கணவன் மனைவி

           இல்லற பிரச்சனைகளும்

          சமரச சிந்தைவாதிகளும்

          ★-----★-----★-----★------★
                         04-12-15
             J.யாஸீன் இம்தாதி
                         --------------
      Bismillahir Rahmanir Raheem
                            ---------

இன்றைய ஜமாத்களில் அதிகமாக காணப்படும் விவகாரங்களில் கணவன் மனைவி இருவருக்கும் இடையில் காணப்படும் விவகாரமே
ஆகும்

இதற்க்கு  பல காரணங்களை  வெளிரங்கத்தில் இரு சாராரும் ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்தி கொண்டாலும் இவர்களின் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் ஆணி வேராக இருப்பது அவர்கள் இருவரின் அந்தரங்க விவகாரங்களே ஆகும்

இவைகளை வெளிப்படையாக கூறி அதற்க்கு தகுந்த விளக்கம் கேட்பதற்க்கு இரு சாராரின் கூச்ச சுபாவமே அவர்களின் வாழ்க்கை பிளவுபடுவதற்க்கு அடிப்படை மூலமான காரணிகளாகும்

இதன் விளைவாகத்தான் மருமகள் தனது மாமி தன்னை கொடுமை படுத்துகிறாள் என்றும்

தனது கணவன் தன்னை திட்டுகின்றார் அடிக்கின்றார் என்றும் தனது கவலையை மறைமுகமாக  வெளிப்படுத்துகின்றனர்

அதே போல் தனது மனைவி தன்னை மதிப்பதில்லை எடுத்து எறிந்து பேசுகிறாள் யாரையும் மதிப்பதே இல்லை என்று கணவனும் தனது கவலையை மறைமுகமாக வெளிப்படுத்துகின்றார்

இந்த விவகாரத்தில் சமரசம் பேசி தீர்ப்பவர்களும் கூட அவர்களின்  பிரச்சணைகளுக்கு அடிப்படை காரணம் என்ன என்பதை அறிவுப்பூர்வமாக உளவியல் மற்றும் உடலியல் ரீதியாக அணுகாமல் சம்மதப்பட்ட இரு சாராரும் எது போன்ற காரணங்களை அவர்கள் வெளிப்படையாக கூறுகின்றார்களோ அந்த பிரச்சனைகளையே மையமாக வைத்து சமரசம் பேசுகின்றனர்

இதனால் தான் பஞ்சாயத்து செய்யப்பட்ட பல இல்லறகளும் மீண்டும் மீண்டும் அதே போல் தகராறுகளை செய்து இறுதியில் பிரிந்தோ அல்லது ஊருக்கு மட்டும் அவர்கள் கணவன் மனைவியாக வாழ்ந்து வருகின்றனர்

இந்த பிரச்சணைகளை மூலமாக வைதது தான் இன்று பல மருத்துவமனைகள் போலி மருத்துவர்கள் பாதிப்படைந்ததாக நினைக்கும் நபர்களை வைத்தே பிழைப்பை நடத்துகின்றனர்

ஆனால் இது போன்ற மருத்துவங்களால் சம்மந்தப்பட்ட இரு சாராருக்கும் பெரிய அளவில் பயன் கிடைக்கப்போவதில்லை
காரணம் இவ்வகையில் பாதிப்பை தழுவிய அநேகமானவர்கள் உண்மையான இல்லற நோயால் பாதிக்கப்படவில்லை

மாறாக அவர்களின் சூழலும் உடலியலை புரிந்து கொள்ளா தன்மையும் தான் அடிப்படை காரணங்களாகும்

உடலின் சில செயல்பாடுகள் தானாக இயங்கும் விதத்தில் இறைவனால் கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது
இன்னும் சில செயல்பாடுகள் நாமாகவே இயங்க வைக்கும் விதமாக இறைவனால் கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது

