பகுத்தறிவு

             ஈ .வெ .ரா .பெரியார் கொள்கை

                   தெளிவும் குழப்பமும்

      ============================
            17-01-18 --- புதன்கிழமை
                 ----------------------------
                   J யாஸீன் இம்தாதி
                       --------------------

கொள்கையில் துணிவும் தெளிவும் முரண்பாடின்மையும் அசத்தியத்திற்க்கு வலைந்து கொடுக்காத துணிச்சலும்  இறைவனால் அனுப்பபட்ட தீர்க்கதரிசிகளிடம் தான் காணப்படும்

அதே நேரம் புரட்சிகரமான கருத்தை யாருக்கும் அஞ்சாது சொல்லிய பல புரட்சியாளர்களும் உலகில் உண்டு

அவ்வகையில் தமிழகத்தில் மாபெரிய புரட்சிக்கு வித்திட்டு சென்றவர்

           ஈ.வெ.ரா பெரியார்

என்பது மறுக்க முடியாத உண்மை

பெரியாருக்கு முன்னால் தமிழகத்தின் நிலை என்ன என்பதை அறியாத மக்களுக்கு பெரியாரின் தியாகங்களும் புரட்சிகளும் அறியும் ஞானம் மிக குறைவாகவே இருக்கும்

காரணம் பெரியார் என்பவர் மதங்களுக்கு விரோதி என்றும் குறிப்பாக இந்து மதத்திற்க்கு விரோதி என்று பரவலாக பிரச்சாரம் செய்யப்படுகிறதே தவிர

பெரியாரே இந்து சமூகத்தை சார்ந்த பெற்றோர்களுக்கு பிறந்தவர் என்பதையும்

மத ரீதியான அவருடைய மறுப்பு கொள்கைக்கு இந்து மதத்தின் வர்ணாசிரம கொள்கைகள் தான் அடிப்படை காரணம் என்பதை திட்ட மிட்டு மூடிமறைக்கின்றனர்

மனிதன் என்ற முறையில் அனைவரும் சமம் இதில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் கீழ்ஜாதி மேல்ஜாதி என்ற பேதமையை மதகுருமார்கள் தான் எற்படுத்தினார்கள் என்பதை மறுக்க முடியாத வாதங்களை வைத்து நிரூபித்தார்

மேல்ஜாதியினர் வசிக்கும் தெருவில் நாய்களும் பன்றிகளும் நடமாடலாம் ஆனால் கீழ்ஜாதி என்று ஒதுக்கி வைக்கப்பட்ட மனிதர்கள் நடமாட கூடாது என்று அதை பல நூற்றாண்டுகாலமாக நடைமுறை படுத்தி வந்த கோட்பாட்டை தகர்த்தெரிந்து புரட்சியை ஏற்படுத்தியவர் பெரியார்

கீழ்ஜாதி பெண்கள் தங்கள் மார்ப்பு பகுதியை மறைக்க கூடாது என்றும் அவ்வாறு மறைப்பதாக இருந்தால் அதற்க்கும் கூட வரி கட்ட வேண்டும் என்று கூறி

           முலை வரி (மார்பு வரி)

என்று சட்டமும் போட்டு அதை பல நூற்றாண்டு காலமாக நடைமுறை படுத்தியும் ரசித்தும் வந்த மேல்ஜாதியினரின் அடிமை சட்டத்தை எதிர்த்து கீழ்ஜாதி பெண்ணிண் மார்பை மறைத்து கண்ணியம் தேடி தந்தவர் பெரியார்

இது போன்ற வரலாற்று உண்மைகளை அறியாமல் ஈ வெ ரா பெரியாரை விரோதியாக சித்தரிக்கும் ஒவ்வொருவரும் தன்னை கீழ்ஜாதி என்று ஒப்பு கொண்டு அதன் பிறகு அவரை குறை பேசட்டும்
அது தான் நியாயம்

அவரவர் வீட்டில் இருக்கும் பெண்களின் ஜாக்கெட் மாராப்புகளை அவிழ்த்து மேலாடை இன்றி நிர்வாணமாக குடும்ப பெண்களை அலைய விட்டு அதன் பின்பு அவரை குறை பேசட்டும் அது தான் நியாயம்

அவரின் தியாகத்தின் மூலம் பெற்ற சுதந்திரத்தை கண்ணியத்தை அனுபவித்து கொண்டே அவரை எதிர்த்து பேசுவோரை விட நன்றி கெட்ட ஜென்மங்கள் எவரும் இருக்க இயலாது

            +++++++++++++++++++ ஆன்மீகத்தின் பெயரால் அட்டூழியங்களும் அக்கிரமங்களும் பித்தலாட்டங்களும் நடக்கிறது என்று சொன்னால்  அதை வெறுத்த பெரியார்

எந்த ஆன்மீகம் சிறந்தது ?வாழ்கைக்கு உவந்தது  ? என்று சிந்தித்து இருக்க வேண்டுமே தவிர

அதற்காக அறிவுக்கு முரண்பட்ட நாத்தீக கொள்கையை ஆதரித்து பேசியது
ஈ வெ ரா பெரியாரின் குற்றம் அறியாமை

ஜாதிக்கொடுமையை ஊக்குவிக்கும் வர்ணாசிரம கோட்பாடுகளை எதிர்ப்பதை மட்டும் வெளிப்படுத்தாமல்

ஜாதியை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அறிவுப்பூர்வமாக கண்டித்து பெரியார் சொன்ன பகுத்தறிவை விட ஆணித்தரமான பகுத்தறிவை கற்று தந்த இஸ்லாத்தை முழுமையாக ஆராயாது போனது அவரது குற்றம்

இது போல் பல மாற்று கருத்து ஈ வெ ரா பெரியாரை பற்றி நமக்கு இருந்தாலும் அவரது நியாயமான தியாகங்களையும் புரட்சிகரமான கருத்துக்களையும் நாம் எப்போதும் நன்றியுடன் வரவேற்போம்

             நட்புடன் J .இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்