சமூக வலை தளம் அழைப்பு பணி

            சமூக வலைதளங்களில்

!அழைப்புபணியும் ஆபத்துகளும்! !

  ||=============================||
      01-03 -2017 கட்டுரை எண் 1073
               -----------------------------

             J. யாஸீன் இம்தாதி
                     !+++++++++!

      Bismillahir Rahmanir Raheem

             !! -------------------------------!!

இஸ்லாத்தை பிறர்களுக்கு எத்தி வைப்பதற்க்கும் அறிவதற்க்கும் மிகவும் எளிமையான சாதனமாக தற்காலத்தில் பயன்படுவது

சமூக வளைதளங்களும் வாட்சப் போன்ற தொலை தொடர்பு சாதனங்களும் என்பதை மறுக்க முடியாது

அதே நேரம் சமூக வளைதளங்களின் மூலம் செய்யும் அழைப்பு பணியே இஸ்லாம் கூறும் சிறப்பான பணி என்று புரிந்து கொள்ள கூடாது

காரணம் இஸ்லாத்தை பிரச்சாரம் செய்வதால் எது போன்ற விளைவுகள் ஏற்படும் என்று இஸ்லாம் குர்ஆன் மூலம் முன்னறிவிப்பு செய்கின்றதோ அவைகளில் எந்த ஒரு இழப்பையும் தியாகத்தையும் சமூக வலை தளங்களின் மூலம் அழைப்பு பணிகளை மேற்கொள்ளும் எவரும் அடைந்தது இல்லை

சமூக வலைதளங்கள் மூலம் எழுத்துக்களால் புகைப்பட வாசகங்களால் பிரச்சாரம் செய்யும் பலர்கள் அவர்கள் சார்ந்த சமூக களத்தில் நேரடியாக தங்களை ஈடுபடுத்தி கொள்வதில்லை என்பது முற்றிலும் உண்மை

இந்த வழிமுறை தான் இஸ்லாத்திற்க்கு செய்யும் தியாகம் என்று நினைத்தால் இந்த அர்ப்பமான அழைப்பு பணியை ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியரும் கூட செய்ய முடியும் செய்து கொண்டு தான் உள்ளனர்

எனவே நேராக நீங்கள் சந்திக்கும் நபர்களிடமும் உங்கள் அழைப்பு பணியை துவங்குங்கள் அதுவே சிறந்த அழைப்பு பணியாகும்

     !!!++++++++++++++++++++++!!!

குறிப்பாக இஸ்லாமிய வாட்சப் குரூப்களின் மூலம் மார்க்கம் கற்று கொள்கின்றோம் என்று குடும்ப பெண்கள் குரூப்களில் அங்கம் வகிப்பதில் மிகவும் எச்சரிக்கை தேவை

காரணம் முஸ்லிம் சமுதாய பெண்களில் கடந்த காலங்களிலே இருந்த தொலைகாட்சி சீரியல் மோகம் குறைந்து தற்போது இஸ்லாமிய வாட்சப் குரூப் மோகம் அதிகரித்து இருப்பதாக அவர்களின் கணவன்மார்களே அடிக்கடி புலம்புவதை சாதாரணமாக கேள்வி படுகின்றோம்

அதனால் வீட்டில் செய்ய வேண்டிய அடிப்படை கடமைகளிலும் கணவன் பிள்ளைகளுக்கு செய்யும் அடிப்படை கடமைகளில் கூட கவனம் செலுத்தாதவர்களாக உள்ளனர் என்ற மன உளைச்சல் இன்று குடும்ப தலைவர்களிடம் அதிகரித்து உள்ளது

இந்த நிலை தொடருவதால் தான்  நல்லறமும் இல்லறமும் கெட்டு கணவன் மனைவியருக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் தலைவிரித்தாட இது மிகவும் முக்கிய காரணமாக அமைந்துள்ளது

எனவே குடும்ப பெண்கள் இதில் கவனம் செலுத்துவதை குறைத்து அதற்க்கு என்று குறுகிய நேரத்தை மட்டும் தேவைப்படுமானால் ஒதுக்க வேண்டும் அதிலும் குறிப்பாக கல்லூரிகளில் பள்ளிக்கூடங்களில் படிக்கும் இளம் பெண்கள் மற்றும் பயிலும் வாலிபர்கள் குரூப்களில் அங்கம் வகிப்பதை பெற்றோர்கள் வன்மையாக கண்டிக்க வேண்டும்

அவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்தாமல் இருப்பதற்க்கும் அவர்களின் படிப்பில் ஆர்வம் குறைந்து காணப்படுவதற்க்கும் இதுவே மூல காரணமாக அமைந்துள்ளது என்பதை மறந்து விடக்கூடாது

தீயதை தூண்டி மனிதனின் மனதை கெடுக்கும் ஆற்றல் சாத்தானுக்கு இருப்பது போல் நல்லதை தூண்டுவது போல் ஆர்வத்தை ஏற்படுத்தி அந்த நல்லதின் மூலமே மக்களை வழிகெடுக்கும் ஆற்றலும் சாத்தானுக்கு உண்டு என்பதை ஏனோ முஸ்லிம் சமுதாயம் புரிந்து கொள்ளவில்லை

இது போன்ற காரணங்களை சிந்தித்து தான் கடந்த வருடங்களில் நாம் நேரடியாக நடத்தி வந்த இஸ்லாமிய பெண்கள் வாட்சப் குரூபை கூட முறைப்பிரகாரம் அப்போதே கலைத்து விட்டோம்

قَالَ رَبِّ اِنِّىْ دَعَوْتُ قَوْمِىْ لَيْلًا وَّنَهَارًا ۙ‏ 

பின்னர் அவர் என் இறைவா

நிச்சயமாக, நான் என் சமூகத்தாரை இரவிலும், பகலிலும் (நேர்வழியின்பால்) அழைத்தேன்

        (அல்குர்ஆன் : 71:5)

وَمَنْ اَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَاۤ اِلَى اللّٰهِ وَعَمِلَ صَالِحًا وَّقَالَ اِنَّنِىْ مِنَ الْمُسْلِمِيْنَ‏ 

எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?” (இருக்கின்றார்?)

         (அல்குர்ஆன் : 41:33)

              நட்புடன் J. இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்