ஜெயலலிதாவாகிய நான் படும் பாடு
அம்மாவை நினைப்பதை விட
ஜெயலலிதா அம்மாவை பற்றிய
செய்திகளை நினைவு
கூறுவோம்
><><><><><><><><><><><><><><>
05-12-2017 கட்டுரை எண் 1168
-----------------------------
J. யாஸீன் இம்தாதி
!+++++++++!
Bismillahir Rahmanir Raheem
!! -------------------------------!!
கடந்த வருடம் இதே நாளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இறந்த செய்தியை நினைவு கூறும் நாளாக இன்று (05-12-17)பரவலாக அனுசரிக்கப்படுகிறது
இறந்து போன ஒருவரை பற்றி வருடத்திற்க்கு ஒரு முறை மாத்திரம் நினைவு கூறுவது மனிதன் தன்னை தானே ஏமாற்றி கொள்ளும் ஒரு பித்தலாட்டம்
அதே நேரம் பிறர்கள் நினைவு கூறாத பல செய்திகளை மறந்து போன சில செய்திகளை நினைவு படுத்துவதே இந்த ஆக்கம்
அதுவும் நாட்டு மக்களின் விழிப்புணர்வை தட்டி எழுப்புவதற்காக தான்
கடந்த வருடம் ஜெயலலிதா அவர்களை பற்றி மக்கள் முன் வைத்த ஏமாற்றல்களும் ஒளரல்களும் ஓர் பார்வை
1 -😭அம்மா வைரஸ் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்
2 - 💉💊அம்மா வெகு விரைவில் குணம் அடைவார் அப்பல்லோ மருத்துவ மேதைகள் அறிவிப்பு
3 - 👯அம்மா எதிர் பார்க்காத அளவு முன்னேறி வருகிறார்
4 - 📮📩🇮🇳 அம்மா மருத்துவமனையில் இருந்து கொண்டே தவறாமல் அரசாங்க கோப்புகளை அனு தினமும் பார்வையிடுகிறார் கை எழுத்து போட்டு உத்தரவிடுகிறார்
5- 🙆அம்மா நாட்டு மக்களின் நலனை 👂அதிகாரிகளிடம் அன்றாடம் கேட்டு வருகிறார்
6 -👸அம்மா நன்றாக 💪👊தினமும் வழக்கமான உணவை🍟🍸🍵🍺 சாப்பிடுகிறார் நடை பயிற்சி🏃🙅 மேற் கொள்கிறார்
7 - 👼அம்மா நன்றாக👣🌷 முழுமையாக குணம் அடைந்தார்
8- 👳கவர்னர் அம்மாவை சந்தித்து 👫சென்றார்
9 - 👲👶அம்மாவை மிகவும் முக்கியமான நபர்கள் மட்டும்👏👏 சந்தித்து சென்றனர்
10 - 👩👵அம்மா முற்றிலும் குணம் அடைந்ததால்🚑🚓 அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து எப்போது வீட்டிற்க்கு செல்ல🚀✈ வேண்டும் என்பதை அம்மாவே முடிவு செய்வார்
11- 💉அம்மா திடீரென்று பழைய பாதிப்பை 🐙அடைந்தார்
12 - 😭 அம்மா நம்மை விட்டு பிரிந்து எமலோகம் அடைந்தார்
13 - 😂அம்மா நம்மை விட்டு எமலோகம் செல்லவில்லை அவர் உயிரோடு 😒 👀தான் உள்ளார்
புரளிகளை 😷 நம்ப வேண்டாம் என கேட்டு கொண்டார்
14 - 💔👽அம்மா நம்மை விட்டு பிரிந்து மரணம் அடைந்தார் ✌ என்பது ஊர்ஜிதமாக்க படுகிறது
கடந்த வருடம் முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த 75 நாட்களாக அவரை பற்றி அவரை சார்ந்த அதிமுக கட்சி சார்ந்தவர்களும் கட்சி சார்ந்த செய்தி தொடர்பாளர்களும் பிரபல்யமான ஊடகங்களும் தொலை காட்சியின் பேட்டிகளிலும் விவாதங்களிலும் கலந்து கொண்ட அனைத்து தரப்பு சிந்தனையாளர்களும் திரும்ப திரும்ப முரண்பட்டு கொடுத்து வந்த அறிக்கைகளே மேல் குறிப்பிடப்பட்ட தகவல்கள் ஆகும்
நம் நாட்டை ஆளும் முதல்வரின் நிலை என்ன என்று மக்கள் எல்லாம் ஆவலோடும் ஏக்கத்தோடும் அடிக்கடி கேட்டு கொண்டிருந்த சூழ்நிலையில் மக்களுக்கு மேலும் மேலும் கேள்விபட்ட சந்தேகங்கள் ஊர்ஜிதமாகும் விதத்தில் தான் அனைத்து அரசியல்வாதிகளும் நடந்து கொண்டனர்
கேவளமான எய்ட்ஸ் நோயாளால் தமிழக முதல்வர் பாதிக்கப்பட்டதை போல் கருதி கொண்டு அவருடைய முகத்தை கூட குடிமக்களுக்கு தொலைகாட்சியில் ஒரு முறையாவது அல்லது ஒரே ஒரு நிமிடமும் கூட காட்டாமல் மறைத்தே வைத்து நாடகம் ஆடினார்கள் அனைத்து அயோக்கிய அரசியல்வாதிகளும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகமும்
