பர்தா ஹிஜாப்
பர்தா ஓர் பார்வை
முகத்தை மறைப்பதா திறப்பதா
இஸ்லாமிய ஆய்வு
★ ★ ★ ★ ★
ஈமான் கொண்ட பெண்கள் மட்டும்
கேள்வி கேட்டவர்
உறுப்பினர் R.முஸ்லிமா பாத்திமா
அனுப்பியவர் அட்மின்
இம்ரான் தஸ்லிமா
சென்னை
√√√√√√√√√√√√√√√√√√√√√√√√√
30-12-15
J.யாஸீன் இம்தாதி
----------------
Bismillahir Rahmanir Raheem
+++++++
கேள்வி
பர்தா என்பதற்கு சரியான விளக்கம் என்ன? காரணம் என்ன ?
பெண்கள் முகத்தை அவசியம் மூட வேண்டுமா ?
++++++++++++++++
பதில்
பர்தா எனும் சொல் உருது வார்த்தையாகும்
அரபியில் ஹிஜாப் அதாவது தடுக்கும் பொருள் என்று பொருள்
இஸ்லாமிய வழக்கில் ஒரு பெண் தனது உடலை அந்நியர்களிடமிருந்து பாதுகாக்க அணியும் ஆடைக்கு தான் ஹிஜாப் பர்தா என்று சொல்லப்படும்
இது கருப்பு நிறத்தில் தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை
எந்த நிறத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம
ஆனால் அது மெல்லியதாகவோ இருக்கமானதாகவோ பிறர்களை சுண்டி இழுக்கும் வகைகளிலோ அமைந்திருக்கக் கூடாது என்பது தான் சர்த்தாகும்
இந்த அதிகப் படியான கட்டுப்பாடுகளும் கூட ஒரு பெண் அந்நிய இடங்களில் உலவும் போது தானே தவிர
தனது இல்லத்திலோ மஹ்ரமான நபர்களுக்கு மத்தியிலோ அல்ல
காரணம் என்ன ?
===============
ஒரு ஆண் தனது அறிவாலும் ஆண்மையாலும் தான் ஒரு பெண்ணை அதிகமாக இயல்பாக
கவரமுடியுமே தவிர
அவன் தனது உடல் கவர்ச்சியை காட்டி அந்நிய பெண்களை கவருதல் என்பது மிக குறைவு
அதனால் தான் ஒரு ஆண் தன் உடலை எந்தளவு மறைத்தால் போதுமானதோ
அதை விட கூடுதலாகவே ஆண்கள் ஆடை உடுத்துகின்றனர்
அவ்வாறு உடுத்துவதையே கண்ணியமாகவும் கருதுகின்றனர்
திரைப்படங்கள் விளம்பரங்கள்
இவைகளில் பெண்களை மட்டும் கவர்ச்சிப் பொருளாக காட்டப் படுகிறது
அதற்கு மூல காரணம் பெண்கள் தான்
ஆடை என்பது தனிப்பட்ட ஒரு மனிதனின் உரிமை என்றாலும்
அதனால் ஏற்படும் நன்மை தீமைகளை கருத்தில் வைத்து தான் சட்டங்களை இயற்ற முடியும்
காரணம் சமுதாயத்தின் ஒழுக்கமும் பண்பாடுகளும் சீர்குழையாமல் இருத்தல் அவசியம்
ஆடை விசயத்தில் பெண்களுக்கு எந்த கட்டுபாடுகளை நாம் கூறுகிறோமோ அந்த கட்டுப்பாடுகளை பின் பற்றும் எவருக்கும் அவர்களால் பிறருக்கும் தீங்குகள் ஏற்பட்டதில்லை
ஹிஜாப் அணியும் காரணத்தால் பெண்கள் வேலை செய்யவும் இடையூரும் இல்லை
படிக்கவும் தடை இல்லை
பதவிகளில் இருக்கவும் தடை இல்லை
நம் தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதாவும் கூட இஸ்லாம் சொல்கின்ற விதத்தில் தான் தனது ஆடையை அமைத்து இருந்தார் தலை நீங்கலாக
