மென்மை கவி

  என் சிந்தனையில் உதித்தவை

  வடிவம்  - ஜே.யாஸீன் இம்தாதி

         ======================
              03-11-17- வெள்ளி
                   ****************

1-பாடங்களை நடத்துவோருக்கு அவசியமற்ற  கோபங்கள் இருந்தால் அவர்களின் பாடங்கள் கூட  பயனில்லாத உழுத்த பாலங்களாகவே அமையும்

2-பணிவுகளை அடிமைகளாக கருதும் மனிதன் சமூக பார்வையில் பல கீழ்நிலை  குனிவுகளையே எதிர் கொள்வான்

3-இடத்திற்க்கு ஏற்ற விதை போடாதவனும்  நபருக்கு ஏற்ற நடை போடாதவனும் அதன் விளைச்சலில் ஏமாற்றத்தையே அடைவான்

4- துணை தேர்வில் சீதனத்துக்கு மட்டுமே  முதலிடம் தருபவன்  அவன் மனை தேர்வில் பொட்டல் வழியை தேர்வு செய்தவன் போலாவான்

5- உண்மைகள் உறங்கும் போது தீமைகள் துள்ளி குதிக்கும் நன்மைகள் வீருகொண்டு எழுந்தால் தீமைகளே தள்ளாடி துடிக்கும்

6-கஷ்டங்களை இஷ்டங்களை போல் கருதி பழகினால் துஷ்டங்கள் கூட உனை கண்டு தூரமாகும் 
ஆனால் உன் வாழ்வின் சிறு நஷ்டங்களையே கஷ்டங்களாக கருதினால் மன நோயே அதன் மைத்துனன் ஆகும்

7- விழுதுகளை வீழ்ந்து தினம்  கவனித்தால் விருதுகளை கூட நீ பெறலாம்
ஆனால்  வாழ்கை சரிவுகளை நீ சுமையாய் சுமந்தால் உன் குறுதிகள் கூட வலுவிழந்து போகும்

8- ஆட்டங்களையே தேட்டங்களாக நீ தேடினால் உன்  மன ஓட்டங்களும் ஊனமாகிப் போகும்
உன்  வாட்டங்களையே ஏணி படியாக நீ அமைத்தால் அதுவே உனை ஒய்யாரம் கொண்டு போகும்

9-திருத்தங்கள் இல்லாத வருத்தங்கள்  நடிகனுக்கு இணையான பாத்திரங்களே !! நடிப்பு  சாயம் வெளுத்தால் சாதா மனிதனே


10- மொழிகளால் கைது செய்பவன் திறமைசாலி  தன் விழிகளால் கைது செய்பவள்  சல்லாபக்காரி

11- ஏற்றம் இல்லா வணிகமும் மாற்றம் இல்லா வாழ்கையும் இனிக்காது

12-பாசமானவர்களிடம் வேஷம் கலையும் போது தான் மன உருத்தலின் வேதனையே கிளை துளிர துவங்கும் அதுவே உன் தவறுக்கான தண்டனை

தண்டனைகள் திருந்துவதற்கே தவிர அதை நினைத்தே வாழ் நாள் முழுவதும் வருந்துவதற்க்கு அல்ல

13-உன்  கால்கள் உன்னோடு   இருக்கும் வரை சாதா  கை தடியின் அருமை கூட  உனக்கு புரியாது !!
ஆனால்  கை தடியின் துணை தான் இனி உனக்கு என்றால் அப்போது தான் புரியும் உன் காலின் மகிமை என்ன என்று  ?

14- இருப்பதை உன் கரங்களால் தொட்டு பார் இல்லாததை உன் கற்பனையால் தொடாதே  !! கானல் நீரும் இயலா கற்பனை குணமும் ஒன்றே

         நட்புடன்  J . இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்