ஆன்மீக ஏமாளிகளும்
ஆன்மீக கோமாளிகளும் _^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^_^
14-01-18 ஞாயிறு
-----------------------------
J. யாஸீன் இம்தாதி
!+++++++++!
கட்டுரை எண் 1181 ======================
بسم الله الرحمن الرحيم ¡¡
*****************************
உலகில் மனிதர்கள் இரு வகை
ஒன்று மனிதனால் எது சாத்தியமோ மனிதன் உருவாக்கிய அறிவியல் துணை கொண்டு எவைகள் சாத்தியமோ அதை மாத்திரம் தான் மனிதனால் செய்ய முடியும் என்று நம்புவோர் ஒரு சாரார்
மனிதனால் எவை எல்லாம் சாத்தியம் இல்லையோ அவைகளையும் அவை அல்லாதவைகளையும் செய்யும் ஆற்றல் அழிக்கும் ஆற்றல் உள்ள படைப்பாளன் சர்சக்தன் ஒருவன் உள்ளான் என்ற அடிப்படையில் இறைவனை நம்பும் சாரார் ஒரு புறம்
இந்த இரு சாராரின் நம்பிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய அறிவார்ந்த விசயமாகும்
ஆனால் பலவீனமாகவும் ஆசை உணர்வுகளோடும் படைக்கப்பட்ட மனிதர்களில் சிலர்கள் மாத்திரம்
நாம் செய்ய முடியாத காரியங்களையும் செய்வார்கள் என்றும்
நம் அறிவின் மூலமும் அறிவியல் துணையின் மூலமும் செய்ய முடியும் என்ற நிலையில் உள்ள காரியங்களை தாண்டி
மாயத்தாலும் தனது மந்திர ஆற்றல் மூலமாகவும் தனது ரகசிய ஞானத்தாலும் பல அதிசயங்களையும் நிகழ்த்துவார்கள் என்றும்
நம்மால் அறியவே முடியாத கடவுள் ரகசியங்களையும் அவர்கள் அறிவார்கள் என்றும்
எவ்விதமான பரிசீலனைக்கும் அவர்களை உட்படுத்தாமல் அதை பற்றிய தெளிவும் இல்லாமல் வெறும் மூட நம்பிக்கைகளை மாத்திரமே மையமாக வைத்திருப்போர் ஒரு புறம்
இவ்வகையை சார்ந்தவர்கள் தான் மனிதரிகளில் சிலர்களை (அவ்லியாக்கள் என்றும் அதாவது) மகான்கள் கடவுளுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்றும் தெய்வப்பிறவிகள் என்றும் ஆன்மீகத்தின் புதையல்கள் என்றும் தீட்சை தரும் குருக்கள் சித்தர்கள் என்றும் பாகுபடுத்தி ஒட்டு மொத்த மனித சமூகத்தை இரு பிரிவுகளாக ஆக்கி அதை ஒரு ஞானமாக கருதி கொண்டுள்ளனர்
இப்படிப்பட்டவர்களின் புகைப்படங்களை புனிதம் என்று கருதி அந்த புகைப்படங்களை இல்லங்களில் தொங்க விடுவது வணிகம் நடத்தும் கடைகளில் பிரத்யேகமாக மாட்டி வைப்பது அந்த புகைப்படத்துக்கு ஏதோ கடவுளின் அருள் இருப்பதை போல் நினைத்து கொண்டு அதற்க்கு தனி மரியாதையை செய்வது போன்ற மூட நம்பிக்கைகளில் ஊறிப்போய் உள்ளனர்
வழக்கத்திற்க்கு மாற்றமாக அவர்கள் உடை அணிந்திருப்பதும் கைகளில் திராட்சை கொட்டைகளை வைத்து உருட்டி கொண்டிருப்பதும் பல மனிதர்கள் இருக்கும் சபையில் அவர்கள் மாத்திரம் தனிமையான சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதும் அலங்கோலமான தாடி மீசைகளை வைத்திருப்பதும் தான் ஒருவரை மனிதரில் புனிதர் என்று சொல்வதற்க்கும் மகான் ஞானி என்று அடையாளம் காண்பதற்க்கும் தகுதி என்றால்
