விடியலை இருட்டாக்கும் சமுதாயம்

சூரிய விடியலில் மடியலை விரும்பும்

               தூக்க சமுதாயம்
    !======================!

              கட்டுரை எண் 1170
        ஆக்கம் J. யாஸீன் இம்தாதி

                     *************

                         بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

                      *************

சூரியன் விழிக்கும் முன் தூக்கத்தில் இருந்து எழுவதும் இரவு இருள் படரும் முன் உறங்க செல்வதும் தான் ஒட்டு மொத்த உயிரினங்களின் நடைமுறையாக இன்று வரை உள்ளது

இயற்கைக்கு மாற்றமாக மனிதனிடம் ஏற்பட்டு விட்ட பல மாறுதல்களும் தேவைக்கு மீறிய விஞ்ஞான வளர்ச்சிகளும் தான் மனினை நோயாளியாகவும் கோழையாகவும் முழு சோம்பேறிகளாகவும் மாற்றி அமைத்து விட்டது

உலகம் தோன்றிய நாள் முதல் கடந்த நூறு வருடங்களுக்கு முன்னால் வரை மின்சாரம் என்றால் என்னவென்றே தெரியாத சூழலில் இருளையும் அரவணைத்து தான் மனிதனின் வாழ்கை முறையே சீராக நடைபோட்டு வந்தது ஆனால் இன்று ஒரு நாள் மின்சாரம் தடை செய்யப்பட்டாலும் கழிவறை செல்வதற்க்கு கூட மனிதன் அல்லல் படும் சூழ்நிலையை தான் சாதாரணமாக காண முடிகின்றது


கிராமங்களில் அதிகாலை எழும் பழக்கம் உடையோர் நகரங்களில் உள்ள உறவினர்களின் இல்லங்களுக்கு சென்றால் அதிகாலை எழுந்தே பழக்கப்பட்ட அந்த மனிதனுக்கு நகரங்களில் காலை எட்டு மணிவரை உறங்கும் உறவினர்களை கண்டு வெறுப்பும் சலிப்பும் தான் ஏற்படுகிறது


அதிலும் குறிப்பாக இரவு நேரங்களில் வேலைகளுக்கு சென்று விழித்திருப்போரை விட வேலைகளும் இல்லாமல் நண்பர்களோடும் ஊர் தெருக்களிலும் வீணாக சுற்றி இரவின் இயற்கையான நிம்மதியை இழப்பவர்கள் தான் மிகவும் அதிகம்

குறிப்பாக அதிகாலை எழுந்து தொழுவதையே சிறப்பான வணக்கமாக கடமையாக்கி இருக்கும் இஸ்லாத்தை நம்பும் முஸ்லிம்களில் கூட ஆணும் பெண்ணும்சூரியன் விடிந்து தனது சூட்டை வீசும் வரை உறங்கி கொண்டிருப்பது பார்க்கவே அருவெருப்பை தருகின்றது

மனிதனின் நிம்மதியான இரவு உறக்கத்தை முழுமையாக கெடுத்து கொண்டிருப்பது தற்காலத்தில் சமூக வலைதளங்களும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளும் தான் இது போன்றவைகளுக்கு சுய கட்டுப்பாடுகளை ஒவ்வொருவரும் தனது வாழ்வில் ஏற்படுத்த முயற்சிக்கா விட்டால் இதுவே மனிதனின் ஆரோக்யத்தையும் ஆன்மீகத்தையும் முற்றிலும் நாசப்படுத்தியே தீரும் என்பதில் சந்தேகம் இல்லை

            ++++++++++++++++++

618. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

அதிகாலை வெண்மை தோன்றி முஅத்தின் ஸுப்ஹுக்கு பாங்கு கூறியதற்கும் இகாமத் கூறுவதற்கும் இடையே நபி(ஸல்) அவர்கள் சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்

                  ஸஹீஹ் புகாரி
             ++++++++++++++++

3269 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்

நீங்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது உங்கள் தலையின் பின்பக்கத்தில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போட்டு விடுகிறான் ஒவ்வொரு முடிச்சிலும் இன்னும் உனக்கு நீண்ட இரவு (ஓய்வெடுப்பதற்காக எஞ்சி) இருக்கிறது எனவே, நீ தூங்கிக் கொண்டேயிரு என்ற போதித்து (அவனை விழிக்க விடாமல் உறங்க வைத்து) விடுகிறான்

அவர் (அவனுடைய போதனையைக் கேட்காமல் அதிகாலையில்) கண் விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்ந்து விடுகிறது

அவர் உளூச் செய்தால் மற்றொரு முடிச்சு அவிழ்ந்து விடுகிறது அவர் (தஹஜ்ஜுத் அல்லது ஃபஜ்ர்) தொழுதுவிட்டால் முடிச்சுகள் முழுவதுமாக அவிழ்ந்து விடுகிறது

அவர் சுறுசுறுப்புடனும் உற்சாகமான மனநிலையுடனும் காலைப் பொழுதை அடைவார் இல்லையென்றால் மந்தமான மனநிலையுடனும் சோம்பலுடனும் காலைப் பொழுதை அடைவார்

               ஸஹீஹ் புகாரி

              நட்புடன் J .இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்