இத்தா எனும் காத்திருப்பு சட்டம்
கேள்வி கேட்டவர் முர்சிதா பாரூக் தேங்கை
√√√√√√√√√√√√√√√√√√√√√√√√√√ பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் கேள்வி
------------------------
இத்தா இருக்கும் பெண்கள் நான்கு மாதம் பத்து நாள் காத்திருப்பதற்கு அவள் வயிற்றில் ஏற்கனவே உள்ள கணவரின் சிசு இருக்கின்றதா இல்லையா என்பதை அறிவதற்குதான் அல்லாஹ் சட்டம் சொல்கின்றான்
இன்று கருவான சில நாட்களிலேயே மருத்துவரின் மூலம் சிசுவை அறிய முடியும்
எனவே 4- மாதம் கணவனை இழந்த பெண்களும் விவாகரத்து பெற்ற பெண்களும் இத்தா எனும் காத்திருப்பு சட்டத்தை கடை பிடிப்பதைஅவசியம் பின்பற்றத்தான் வேண்டுமா?
பதில் -- ஒரு விசயத்தை எந்த முறையில் கடைபிடிக்க வேண்டும் என்று இறைவன் கட்டளையிடுகின்றானோ அந்த முறையைத்தான் நாம் பின்பற்ற வேண்டும் அதற்கான காரணங்களை நாம் அறிந்தாலும் சரியே அறியாவிட்டாலும் சரியே
وَالَّذِينَ يُتَوَفَّوْنَ مِنكُمْ وَيَذَرُونَ أَزْوَاجًا يَتَرَبَّصْنَ بِأَنفُسِهِنَّ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا ۖ فَإِذَا بَلَغْنَ أَجَلَهُنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا فَعَلْنَ فِي أَنفُسِهِنَّ بِالْمَعْرُوفِ ۗ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ
அல்குர்ஆன் 2:234
உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் அம்மனைவியர் நான்கு மாதம் பத்து நாள் பொறுத்திருக்க வேண்டும் (இந்த இத்தத்)தவணை பூர்த்தியானதும், அவர்கள் (தங்கள் நாட்டத்துக்கு ஒப்ப) தங்கள் காரியத்தில் ஒழுங்கான முறையில் எதுவும் செய்துகொள்வதில் உங்கள் மீது குற்றமில்லை
அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்
++++++++++++++++++++++
தாங்கள் கூறும் கூற்றும் உண்மை தான் அதே நேரம் நவீனமான நம் காலத்தில் தான் பெண்களின் கருவில் இருக்கும் சிசுவை பற்றி சில நாட்களிலேயே கண்டறியும் ஞானத்தை பெற்றுள்ளோம்
இஸ்லாம் என்பது இந்த நூற்றாண்டில் இறைவனால் வழங்கப்பட்ட மார்க்கம் இல்லை
பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே நபி (ஸல் )அவர்களால் நினைவு படுத்தப்பட்ட மார்க்கமாகும்
இந்த மார்க்கம் எல்லா காலத்திற்க்கும் மனிதர்களுக்கு வழி காட்டும் மார்க்கமாக பொறுத்தமான மார்க்கமாக வழங்கப்பட்டுள்ளது
நபியவர்களின் காலத்திலே நீங்கள் கூறுவதை போல் அல்லாஹ் சட்டம் சொல்லியிருந்தால் அவர்களின் காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு இந்த இஸ்லாம் அவர்களின் அறிவுக்கு பொருந்தாத மார்க்கமாக தோற்றமளித்திருக்கும் காரணம் நபியவர்களின் காலத்தில் இன்றைய விஞ்ஞான வளர்ச்சி இருக்கவில்லை
ஒரு பெண்ணிண் வயிறு கருவுருவதால் பெரிதாக காட்சி தரும் நிலையை வைத்து மட்டும் தான் அந்த பெண் கர்ப்பமானவள் என்பதை அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் அறிந்து கொள்வார்கள்
---------------------------------------
கணவனை இழந்த பெண்கள் கர்ப்பமாக இருந்தால் பிரசவிக்கும் வரையிலும், கர்ப்பமாக இல்லாவிட்டால் நான்கு மாதம், பத்து நாட்கள் முடியும் வரையிலும் மறுமணம் செய்யக் கூடாது என்பதே இத்தாவாகும்
