போலியான ஆன்மீகம்
புத்தாண்டு கொண்டாடும்
இந்து மத சாமியார்களுக்கு சவால்
^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_
01-01-18 ஞாயிறு
-----------------------------
J. யாஸீன் இம்தாதி
!+++++++++!
கட்டுரை எண் 1176
بسم الله الرحمن الرحيم
←→←→←→←→←→←→←
பொதுவான ஒரு பண்டிகையை கொண்டாட விரும்பும் மனிதர்கள் அதை அவர்களின் விருப்ப பிரகாரம் நாகரீகமாக மகிழ்வாக கொண்டாடுவது தனிப்பட்ட உரிமை
அதே நேரம் ஒரு பண்டிகையை வழிபாட்டு தலத்தில் வைத்து கொண்டாடுவதாக இருந்தால் அந்த பண்டிகைக்கும் அந்த மத வேத நூல்களுக்கும் தொடர்பு இருக்க வேண்டும்
ஆங்கில புத்தாண்டு என்பது கிருஸ்தவர்களின் மத ரீதியான பண்டிகையாகும்
அதாவது இயேசுநாதர் பிறப்பை வைத்து ஏற்படுத்தப்பட்டதே புத்தாண்டாகும்
புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு சில கோயில்களில் நடைவாசல்கள் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகளும் ஆராதனைகளும் செய்யப்பட்டு வருகின்றது என்று சொன்னால் இயேசுநாதருக்கும் கோயிலுக்கும் என்ன சம்மந்தம் ?
கொள்கை ரீதியில் கிருஸ்தவத்தை எதிர்க்கும் இந்து மத சாமியார்களும் ஆன்மீகவாதிகளும் இதற்க்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள்
அல்லது இயேசுநாதரை ஆன்மீக ரீதியாக நம்புவதும் இந்து மதத்தின் கோட்பாடா ?
மனதளவில் ஏற்று கொள்ளாத ஒரு சித்தாந்தத்தை செயல் அளவில் நூற்றுக்கு நூறு பின்பற்றுவது என்பது இந்து தர்மத்திற்க்கு எதிரான ஒரு காரியமாகும்
கலாச்சார சீரழிவுகளை ஒழுக்க கேடுகளை உண்டாக்கி வரும் புத்தாண்டை முற்றிலும் புறக்கணிப்பது பகுத்தறிவே சொல்லும் முடிவாக இருந்தாலும்
அதை கோயில்களில் கொண்டாடுதல் என்பது இந்து அன்பர்களும் இந்து மத சாமியார்களும் தங்களை தானே ஏமாற்றி கொள்ளும் கொள்கை குழப்பங்களாகும்
மதநல்லிணக்கம் என்பது வேறு ஒரு மதத்தின் வழிபாட்டையே போலியாக பின்பற்றுதல் என்பது வேறு
இவ்விசயத்தில் இந்து மத நூல்களின் சான்றுகளை வைத்து புத்தாண்டு கொண்டாட்டத்தை நிறுவுவது தான் இந்து மதத்தை வைத்து தங்களை அடையாளப்படுத்தி காட்டும் சாமியார்களின் முக்கிய கடமையாக உள்ளது
ஆனால் பேரறிஞர் இந்து மதத்தின் ஆன்மீக கடல் என்றெல்லாம் தங்களை காட்டிக் கொள்ளும் ஒரே ஒரு நபரால் கூட இந்து மதத்தின் புனிதமான நான்கு நூல்களான
ரிக் வேதம் யசுர் வேதம் சாம வேதம் அதர்வண வேதம் ஆகிய எந்த நூலில் இருந்தும் புத்தாண்டு கொண்டாடுவதை ஆதாரம் காட்டி நிரூபிக்க இயலாது என்பதை ஆணித்தரமாக சவால் விடுகிறேன்
நட்புடன் J .இம்தாதி
Comments
Post a Comment