அந்த அடிப்படையில் உடலியலில் பெண்களுக்கு 16000 உணர்ச்சி நரம்புகளும் ஆண்களுக்கு 7000 உணர்ச்சி நரம்புகளும் அறிவியல் ரீதியாக உள்ளது

இவைகள் எந்தந்த பகுதிகளில் அமைந்துள்ளது என்று தெரியாத எவரும் மன வாழ்வு திருப்தியை இழப்பார்கள்

இதில் ஒருவர் புரிந்து மற்ற ஒருவர் புரியாமையில் இருந்தாலும் மனகசப்புகளை பிரிவுகளை நோக்கி செல்வார்கள்

இது போன்ற உணர்ச்சி நரம்பு மண்டங்களை உடலியலின் சில பகுதிகளில் மட்டும் தான் இறைவன் ஏற்படுத்தி உள்ளான்

இதை இரு சாராரும் புரிந்து இரு சாராரும் ஒருவருக்கொருவர் நடைமுறை படுத்தினால் மட்டும் தான் இல்லறம் இனிக்கும் இல்லாவிடில் இல்லறம் தான் உலகில் முதலில் புளிக்கும்

               ++++++++++++++

ﻋَﻦِ ﺍﺑْﻦِ ﻋَﺒَّﺎﺱٍ َؓ ﻗَﺎﻝَ : ﻗَﺎﻝَ ﺍﻟﻨَّﺒِﻲُّ ﷺ : ﺃَﻣَﺎ ﻟَﻮْ ﺃَﻥَّ ﺃَﺣَﺪَﻫُﻢْ ﻳَﻘُﻮﻝُ ﺣِﻴﻦَ ﻳَﺎْﺗِﻲ ﺃَﻫْﻠَﻪُ : ﺑِﺴْﻢِ ﺍﻟﻠﻪِ ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﺟَﻨِّﺒْﻨِﻲ ﺍﻟﺸَّﻴْﻄَﺎﻥَ ﻭَﺟَﻨِّﺐِ ﺍﻟﺸَّﻴْﻄَﺎﻥَ ﻣَﺎﺭَﺯَﻗْﺘَﻨَﺎ ﺛُﻢَّ ﻗُﺪِّﺭَ ﺑَﻴْﻨَﻬُﻤَﺎ ﻓِﻲ ﺫﻟِﻚَ ﺃَﻭْ ﻗُﻀِﻲَ ﻭَﻟَﺪٌ ﻟَﻢْ ﻳَﻀُﺮَّﻩُ ﺷَﻴْﻄَﺎﻥٌ ﺃَﺑَﺪًﺍ

எவரேனும் தம் மனைவியிடம் வந்தால் ( ﺑِﺴْﻢِ ﺍﻟﻠﻪِ ﺍَﻟﻠَّﻬُﻢَّ ﺟَﻨِّﺒْﻨِﻲ ﺍﻟﺸَّﻴْﻄَﺎﻥَ ﻭَﺟَﻨِّﺐِ ﺍﻟﺸَّﻴْﻄَﺎﻥَ ﻣَﺎﺭَﺯَﻗْﺘَﻨَﺎ ‏) அல்லாஹுதஆலா வின் பெயரால் இந்தக் காரியத்தை நான் செய்கிறேன்

யால்லாஹ், என்னை ஷைத்தானை விட்டும் காப்பாயாக!

எங்களுக்கு நீ கொடுக்கும் சந்ததிகளையும் ஷைத்தானை விட்டும் காப்பாயாக!

என்ற துஆவை ஓதிக்கொள்ளவும்

பிறகு அந்த நேரம் தாம்பத்திய உறவால் அவருக்குக் குழந்தை பிறந்துவிட்டால், அக்குழந்தைக்கு ஷைத்தானால் எப்போதும் தீங்கிழைக்க முடியாது
அக்குழந்தையை வழிகெடுப்பதில் ஷைத்தான் வெற்றி பெறமாட்டான்'' என்று

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

                     நூல் புகாரி
                   -------------------

            நட்புடன்  .J இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்