இது அவரை புகழ்வதற்கு இல்லை
அந்த கட்டுப்பாடுகளை பின்பற்றி ஒரு பெண் முதல்வராகவும் வர முடியும் என்பதற்கு தான் இந்த எடுத்து காட்டு
பஸ்களில் கையை பிடித்தான் உரசினான் கற்பழித்தான் கேவளமாக வர்ணித்தான் என்று மகளிர் காவல் நிலையம் எறி பர்தா அணியும் இஸ்லாமிய பெண்கள் குற்றம் சுமத்துவது அரிதிலும் அரிது
எது பெண்களுக்கு பாதுகாப்போ அதை எதிர்ப்பது அறிவார்த்தமான செயல் இல்லை
ஹிஜாபை தவிர்த்தால் ஏற்படும் விளைவுகள் ஏராளம்
முதல் விளைவு
√√√√√√√√√√√√√√√√√√√√√√√√√√√√
1-- பெண்மைக்கும் மனம் உண்டு சுக துக்கங்கள் உண்டு என்ற பார்வையில் பார்க்க வேண்டிய ஆண்கள்
அப்பெண்களை காமப் பார்வையிலேயே பார்க்கும் நிலை தான் அதிகம் ஏற்பட்டுள்ளது
இதை ஏற்படுத்தியவர்கள் அறியாமை பெண்களே
2-- கட்டுப்பாடுகளோடு வாழ வேண்டும் என்ற முடிவு எடுத்த ஆண்களும் கூட
அடிக்கடி பெண்களின் கவர்ச்சியை பார்க்கும் நிலைக்கு தள்ளப்படுவதால் அவன் தனது சுய கட்டுப்பாட்டை இழக்க நேரிடுகிறது
இதனால் அவனது மனைவியும் அவனது பார்வைக்கு இல்லறத்தில் அழகற்றவளாக ஈர்ப்பு தன்மை குறைந்தவளாக தெரியுமளவிற்கு மனரீதியாக பாதிக்கப் படுகிறான்
3-- அடிக்கடி பெண்களை கவர்ச்சியாக ஆண்கள் பார்க்கும் பொழுது அவர்களின் ஆண்மை அதிக உந்துதலுக்கு இலக்காய் மாறி உணர்ச்சி ஹார்மோன்கள் அதிகமாக அவர்களை அறியாமலேயே வீணாகிறது
நாள் பட ஆண்மை இழப்பிற்க்கும் இல்லற பழகீனத்திற்கும் நல்ல ஆண்களும் ஆளாகின்றான்
ஆனால் இதை அதிகப்படியான ஆண்கள் வெட்கவுணர்வாலும் குற்றவுணர்வாலும் வெளியில் சொல்வதில்லை
மனித சமுதாயத்தின் விருத்திக்கு எது காரணமாக இருக்கின்றதோ அதை பாழாக்கும் விதத்தில் பெண்கள் ஆடை அணிவது எவ்விதத்தில் நியாயம் ?
திருடாதீர்கள் என்று சொல்வதை விட திருட்டு போகாமல் இருக்க செய்யும் பாதுகாப்புகளை மேற்கொள்வது தான் முதல் கடமை என்பதை பெண்கள் உணர வேண்டும்
ஆனால் பெண்களில் தொண்ணூறு சதவிகிதம் தனது கவர்ச்சியை ஏதாவது ஒரு விதத்திலே ஆண்கள் இரசிக்க வேண்டும் என்று தான் அதிகம் விரும்புகின்றனர்
அதனால் தான் ஒரு பெண் தனது முட்டிக்கால் முதல் பாதத்தின் கரண்டை வரை ஆடையால் மறைப்பதை பார்க்கிறோம்
அதே நேரத்தில் அதை விட பல மடங்கு ஒரு ஆணை ஈர்க்கும. கவர்ச்சி பகுதி பெண்களின் வயிற்றுப் பகுதி
அந்த பகுதியை சர்வ சாதாரணமாக பல பெண்கள் திறந்து காட்டி அலைவதை பார்க்கிறோம்
இதை வேண்டும் என்ற செய்யும் பெண்களே அதிகம்
அதே நேரத்தில் ஆடை கலாச்சாரமாக கருதி அதை பற்றி சிந்திக்காமல் அறியாமல் இருக்கும் பெண்களும் உள்ளனர்
முகத்தை மூட வேண்டுமா?