இந்த மாறுதலான தகுதியை தோற்றத்தை யார் வேண்டுமானாலும் தன் வேடமாக மாற்றி கொள்ள முடியும்
காரணம் இந்த மாற்றங்களை தான் வேறு பல வடிவங்களில் சினிமா கூத்தாடிகள் அனைவரும் அன்றாடம் செய்து வருகின்றனர்
இதன் காரணத்தால் தான் காதல் பெயரில் கற்பை இழந்த பெண்களை விட ஆன்மீகத்தின் பெயரில் சாமியார்களிடம் சன்னியாசிகளிடம் பாதிரியார்களிடம் தர்ஹா ஞானிகளிடம் பக்தியின் பெயரால் கற்பை இழந்தவர்களே அதிகம்
கூத்தாடியோடு கட்டில் அறையில் சல்லாபம் செய்து வீடியோ ரிகார்ட் மூலம் கேவலப்பட்ட நித்தியானந்தா என்ற போலி சாமியாரும்
ஆன்மீகத்தின் பெயரால் விபச்சார விடுதியை நடத்தி பல வருடமாக சிறையில் தள்ளப்பட்டுள்ள காமுகனான போலிச்சாமியார் பிரேமானந்தா சாமியாரும்
கண்கட்டு வித்தைகளை கற்று வைத்து கொண்டு ஏதோ தன்னிடம் தெய்வ அம்சம் இருப்பதை போல் பாமரனுக்கு திருநீரையும் வாட்சுகளையும் மந்திர சக்தியால் கொடுப்பதை போல் நாடகமாடி இறுதியில் பிபிசி ஊடகத்தில் கேவலப்பட்டு இறந்து போன சத்யசாய்பாபா சாமியாரும்
மஸ்தான் என்ற வார்த்தைக்கே போதை பொருளை உட்கொள்பவன் என்ற சாதா அறிவு கூட இல்லாது தனக்கு குன்னங்குடி மஸ்தான் என்று பெயர் வைத்து கொண்டு கடவுள் மனிதனும் ஒன்று என்று அத்வைதம் எனும் போலி தத்துவத்தை தூக்கி பிடித்த மஸ்தானும்
இன்னும் இது போல் பல அயோக்கியர்கள் பட்டியல் நூற்றுக்கணக்கில் உள்ளது
நாங்கள் எல்லாம் இச்சையை வென்ற ஞானிகள் என்று கோலத்தில் வேஷம் போட்டு கொண்டு பாமர மனிதனை விட ஒழுக்கம் கெட்டவர்களாக வலம் வருவது இவர்கள் தான்
பொருளாசை ஆன்மீகவாதிகளுக்கு நஞ்சை போன்றது என்று போலி ஆன்மீகம் பேசி கொண்டு பஞ்சு மெத்தையில் புலித்தோல் மெத்தையில் அமர்ந்து வகை வகையாக உணவை சாப்பிட்டு கொண்டு கோடிக்கணக்கில் சொத்துக்களையும் பல ஏக்கர் நிலங்களையும் வாங்கி குவித்து கொண்டு பணக்காரனை விட பல சொகுசான வாழ்கையை ஒவ்வொரு நிமிடமும் அனுபவிக்கும் அயோக்கியர்களும் இவர்கள் தான்
இதில் சற்று வித்தியாசமாக நாங்கள் எல்லாம் துறவிகள் என்று சொல்லி கொண்டு மானம் கெட்டு நிர்வாண கோலத்தில் மர்ம உறுப்பை பல நபர்களுக்கு தெரியும் விதம் பொது இடங்களில் ஊர்வலமாக காட்டிகொண்டு செல்லும் கழிசடைகளும் இவர்கள் தான்
நாங்கள் முக்தி அடைந்து விட்டோம் என்று கூறி கொண்டு கன்ஜாக்களை புகைப்பது மனிதனின் செத்த பிணத்தை உண்ணுவது போன்ற அறிவிலித்தனமான காரியங்களை செய்வதும் இவர்கள் தான்
குற்றவாளி கூண்டில் பிடிபடாத வரை இவர்கள் எல்லாம் முக்திகள்
