ஜீவகாரூண்யமும் சுவனத்தின் படிகள்

ஈவு இரக்கம் இல்லாத மனிதனின்

             இழிச்செயல்கள்      
    ======================
           கட்டுரை எண் 1171
   ஆக்கம் J. யாஸீன் இம்தாதி

                   *************
                               بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

                   *************

பகுத்தறிவை பெற்றதால் மனிதன் சிறந்தவன் அல்ல

காரணம் ஒவ்வொரு உயிரினங்களும் அதற்க்கு ஏற்ற பகுத்தறிவை பெற்றே உள்ளது

அதனால் தான் எந்த உயிரினங்களும் தனது படைப்பின் வரம்புகளை தாண்டி பிற ஜீவன்களிடம் வரம்பை மீறி நடப்பதும் இல்லை அவ்வாறு நடப்பதை ரசிப்பதும் இல்லை


பிற உயிர்களை வேட்டையாடி தான் வாழ வேண்டும் என்ற நிலையில் படைக்கப்பட்ட காட்டு விலங்குகள் கூட தனது தேவைகளுக்கு மாத்திரமே பிற உயிர்களை வேட்டையாடி உண்ணுகிறதே தவிர பிற உயிர்கள் வேதனைபடுவதை அல்லது வீணாக கொலை செய்யப்படுவதை எந்த மிருகங்களும் விரும்புவது இல்லை

அதனால் தான் மானும் புலியும் ஒரே ஆற்றில் நதிக்கரையில் ஒன்றிணைந்து தண்ணீர் அருந்துவதையும் பார்க்கிறோம்

இந்த படைப்புகளை விட தன்னை மேலான படைப்பாக கருதும் மனித இனம் மட்டுமே பிற உயிர்கள் வேதனையை அனுபவிப்பதை கண்டு ரசிக்கும் கீழ்த்தரமான குணம் உடையவர்களாக இருப்பதை காண முடிகின்றது

குறிப்பாக மனிதனோடு அண்டி வாழும் உயிரினங்களை வதை செய்வதை பாவமாகவே கருதாத கொடூர குணம் உடைய இழி பிறவிகள் மனித சமூகத்தில் ஏராளம்

ஒரு அர்ப்பமான கொசுவின் உடலில் இருந்து வெளியேறும் உயிரையே தடுக்கும் ஆற்றல் பெறாத மனிதனுக்கு ஒரு உயிரை நியாயமான காரணம் இல்லாமல் கொலை செய்வதும் துன்பப்படுத்துவதும் அருகதை அற்ற செயல் ஆகும்


ஜீவகாருண்யம் எனும் பெயரில் மிருகங்களோடு கட்டி பிடித்து ஒரே கட்டிலில் படுத்து விளையாடும் மனநோயாளிகள் ஒரு புறம்

ஜீவகாருண்யம் என்றால் என்னவென்றே தெரியாத ஈவு இரக்கம் இல்லாத மனித வடிவில் மிருகங்களை விட கீழ்த்தரமான மனித இனங்களோ மறுபுறம்



இஸ்லாத்தை பொருத்தவரை ஒரு மனிதனை அநியாயமாக கொலை செய்வதும் பாவம்

மனிதன் அல்லாத பிற உயிர்களை அவசியமின்றி கொலை செய்வதும் பாவம்

ஒரு மனிதனுக்கு நல்லறம் செய்தும் சுவனத்தை அடையு முடியும்

பிற உயிரினங்களின் மீது இரக்கம் காட்டுவதின் மூலமாகவும் சுவனத்தை அடைய முடியும்

        ++++++++++++++++++++++

173. ஒரு நாய் தாகத்தின் காரணமாக ஈர மண்ணை (நக்கி) சாப்பிடுவதை ஒருவர் பார்த்தார்

உடனே அவர், தான் அணிந்திருந்த காலுறையை எடுத்து அதில் தண்ணீர் மொண்டு அந்நாய் தாகம் தீரும் வரை கொடுத்தார் எனவே அல்லாஹ் அம்மனிதருக்கு கருணை காட்டி அவரைச் சுவர்க்கத்தில் புகத்தினான் என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

                ஸஹீஹ் புகாரி

            (+++++++++++++++++)

2365 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்

(முன்னொரு சமுதாயத்தைச் சேர்ந்த) பெண்ணொருத்தி ஒரு பூனை(க்குத் துன்பம் தந்த) விஷயத்தில் வேதனைப்படுத்தப்பட்டாள்

அந்தப் பூனையை அது பசியால் துடித்துச் சாகும் வரை அவள் அடைத்து வைத்திருந்தாள்

அதன் காரணத்தால் அவள் நரகத்தில் புகுந்தாள்

அப்போது அல்லாஹ்வே மிக அறிந்தவன் நீ அதைக் கட்டிவைத்து அதற்குத் தீனி போடவுமில்லை தண்ணீர் தரவுமில்லை அது பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்று (பிழைத்துக்) கொள்ளட்டும் என்று அதை அவிழ்த்து விடவுமில்லை

என்று அல்லாஹ் கூறினான்

என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

                ஸஹீஹ் புகாரி

            நட்புடன் J . இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்