கல்வியறிவும் பகுத்தறிவும்
கல்வியே தேவை மதிப்பெண்
மோகமே போதை
√|||===========|||============|||√
17-05 -2017 கட்டுரை எண் 1087
-----------------------------
J. யாஸீன் இம்தாதி
!+++++++++!
Bismillahir Rahmanir Raheem
!! -------------------------------!!
பிளஸ் டூ தேர்வில் வெற்றி பெற்றதால் ஒருவர் சொர்க்கத்தை அடைய போவதும் இல்லை தோற்று விட்டதால் நரகை அடையப் போவதும் இல்லை
மதிப்பெண் போதையை தூக்கி எறியுங்கள் படிப்பு வேறு பகுத்தறிவு வேறு
மதிப்பெண் பெற்றவர்களுக்கு எல்லாம் வேலை கிடைப்பதும் உறுதி இல்லை
அதே நேரம் படிக்காத காரணத்தால் ஒருவர் பிச்சை எடுத்தால் தான் பிழைக்க முடியும் என்ற சூழ் நிலையும் இல்லை
முயற்சி செய்தவர் எல்லாம் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்று இருந்தால் நல்லோர்களுக்கு எதற்க்கு
உலகில் சோதனை ?
மன வேதனை ?
படிக்காத மேதைகளின் வித்துக்களே இன்றைய அறிவியலின் முன்னேற்றம் என்பதை மறந்து விடாதீர்
அறிவிளிகள் இருப்பதால் தான் அறிவாளிகளுக்கே மதிப்பு என்ற பரம இரகசியத்தை நீ இன்னும் புரியலை
படிக்காதவர்கள் ஓலையில் விசிறியை கண்டு பிடிக்காவிட்டால் படித்தவர்களின் அறிவில் அதாவது அறிவியலில் மின் விசிறி தோன்றி இருக்காது
படிக்காதவர்கள் பானையில் குளிர் நீரை கண்டு பிடிக்காவிட்டால் படித்தவர்கள் அறிவியலில் ஏசியையும் ரெப்ரிஜிரேட்டரை கண்டு பிடித்து இருக்க முடியாது
அறிவியல் ஞானம் தேவை தான் ஆனால் அறிவியல் தான் வாழ்கை என்று நீ நினைத்தால் அது தான் மடமைத்தனம்
கல்வி ஞானம் தேவை ஆனால் அதில் அனைவரும் சமநிலை என்ற எதிர்பார்போ கல்வி மீதுள்ள போதை
மதிப்பெண் பெறாதவன் மதிகெட்டவன் அல்ல
ஞான ஆசை என்பது நம்பிக்கை அதற்க்கு ஏற்ற முயற்சி என்பதே அதன் தும்பிக்கை
தும்பிக்கை பலம் பெற்ற யானை கூட பலத்தில் அவைகளை விட கீழ் நிலையில் உள்ள மனிதனின் கட்டளைகளை ஏற்று நடப்பது மனிதனின் முயற்சி ஆற்றல் அல்ல
மாறாக அதுவே இறைவனின் நியதி
அதே போல் கல்வி ஞானம் என்பது இறைவன் மனிதர்களில் சிலர்களுக்கு தரும் விஷேசமான பாக்கியம்
இதில் நீ மேல் அவன் கீழ் என்று ஆணவம் கொண்டு அலையாதீர்
عَنْ أَبِي سَعِيدِنِ الْخُدْرِيِّؓ عَنْ رَسُولِ اللهِ ﷺ قَالَ: لَنْ يَشْبَعَ الْمُؤْمِنُ مِنْ خَيْرٍ يَسْمَعُهُ حَتَّي يَكُونَ مُنْتَهَاهُ الْجَنَّةُ
உண்மை விசுவாசி நன்மையை (கல்வி ஞானத்தை)க் கொண்டு ஒருபோதும் மன நிறைவு அடையமாட்டான்
கல்வி ஞானங்களை (இல்மை) கற்றுக் கொண்டே இருப்பான் எதுவரை என்றால், அவனுக்கு மரணம் வந்து சுவர்க்கத்தில் நுழையும் வரை
என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஸஈத் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
நூல் திர்மிதி
இப்படிக்கு J. இம்தாதி
Comments
Post a Comment