விளம்பர யுக்திகள்

விளம்பர அடிமைகளாகி வரும் சினிமா

                கூத்தாடி அடிமைகள்

   **********************************
       !======================!

19-12-17- செவ்வாய் கட்டுரை எண் 1171

            ஆக்கம் J. யாஸீன் இம்தாதி

                          *************

                       بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

                          *************

தலைக்கு பூசும் எண்ணை முதல் காலில் அணியும் காலணிகள் வரை

ஏன் பெண்களுக்கே சம்மந்தம் இல்லாத தாடியை சிரைக்கும் சேவிங் செட்டிங் வரை அதை வணிகம் செய்யும் நிறுவனங்கள் யாவும் சினிமாவில் நடிக்கும் முன்னனி நடிகைகளை வைத்தே விளம்பரம் செய்வதும் அவர்களை விசேஷ அழைப்பாளர்களாக அழைத்து அவர்களின் நிறுவனங்களின் திறப்பு விழாக்களை நடத்துவதும் நம் தமிழகத்தில் புற்றீசல் போல் பரவி இருக்கும் ஒரு பழக்கம்



தரத்திற்க்கு செய்யும் செலவுகளை விட அதன் விளம்பரங்களுக்கு செய்யும் செலவுகளே மிகவும் அதிகம்


காற்றுள்ள போதே தூற்றி கொள் எனும் பழமொழிக்கு அடிக்கடி உயிர் கொடுப்பவர்கள் தான் சினிமாவில் நடிக்கும் நடிகைகள் கூட்டம்


காரணம் தன்னுடன் நடித்த கதாநாயகன் வெள்ளை முடி நிறைத்த பிறகும் பல் செட் வைத்து முதியவனாக மாறிய பிறகும் கூட பல வருடங்கள் சினிமாவில் புதிதாக நுழையும் இளம் கதாநாயகிகளுக்கு அந்த முதிய கதாநாயகர்கள் கதாநாயகனாகவே நடிப்பார்கள்


அதே நேரம் காசு வேண்டும் என்றால் தன்னோடு கதாநாயகனாக ஒரு காலத்தில் நடித்து அதன் பின் அந்த கதாநாயகன் வயதான பிறகும் கூட அவனுக்கு அக்காவாக தாயாக நடிக்கும் அவல நிலை தான் சினிமா துறையை பொருத்தவரை நடிகைகளின் வழக்கம்

இத்தகைய சூழ்நிலையை சந்திக்கும் முன் கநாநாயகனுக்கு ஈடான சம்பளத்தை குறுகிய காலத்தில் அதுவும் குறைந்த நேரத்தில் பல கோடிகளை நடிகைகளுக்கு பெற்று தருவது தான் நிறுவனங்களின் விளம்பரங்களில் நடிக்கும் யுக்தி ஆகும்


விளம்ரங்களில் நடிப்பதின் மூலம் கதாநாயகிகளும் கதாநாயகர்களை போல் கோடிகளில் புரளுகின்றனர் இவர்களை விளம்பரங்களில் நடிக்க வைப்பதின் மூலமாக அதன் நிறுவனங்களும் பல கோடிகளை நுகர்வோரின் மூலம் சுலபமாக ஈட்டி வருகின்றனர்


ஒரு வகையில் பார்த்தால் கோடிகளை சுலபமாக சம்பாரிப்பதில் நடிகைகளும் புத்திசாலிகள் அதே போல் நடிகைகளை விளம்பரங்களுக்கு பயன்படுத்தும் நிறுவனங்களின் அதிபர்களும் புத்திசாலிகள் தான்


இங்கே விபரம் கெட்டவர்கள் என்று ஒரு சாராரை சொல்ல வேண்டுமானால் அது நிச்சயம் நம்மை போன்ற பொது மக்கள் தான் காரணம் எதார்த்த வாழ்கையை நேசிப்பதை விட கற்பனை வாழ்கையாக இருக்கும் சினிமாக்களையும் அதன் நடிகர் நடிகைகளையும் நேசிக்கும் அறிவீனமான சமுதாயம் தான் நம் நாட்டு குடி மக்கள்



கடவுளின் தரிசனத்தை விரும்பாதவர்கள் கூட கூத்தாடிகளோடு இணைந்து நின்று ஒரு புகைப்படத்தை எடுப்பதை அதிகம் விரும்புபவர்கள் நம் நாட்டு குடிமக்கள்


கோடிகளை சம்பளமாக பெற்று கவர்ச்சிகரமான பல விளம்பரங்களில் நடிகைகள் நடிப்பார்கள் அவர்கள் கோடிகளை சம்பளமாக பெற்று நடித்த விளம்பரங்களை கூட காசு கொடுத்து வாடகை கொடுத்து வரிசையில் நின்று டிக்கெட் எடுத்து காத்திருந்து கண்டு களிப்பார்கள்



நடிகைகளின் போலியான விளம்பரங்களை பார்த்து பொருளை வாங்கி ஏமாறும் நம் நாட்டு கூடிமக்கள் அதற்க்கு காரணமாக இருந்த நடிகைகளை விமர்சிக்க மாட்டார்கள் காரணம் அந்தளவு சினிமா கூத்தாடிகளின் அடிமைகளாக நம் மக்கள் மாறி போயுள்ளனர்


மருத்துவமனைக்கு அருகில் கல்லூரிகளுக்கு அருகில் மெயின் ரோட்டில் விரைவில் பல இலட்சங்கள் விலை உயரும் வீட்டு மனைகளை இன்றே குறைந்த விலையில் வாங்குங்கள் என்று வகை வகையாக தொலைகாட்சியில் நடித்து விளம்பரம் செய்யும் எந்த சினிமா கூத்தாடிகளும் சீரியல் கூத்தாடிகளும் அவர்கள் பிரமாண்டமாக விளம்பரம் செய்யும் மனைகளில் ஒன்றை கூட வாழ்நாளில் வாங்கி இருக்க மாட்டார்கள் ஆனாலும் அவர்கள் தொடர்ந்து இது போல் பல விளம்பரங்களில் நடிப்பதற்க்கு மூல காரணம் நம் நாட்டு குடி மக்கள் சினிமாவுக்கும் கூத்தாடிகளுக்கும் அடிமை பத்தரம் எழுதி கொடுத்தவர்கள் என்பதை நம்மை விட அவர்களே அழுத்தமாக புரிந்து வைத்துள்ளனர்


ஒரு சேலை வாங்கினால் மறு சேலை இலவசம் என்று விளம்பரங்களை கண்டவுடன் வாயை பிளந்து வரிசையில் நிற்க்கும் மனோ நிலையை மாற்றி நாம் வாங்கும் ஒரு சேலைக்கு மறு சேலையை எப்படி இலவசமாக வணிகர்கள் கொடுக்கிறார்கள் என்று சுயமாக யோசிக்காதவரை


விளம்பரங்களே இல்லாமல் செய்யப்படும் வணிகத்திலும் தரம் இருக்கும் என்று உணரும் வரை

பொருளின் தரத்திற்காக நடிப்பதை விட வாங்கும் பணத்திற்காக தான் நடிகைகள் விளம்பரங்களில் மெருகூட்டி நடிக்கிறார்கள் என்ற உண்மையை உணரும் வரை

     இந்த நிலை மாறாது மறையாது

              நட்புடன் J . இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்