் தான் இயேசுநாதருக்கு இந்த தியாகிகள்(?)செய்யும் நன்றி கடன் சமூக சேவை

இவர்களில் எவரும் கிருஸ்தவ மதத்தின் இயேசுவை புனிதர் என்று சொல்வதற்க்கு துளி அளவு கூட அருகதை இல்லாதவர்கள் இது போன்ற ஒரு கேடுகெட்ட புத்தாண்டு விழாவுக்கு சிறப்பு பூஜையும் வழிபாடும் நடத்தும் கோயில்களினின் நிர்வாகிகளும் இந்து மதத்தின் துரோகிகளே பாவிகளே குற்றவாளிகளே


விழாவானாலும் திருமண நிகழ்ச்சியானாலும் சுற்றுலா செல்வதாக இருந்தாலும் நட்புக்காக நான்கு நபர்கள் ஓர் இடத்தில் ஒன்று கூடுவதாக இருந்தாலும் மதுபான பார்ட்டி இல்லாமல் ஏதும் இல்லை என்று ஒவ்வொரு படத்திலும் காட்சிகளாக காட்டி சிறுவர்களை கூட மதுபான பிரியர்களாக மாற்றும் கழிசடை சினிமா கூத்தாடிகள் தயாரிப்பாளர்கள் அதற்க்கு அனுமதி வழங்கும் சினிமா தணிக்கை குழுவினர்கள் அனைவருமே மரண தண்டனை குற்றவாளிகள் தான்



பகுத்தறிவு இல்லாத ஆடு மாடு பன்றி நாய்கள் கூட மதுபானத்தை நேசிப்பது இல்லை மதுபான கடைகளில் ஒன்று கூடுவதும் இல்லை

ஆனால் இருபத்தி ஒன்றாம் அறிவியல் நூற்றாண்டில் வாழும் பகுத்தறிவு உள்ள மனிதன் தான் தனது மனைவியை விட மதுவை நேசிக்கிறான்

தனது கணவன் பிள்ளைகளை விட மதுவை நேசிக்கிறாள்

மதுவை தொடராக அருந்தி அதன் மூலம் ஆண்மை பலவீனப்பட்டு தன்னை நம்பி வாழும் மனைவியர்களின் உடல் உணர்ச்சிகளுக்கு கூட மதிப்பளிக்காத வக்கற்ற இவர்கள் தன்னை ஆண்மையுள்ளவன் என்று வெளி உலகில் காட்டி கொள்வது அனைத்தும் போலியானவை

ஆரோக்யம் தரும் ஒரு பாட்டல் தேனை குழந்தைகளுக்கு வாங்கி தர பல முறை யோசிக்கும் மனிதன் கழிவறையிலும் கூவத்திலும் கொட்ட வேண்டிய கழிவு நீருக்கு விஸ்கி என்றும் பிராந்தி என்றும் உயர்ரக மதுபானம் என்றும் பெயர் சூட்டி கொண்டு அதை வாங்கி அருந்த ஒரு முறை கூட யோசிப்பது இல்லை

இவர்கள் தான் மனித சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட வேண்டிய கீழ்நிலை மக்கள்

               நட்புடன் J.இம்தாதி

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْاَنْصَابُ وَالْاَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطٰنِ فَاجْتَنِبُوْهُ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏ 

ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்

ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் அதனால் நீங்கள் வெற்றி அடைவீர்கள்

          (அல்குர்ஆன் : 5:90)

                        முற்றும்

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்