கணவனுடன் வாழ்ந்தவள் அவனது கருவைச் சுமந்திருக்கலாம் அந்த நிலையிலேயே அவள் உடனடியாக இன்னொருவனை மணந்து கொண்டால் அந்தக் குழந்தையின் எதிர்காலம் பாதிப்படையும்
இரண்டாம் கணவன் அக்குழந்தை தனது குழந்தை இல்லை எனக் கூறுவான்
முதல் கணவனின் குடும்பத்தாரும் அது தமது மகனின் குழந்தை இல்லை எனக் கூறி விடுவர்
இதனால் தந்தை யார் என்பதே தெரியாததால் மனரீதியான பாதிப்புகள் அக்குழந்தைக்கு ஏற்பட வாய்புண்டு
தகப்பனிடமிருந்து கிடைக்க வேண்டிய சொத்துரிமை கிடைக்காமல் போய் விடும்
இன்னொருவரின் குழந்தையைச் சுமந்து கொண்டு என்னை ஏமாற்றி விட்டாள் என்று இரண்டாம் கணவன் நினைத்தால் அப்பெண்ணின் எதிர்காலமும் நாசமாகிவிடும்
ஒரு பெண் கருவுற்றிருப்பதை முதல் மாதமே அப்பெண் உடலியல் மாற்றங்களை கொண்டு அறிந்து கொண்டாலும் அதை அவள் மறைக்க முயற்சிக்கலாம்
அல்லது சிசு கருவில் இருக்கும் போதே அதை மூடி மறைத்து இன்னொருவனைத் திருமணம் செய்யலாம்
அதே நேரம் நான்கு மாதம் பத்து நாட்கள் கழிந்த பின் இவ்வாறு ஒரு பெண்ணால் கூற முடியாது காரணம் கர்ப்பமாக இருப்பது வெளிப்படையாகவே தெரிந்து விடும்
சில வேளை குறைப் பிரசவமாக அப்பெண் ஒரு குழந்தையை பெற்றெடுத்தால் அது முந்தைய கணவனுடையதாக இருக்குமோ என்று இரண்டாம் கணவன் சந்தேகப்படும் சூழ்நிலையும் உருவாகும்
நான்கு மாதம் பத்து நாட்கள் கடந்த பின்பு அவன் அப்பெண்ணை திருமணம் செய்திருந்தால் இப்படிக் கூற முடியாது
குழந்தை இருந்தால் தான் நான்கு மாதத்தில் வெளிப்படையாகத் தெரிந்திருக்குமே என்று அவன் உண்மையை விளங்கிக் கொள்வான்
இத்தகைய காரணங்களால் தான் பெண்களின் மணவாழ்வு நன்றாக அமைய வேண்டும் என்ற நன்நோக்கத்திலும் அவளது குழந்தையின் எதிர்காலப் பாதுகாப்புக்காகவும் தான் இறைவன் இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளான்
என்று புரிந்து கொண்டால் ஷரீஅத் சட்டத்தின் உண்மையை தெளிவாக உணரலாம்
----------------------------------------
அறிவியல் உண்மை
---------------
ஒரு மனிதனுக்கு தனது கைகளில் ரேகை இருப்பதைப் போலவே அவனது இந்திரியத் துளிக்கும் ரேகை அமைந்துள்ளது
ஒரு முறை அந்த இந்திரியம் எந்தப் பெண்ணிண் மறை பாகத்தில் படுகின்றதோ அந்த இடத்திலும் அந்த இந்திரியத்தின் ரேகை பதிந்து விடுகின்றது என்கின்றது அறிவியல்
அந்த ரேகை அவ்விடத்திலிந்து அழிவதாக இருந்தால் அதற்கு 130-நாட்கள் ஆகும் என்றே நவீன விஞ்ஞானம் சொல்கின்றது
இதை நீங்கள் சிந்தித்து பார்த்தால் ஏற்கனவே மணமான ஒரு பெண்ணை விவாகரத்துக்கு பின்னோ அல்லது கணவனை இழந்த பின்னோ வேறு ஒருவருக்கு மணமுடித்து கொடுக்கும் போது ஏற்கனவே இருந்த கணவரின் இந்திரிய ரேகைக் கூட சுத்தமான பின்பு தான் ஒரு பெண் மற்ற ஆடவனுக்கு அவள் உரிமைபட்டவளாக ஆக வேண்டும் என்பதே யாவற்றையும் அறிந்த இறைவனின் எதிர்பார்பாகும்
பெண்களை இவ்விசயத்திலும் இஸ்லாம் கண்ணியப் படுத்துவதை அறிவாளிகள் புரிந்து கொள்வர்
நட்புடன் J.இம்தாதி
Comments
Post a Comment