இளமை கால பயணம்

             இலட்சிய பயணமே

     இலட்சங்களுக்கு  மேலானது

♦=♦=♦=♦=♦=♦=♦=♦=♦=♦

   |<^><^><^><^><^><^><^><^><^><^><^>|
                     28-05 -2017         
             கட்டுரை எண் 1091
             -----------------------------
            J. யாஸீன் இம்தாதி
                   !+++++++++!
     Bismillahir Rahmanir Raheem
           !! -------------------------------!!

திருமணத்திற்க்கு முன்பே ஒரு ஆடவன் பெண்ணுக்காக கண்ணீர் சிந்தினாலும் ஒரு பெண் ஆடவனுக்காக கண்ணீர் சிந்தினாலும் அந்த கண்ணீரின் பின்னனியில் அவர்களின் அறியாமையும் எதார்தத்திற்க்கு மாற்றமான கற்பனை சிந்தனையும் தான் மேலோங்கி இருக்கும் என்பதே உண்மை

எந்த அந்நியப் பெண்ணும் ஒரு ஆடவனுக்கு உலக அதிசயமும் அல்ல எந்த அந்நிய ஆணும் ஒரு பெண்ணுக்கு உலக அதிசயமும் அல்ல

கானல் நீரை போன்றே கற்பனை வாழ்கையும் மூடர்களின் முக்கிய பாலம் ஆகும்

இலட்சியங்களை நோக்கி பயணிப்பதே வாழ்கையின் முன்னேற்ற படிகள் இந்த பயணத்தின் தோல்வியில் கூட முயற்சியின் நறுமணம் கமழவே செய்யும்

வாகனத்தை ஓட்டுபவனின் சிந்தனை சற்று தடுமாறினாலும் அவனை நம்பி பயணத்தை நோக்குபவர்களுக்கும் அதுவே சாவுமணியின் அறிகுறி

இளமை சொந்தங்களுக்கு அவர்களின் சிந்தனை மாறினாலும் அதன் இழப்புகளும் கசப்புகளும் அவர்களை நம்பியிருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கே போய் சேரும்  என்பதை மறந்து விடாதீர்

சுருங்க சொன்னால் பெண் ஆசை நீ ஈட்டி வைத்த பொன்னையே முற்றிலும் அழிக்கும்

உன் வாழ்கை இலட்சிய பயணத்தின் வெற்றி ஆசையோ உன் குடும்ப முன்னேற்றத்தின் தடை கற்களையே பொசுக்கும்

وَاَنَّ سَعْيَهٗ سَوْفَ يُرٰى

‏   அன்றியும், நிச்சயமாக அவன் முயற்சி(யின் பலன்) பின் அவனுக்குக் காண்பிக்கப்படும்

           (அல்குர்ஆன் : 53:40)

اِنَّ سَعْيَكُمْ لَشَتّٰى‏

நிச்சயமாக உங்களுடைய முயற்சி பலவாகும்

         (அல்குர்ஆன் : 92:4)

             நட்புடன் J. இம்தாதி

Comments

Popular posts from this blog

இயற்கை சீற்றங்களால் இஸ்லாம் மிளிர்கிறது

மனித உறுப்பு

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்