உலகில் எந்த ஒரு பிரதமருக்கும் முதல்வருக்கும் இது போல் ஒரு அவமானத்தை எந்த நாட்டிலும் இதுவரை ஏற்படுத்த படவில்லை
குடிமக்களை கூமுட்டைகளாக கருதி கொண்டு அன்றைக்கு அரசியல்வாதிகள் தான் பித்தலாட்டங்களை அரங்கேற்றி மக்கள் மன்றத்தில் நாடகம் ஆடினார்களே தவிர குடிமக்களில் எவர்களும் இவர்கள் கூறி வந்த முரண்பட்ட தெளிவற்ற தகவல்களை பேட்டிகளை அப்போதே நம்பவில்லை என்பதை இன்னும் ஏனோ நம் அரசியல்வாதிகள் புரிந்து கொள்ளவில்லை
அதனால் தான் முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மரணித்து ஒரு வருடத்திற்க்கு பிறகு அவருடைய கால்களின் கீழ் அடிமைகளாக வலம் வந்த சில அரசியல் கயவர்கள் துரோகிகள் பதவி வெறி பிடித்து அலையும் அரசியல்வாதிகள் தற்போது நாங்கள் அப்போது சொன்னவைகள் எல்லாம் பொய் அப்போது என்ன நடந்தது என்பது எங்களுக்கே தெரியாது என்று பல்டி அடித்து விட்டு எனவே நாட்டு மக்களே எங்களை மன்னித்து கொள்ளுங்கள் என்று பொது கூட்டத்தில் பேசியும் அறிக்கை கொடுத்தும் மீண்டும் தமிழக மக்களை கூமுட்டைகளாக மாற்ற முயற்சி செய்து வருகின்றனர்
++++++++++++++++++++++
பெற்றெடுத்த தாயை விட எங்கள் தலைவி தான் எங்கள் தாய் என்று வேஷம் போட்ட இவர்கள் கூற்றில் உண்மை இருந்திருந்தால் ஓட்டு போட்டு பதவி சுகத்தை தந்த நாட்டு குடிமக்களின் மீது இவர்களுக்கு அக்கரை இருந்திருந்தால் இந்த தகவலை மக்கள் குழம்பி இருந்த அந்த சூழலியே மக்கள் மன்றத்தில் வைத்திருக்க வேண்டும் அதுவே உண்மையான செயல் ஆனால் முன்னால் முதல்வர் இறந்து ஒரு வருடம் ஆன பின்பு இவர்கள் கைவசம் வைத்து இருந்த பதவிகள் பறிக்கப்படும் சூழலில் அல்லது மாற்றப்படும் சூழலில் இப்போது இதை பற்றி மீண்டும் அறிக்கைகளை வெட்கம் இன்றி தருகிறார்கள் என்றால் இவர்களை விட அயோக்கிய அரசியல்வாதிகள் உலகில் யாரும் நிச்சயம் இருக்க முடியாது
பதவி மோகமும் அரசியல் தாகமும் ஏற்பட்டால் ஒரு மனிதன் எந்தளவு கீழ்த்தரமான நிலையில் இறங்குவான் என்பதற்க்கு நம் தமிழகத்தின் அரசியல்வாதிகளே சரியான சான்று
இனி வருங்காலங்களில் இது போன்றோருக்கு ஓட்டு போட்டால் இவர்கள் நம்மையும் அரசாங்க பதிவேட்டில் செத்து விட்டார்கள் என்றே எழுதி வைத்து விடுவார்கள்
தற்போது ஆட்சி மாற்றமும் கட்சி மாற்றமும் தேவை இல்லை மாறாக ஆட்சியாளர்கள் மாற்றமும் அரசியல்வாதிகளின் மாற்றமும் இது வரை இருக்கும் ஒட்டு மொத்த கட்சிகளின் மாற்றமும் தான் தேவை
அம்மா இருந்த வரை தமிழகமே பூங்காவாக இருந்தது என்று சொல்வோரும் அரசியல் அடிமைகள் இனி மேல் அம்மா உயிரோடு வந்தால் தான் தமிழகமே முன்னேறும் என்று சொல்வோரும் அறியாமை மூடர்கள்
ஆட்சியாளர்களுக்காக நாம் இல்லை நமக்காக தான் ஆட்சியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் அந்த தேர்வில் வலிமையும் திறமையும் இருந்தால் உங்களையே முன் நிறுத்துங்கள் தற்போதைய அனைத்து அரசியல்வாதிகளையும் வீட்டுக்கு அனுப்புங்கள்
وَلِلّٰهِ مُلْكُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَاِلَى اللّٰهِ الْمَصِيْرُ
இன்னும் வானங்களுடையவும் பூமியினுடையவும் ஆட்சி அல்லாஹ்விடமே இருக்கிறது; அல்லாஹ்வின் பக்கமே (யாவரும்) மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது
(அல்குர்ஆன் : 24:42)
நட்புடன் J.இம்தாதி
Comments
Post a Comment