√√√√√√√√√√√√√√√√√√√√√√√√√√
முஸ்லிம்களுக்கு மத்தியில் இதைப் பற்றி இரு விதமான கருத்துக்கள் நிலவுகின்றது
ஹதீஸ்களை நடுநிலையோடு ஆய்வு செய்தால் ஒரு பெண் விரும்பினால் தனது முகத்தை மூடியும் இருக்கலாம் மூடாமலும் இருக்கலாம் என்றே தெளிவு கிடைக்கிறது
★ ★ ★ ★
முகத்தை மூடாமலும் இருக்க
ஆதாரம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ﻣﺴﻨﺪ ﺃﺣﻤﺪ ﺑﻦ ﺣﻨﺒﻞ - ﻥ - ( ﺝ 3 / ﺹ 330 )
14577 - ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ ﺍﻟﻠﻪ ﺣﺪﺛﻨﻲ ﺃﺑﻲ ﺛﻨﺎ ﻋﺒﺪ ﺍﻟﺼﻤﺪ ﺣﺪﺛﻨﻲ ﺣﺮﺏ ﻳﻌﻨﻲ ﺑﻦ ﺃﺑﻲ ﺍﻟﻌﺎﻟﻴﺔ ﻋﻦ ﺃﺑﻲ ﺍﻟﺰﺑﻴﺮ ﻋﻦ ﺟﺎﺑﺮ ﺑﻦ ﻋﺒﺪ ﺍﻟﻠﻪ ﺍﻷﻧﺼﺎﺭﻱ : ﺃﻥ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ ﺭﺃﻯ ﺍﻣﺮﺃﺓ ﻓﺄﻋﺠﺒﺘﻪ ﻓﺄﺗﻰ ﺯﻳﻨﺐ ﻭﻫﻲ ﺗﻤﻌﺲ ﻣﻨﻴﺔ ﻓﻘﻀﻰ ﻣﻨﻬﺎ ﺣﺎﺟﺘﻪ ﻭﻗﺎﻝ ﺇﻥ ﺍﻟﻤﺮﺃﺓ ﺗﻘﺒﻞ ﻓﻲ ﺻﻮﺭﺓ ﺷﻴﻄﺎﻥ ﻭﺗﺪﺑﺮ ﻓﻲ ﺻﻮﺭﺓ ﺷﻴﻄﺎﻥ ﻓﺈﺫﺍ ﺭﺃﻯ ﺃﺣﺪﻛﻢ ﺍﻣﺮﺃﺓ ﻓﺄﻋﺠﺒﺘﻪ ﻓﻠﻴﺄﺕ ﺃﻫﻠﻪ ﻓﺈﻥ ﺫﺍﻙ ﻳﺮﺩ ﻣﻤﺎ ﻓﻲ ﻧﻔﺴﻪ
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) ஒரு பெண்ணைப் பார்த்தார்கள் அப்பெண்(ணின் அழகு) அவர்களைக் கவர்ந்தது
(இது போன்ற சமயத்தில் உம்மத்தினர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைக் காட்டுவதற்காக) உடனே அவர்கள் தம் துணைவியார் ஸைனப் (ரலி) அவர்களிடம் சென்றார்கள்
அப்போது அவர் தமக்குரிய ஒரு தோலைப் பதனிட்டுக் கொண்டிருந்தார்
அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தேவையை நிறைவேற்றிவிட்டுப் பிறகு தம் தோழர்களிடம் புறப்பட்டு வந்து
"ஒரு பெண் (நடந்து வந்தால்) ஷைத்தான் (தூண்டிவிடும்) கோலத்திலேயே முன்னோக்கி வருகிறாள்
ஷைத்தான் (தூண்டிவிடும்) கோலத்திலேயே திரும்பிச் செல்கிறாள்
எனவே, உங்களில் ஒருவரது பார்வை ஒரு பெண்ணின் மீது விழுந்து அவள் (அழகு) அவரைக் கவர்ந்து விட்டால் உடனே அவர் தம் துணைவியிடம் செல்லட்டும்
