மாட்டிறைச்சி விவகாரம்
நாட்டை ஆள்வோர் மாட்டை
!! மேய்க்கவா தகுதியானவர்கள் !!
♦=♦=♦=♦=♦=♦=♦=♦=♦=♦
|<^><^><^><^><^><^><^><^><^><^><^>|
30-05 -2017 கட்டுரை எண் 1093
-----------------------------
J. யாஸீன் இம்தாதி
!+++++++++!
Bismillahir Rahmanir Raheem
!! -------------------------------!!
நாட்டில் வாழும் குடி மக்களை பற்றி சிந்திக்க வேண்டிய மாநில அரசாங்கம் நாட்டில் வாழும் மாட்டை பற்றி பேசுவதையும் அதற்க்கு அடையாள அட்டை தருவதையுமே தற்போது நாட்டுக்கு செய்யும் சேவையாக மதவாத அரசியல் கட்சியான பீஜேபி அரசாங்கம் தனது செயல்பாட்டை அமைத்துள்ளது
மக்கள் கொந்தளிக்கின்ற ஒரு விசயத்தில் புதுமையான சட்டத்தை போட்டால் அந்த சட்டத்தை மக்கள் ஏற்கிறார்களா அல்லது மறுக்கிறார்களா அதன் மூலம் நாட்டில் விவகாரங்கள் ஏற்படுமா என்று அக்கரையோடு பார்க்க வேண்டிய நம் பாரத பிரதமர் வழக்கம் போல் மக்களின் வரிப்பணத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணத்தை மேற்கொண்டுள்ளார் 1000. 500 ரூபாய் நோட்டை செல்லத்தகாததாக அறிவிப்பு செய்த போதும் அதன் காரணத்தால் பல விதமான இழப்புகளை நாட்டு மக்கள் அனுபவித்த போதும் இதே போல் தான் வெளிநாட்டு பயணத்தில் மக்கள் வரிப்பணத்தில் ஜாலியாக சுற்றி திரிந்தார்
மாட்டை வெட்டுவதற்க்கு தடை போட்ட மாநில அரசாங்கம் அதற்க்கு முன்னுதாரணமாக வருடத்திற்க்கு 65000 கோடி வருமானம் ஈட்டுகின்ற கால் நடை இறைச்சி மற்றும் தோல் ஏற்றுமதியை தடை செய்திருந்தால் அதை கூட வாதத்திற்க்கு ஏற்றுக் கொள்ளலாம்
ஆனால் அதை தடை செய்யாமல் இருப்பதற்க்கு மூல காரணம் ஏற்றுமதி செய்கின்ற அனைத்து கோடீஸ்வரர்களும் பீஜேபி கட்சியின் அரசியல்வாதிகளும் ஆதரவாளர்களும் தான் என்பதை திட்டமிட்டு மூடி மறைக்கின்றனர்
காரணம் இறைச்சி என்று சொன்னவுடன் அதை வைத்து வியாபாரம் செய்வோர் முஸ்லிம்கள் தான் என்ற ஒரு மக்கள் நம்பிக்கையை தங்களின் சுயநலத்திற்க்கு சாதகமாக ஆக்க துடிக்கின்றனர்
நம் நாட்டில் பலதரபட்ட உணவுகளை மக்கள் உண்ணுகின்ற காரணத்தால் தான் உணவு பொருள்களின் விலைவாசி ஓரளவு கட்டுக்கோப்பில் உள்ளது ஏழை மக்கள் விரும்பி உண்ணும் மாட்டிறைச்சியை தடை செய்யும் போது அதனால் பல கோடி வியாபாரிகளின் வாழ்கை நாசமாக்கப்படுவதோடு ஒரு கிலோ ஆட்டிறைச்சி 3000 ரூபாயாகவும் ஒரு கிலோ கோழி இறைச்சி 900 ரூபாயாகவும் விற்கப்படும் அவல நிலையே ஏற்படும்
அது போக மாட்டிறைச்சியை அதிகமாக உண்ணுபவர்கள் நம் இந்து சகோதரர்கள் என்பதையும் மூடி மறைத்து உள்ளனர்
இது போல் சட்டங்களை இயற்றும் போதெல்லாம் நாட்டின் பல பகுதிகளில் முஸ்லிம் இறைச்சி விற்பனையாளர்கள் மதவாதிகளால் தாக்கப்படுவதும் கொலை செய்யப்படுவதும் சமூக வளை தளங்களில் அடிக்கடி சாதாரணமாக காணப்படுகிறது
மாட்டிறைச்சி விற்பனையால் நம் நாட்டிற்க்கு பல வகைகளில் பொருளாதார முன்னேற்றம் தான் ஏற்பட்டுள்ளதே தவிர இதை மத்திய அரசாங்கம் தடை செய்ய முற்படுவதால் நம் நாட்டு மக்களுக்கு மட்டும் அல்ல மாட்டிற்க்கு கூட ஒரு புண்ணாக்கு நன்மையும் எற்படப்போவது இல்லை
கருப்பு பணத்தை மீட்க போகிறோம் என்று சொல்லி மக்களின் கையில் இருந்த நல்ல நோட்டுக்களையும் கள்ள நோட்டுகள் போல் செல்லாததாக அறிவிப்பு செய்து அதன் மூலம் ஒரு சாதனையையும் பீஜேபி அரசாங்கம் செய்யவில்லை
இதுவரை பிடிபட்ட கருப்பு பணம் எத்தனை கோடி என்றும் புதிய ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்க மக்களின் வரிப்பணம் எத்தனை கோடி செலவிடப்பட்டது என்றும் கூற நாட்டு மக்களுக்கு கணக்கு காட்டவில்லை
ஒரு வேலை நாட்டு மக்கள் அதை பற்றி நம்மிடம் கேள்வி கேட்க துவங்கி விடுவார்களோ என்ற அச்சத்தின் காரணமாகவும் அதை நாட்டு மக்களுக்கு மறக்கடிக்க செய்யவும் தான் அடிக்கடி இது போல் நடைமுறைக்கு சாத்தியமில்லாத நாட்டின் வளர்ச்சிக்கு பலன் தராத மக்களின் நிம்மதிக்கு உலை வைக்கின்ற சட்டங்களை போட்டு வருகின்றனர்
ஆட்சி மாற்றம் எற்படாமல் இது போல் சர்வாதிகார ஆட்சியாளர்களின் அக்கிரமங்களுக்கு முடிவு கட்ட இயலாது
நட்புடன் J. இம்தாதி
Comments
Post a Comment