ஆனால் பிடிபட்டு விட்டால் இவர்கள் தான் மனித சமுதாயத்திலே மிருகங்களை விட கேடு கெட்ட சக்திகள் சகதிகள்
கடவுள் வேறு மனிதன் வேறு
கடவுள் பார்வையில் யாராக இருந்தாலும் அடிமை மட்டுமே அது போன்ற அடிமைகளில் சிலர்களை மாத்திரம் உயர்வாக தேர்வு செய்து அவர்களை தனது பக்கம் அமர வைத்து அழகு பார்க்க வேண்டும் என்ற எந்த அவசியமும் கடவுளுக்கு இல்லை
அவனுடைய கட்டளைகளை யார் நடைமுறை படுத்தினாலும் அவர்களை இறைவனுக்கு பிடிக்கும்
அந்த கட்டளைகளை யார் புறக்கணித்தாலும் இறைவனுக்கு பிடிக்காது இறைவனுக்கு பிடித்த முறையில் தீமைகளை தவிர்த்து இயன்றவரை கட்டுப்பாட்டுடன் நடப்பவர்கள் நல்லோர்கள்
இறைவனுக்கு பிடிக்காத முறையில் நடப்போர் தீயோர்கள் அவ்வளவு தான்
ஆன்மீகத்தை போதிக்கும் வேதத்தை சுயமாக சிந்தித்து எது சரி என்று பகுத்தறிவை கொண்டு சிந்திக்க நேரத்தை ஒதுக்குவதை தவிர்த்து விட்டு மதகுருமார்களின் வெளித்தோற்றத்தை பார்த்து ஏமாந்து அவர்களுக்கு முன் மூளையை அடகு வைத்து அவர்களுக்கு சாஷ்டாங்கம் செய்யும் சூழல் இருக்கும் வரை பாமரர்களின் மூளை வெறும் சதை பிண்டம் மட்டுமே
சுருக்கமாக சொன்னால் ஆன்மீகத்தை நாடி நல்ல எண்ணத்தில் செல்லும் பாமரர்கள் ஏமாளிகள்
அவர்களின் மூளையை ஞானம் என்ற பெயரில் மூளைச்சலவை செய்யும் ஆன்மீக குருமார்கள் கோமாளிகள்
கோமாளிகளின் நோக்கம் பிறர்களை சூழ்ச்சியால் மயக்கி பணம் ஈட்டும் நோக்கம் மட்டுமே
அதில் இவர்களே வெற்றியாளர்கள் என்பது அன்றாடம் ஊடகங்கள் மூலம் நாம் கண்டு வருகிறோம்
மாய மந்திரத்தால் அதை செய்வோம் இதை செய்வோம் என்று அன்றாடம் வித்து வேலைகளை காட்டி பாமரர்களை ஏமாற்றும் இவர்களில் ஒருவர் கூட தாங்கள் சொல்வது உண்மை என்றும் தாங்கள் கூறும் கொள்கையும் உண்மை என்று பறைசாற்றிட சிந்தனையுள்ள எவரையும் விவாதத்திற்க்கு அழைத்தது இல்லை
காரணம் அவர்கள் கூறும் ஆன்மீகத்தில் அவர்களுக்கே ஆணித்தரமான நம்பிக்கை இல்லை
மக்களை ஏமாற்றி பிழைக்கும் அரசியல்வாதிகளை விட ஆன்மீகத்தை தவறாக பயன் படுத்தி அல்லது தவறான ஆன்மீகத்தை பயன்படுத்தி தனது குடும்பத்தை வளப்படுத்தி கொள்ளும் ஆன்மீக திருடர்களே இவர்கள் தான்
اِتَّخَذُوْۤا اَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ اَرْبَابًا مِّنْ دُوْنِ اللّٰهِ وَالْمَسِيْحَ ابْنَ مَرْيَمَ وَمَاۤ اُمِرُوْۤا اِلَّا لِيَـعْبُدُوْۤا اِلٰهًا وَّاحِدًا لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ سُبْحٰنَهٗ عَمَّا يُشْرِكُوْنَ
அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்
ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள்
(அல்குர்ஆன் : 9:31)
நட்புடன் J. இம்தாதி
Comments
Post a Comment