ஏனெனில், அது, அவரது மனத்தில் தோன்றும் (கெட்ட) எண்ணத்தை அகற்றிவிடும்'' என்று கூறினார்கள்
நூல்கள்: அஹ்மத் (14577) முஸ்லிம்
( 2718, 2719)
ஒரு பெண்ணிண் முகத்தின் அழகே நபியவர்களை கவருகிறது ஆனாலும் அந்த பெண்ணை தனது முகத்தை மூடி வருமாறு நபியவர்கள் கட்டளை போடவில்லை
★ ★ ★ ★ ★ ★
முகத்தை மறைத்தும் இருக்க
ஆதாரம்
===============================
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் சில பெண்கள் தங்கள் முகங்களை மறைத்துக் கொள்ளும் வழக்கமும் இருந்துள்ளது
ஆனால் அதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்யவில்லை
இஹ்ராம் அணிந்த பெண் முகத்திரையை அணியக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி (1838)
முகத்திரை அணியும் வழக்கம் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்ததால் இஹ்ராமின் போது மாத்திரம் அதை அணியக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்
எனவே இஹ்ராம் அணியாத மற்ற பெண்கள் முகத்திரை அணிவதற்குத் தடை இல்லை என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்
பெண்கள் முகத்தை மறைப்பது கட்டாயமில்லை என்பதும் இந்த ஹதீஸிலிருந்து விளங்குகிறது ஏனென்றால் பெண்களின் முகம் மறைக்கப்பட வேண்டிய பகுதியாக இருந்தால் ஹஜ்ஜின் போது அதை வெளிப்படுத்த வேண்டும் என்று நபியவர்கள் உத்தரவிட மாட்டார்கள்
ஹதீஸ் தற்போதைய உலக நடை முறை ஆய்வாளர்களின்
முடிவு
√√√√√√√√√√√√√√√√√√√√√√√√√√
பெண்கள் முகத்தை மறைப்பது மார்க்க அடிப்படையில் தவறில்லை என்றாலும் முகத்தை மறைப்பதால் தற்காலத்தில் ஏற்படும் தீமைகளையும் நமது கவனத்தில் கொள்ள வேண்டும்
ஆண்களாயினும், பெண்களாயினும் அவர்களில் இறைவனை அஞ்சி ஒழுக்கமாக வாழ்பவர்கள் மிகக் குறைவே!
பெரும்பாலோர் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள முக்கியக் காரணம் தமக்குத் தெரிந்த மனிதர்களிடம் தம் மதிப்புப் பாதிக்கப்படும் என்பது தான்
இந்த அச்சத்தினாலேயே ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்கள்
உள்ளூரில் ஒழுக்கமாக நடப்பவர்கள் வெளியூர்களில் ஒழுக்கம் தவறி விடுவதற்கு இது தான் காரணம்
ஒரு பெண் முகத்தையும் முழுமையாக மறைத்து விட்டால் அவள் யாரென்று அடையாளம் கண்டு கொள்வது கடினம்
தன்னை யாருமே கண்டு கொள்ள மாட்டார்கள் எனும் போது அவள் ஒழுக்கம் தவறுவதற்கான துணிவைப் பெற்று விடுகின்றாள்
எந்த ஆணுடன் அவள் தனித்துச் சென்றாலும் அவள் யாரென்று தெரியாததால் அவனுடைய மனைவியாக இருப்பாள் என்று உலகம் எண்ணிக் கொள்ளும்
மற்றவர்கள் பார்த்து ரசிப்பார்கள் என்பதற்காக முகத்தையும் மறைத்துக் கொள்ளக் கட்டளையிட்டால் தவறு செய்யத் தூண்டுவதற்கு வழி செய்து கொடுக்கப்பட்டதாகவே ஆகும்
முகத்தை மறைத்து பர்தா அணிந்த சிலர்கள் குற்றவாளிகளாகவும் பிடிக்கப் பட்டுள்ளனர்
அவர்கள் பெண்களை போல் தம்மை மறைத்து தவறில் ஈடுபட்ட ஆண்களும் அரவாணிகளாவர்
தவறு செய்ய நினைப்பவர்கள் இந்த முகத்திரையைக் கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டு துணிச்சலாகச் செயல்படுகிறார்கள்
எனவே தான் அல்லாஹ்வின் இஸ்லாமிய மார்க்கம் பெண்களை அவசியம் முகத்தை மறைக்குமாறு கட்டளையிடவில்லை
மார்க்கத்தில் முகத்தை மறைக்காமல் இருப்பதற்கு அனுமதி உள்ளது போல் முகத்தை மறைத்துக் கொள்ளவும் அனுமதி உள்ளது
அனுமதிக்கப்பட்ட காரியங்களின் மூலம் கேடுகள் ஏற்படுமானால் அந்தக் கேடுகளின் காரணமாக அதைத் தவிர்ப்பதும் மார்க்கத்தின் ஒரு அம்சமாகும்
அதிகக் கொழுப்புள்ள உணவுகள் அனுமதிக்கப்பட்டவை என்றாலும் உடலுக்கு அது நல்லதல்ல என்றால் அதை நாம் தவிர்ப்பதே நல்லதாகும்
பெண்கள் முகத்தை மறைப்பதால் ஏற்படும் கேடுகள் நமக்கு இன்று உலகில் பரவலாக தெரிகின்றது
முகத்தை மறைத்துக் கொள்வதைக் கேடயமாகப் பயன்படுத்தி
கூடாத செயலில் பெண்கள் ஈடுபடுதல்
கேடுகெட்ட பெண்கள் போலீஸாரிடம் இருந்து தப்பிக்க முகம் மறைப்பதைக் கேடயமாகப் பயன்படுத்திக் கொள்வது
ஆண்கள் கூட பெண்களைப் போல் முகத்தை மூடிக் கொண்டு தீய கரியங்களில் ஈடுபடுவது
இப்படி பலவாறான கேடுகள் ஏற்படும் போது எதில் கேடு இல்லையோ அதைத் தான் நாம் தேர்வு செய்ய வேண்டும்
முகம் மறைக்காமல் இருப்பதால் ஏற்படும் கேடுகளை விட மறைப்பதால் ஏற்படும் கேடுகள் மிக அதிகமாகும்
முகத்தை மறைத்து ஆக வேண்டும் என்று மார்க்கத்தில் கட்டளை இருந்தால் அப்போது விளைவுகளை நாம் கவனிக்கக் கூடாது
இரண்டுமே அனுமதிக்கப்பட்ட காரிய்ங்கள் தான்
எனவே இன்றைய சூழலில் எதில் கேடுகள் உள்ளதோ அதைத் தவிர்க்க வேண்டும்
எனவே முஸ்லிம் பெண்கள் தங்களுக்கும் சமுதாயத்திற்கும் பாதிப்புகளை ஏற்படுத்தாத விதத்தில் தங்களின் ஆடைகளை இஸ்லாமிய மரபில் அணிந்து மறுமை வெற்றி பெறுங்கள்
NB-- பெண்ணை மையப் படுத்தி இக்கேள்வி அமைந்ததால் இந்த விபரங்கள் தரப்பட்டுள்ளது
இஸ்லாத்தில் ஆண்களுக்கும்
ஆடை கட்டுப்பாடு உண்டு
நட்புடன் J .இம்தாதி --29-12-15
Comments
Post a Comment