தூய்மையே தாய்மை போன்றது

  கழிவுகளின் பாசறைகளாக

                 மனிதகுலம்

|==========================|

15-11-2017 கட்டுரை எண் 1162
             -----------------------------
           J. யாஸீன் இம்தாதி
                  !+++++++++!
     Bismillahir Rahmanir Raheem
          !! -------------------------------!!

21 ம் நூற்றாண்டில் வாழும் மனிதனின் வெளி தோற்றத்தை அழகாக்கவும் மெருகூட்டவும் பல விதமான மேக்கப் சாதனங்கள் நறுமணங்கள் ஆடை வகைகள் மலை போல் குவிந்துள்ளது

அதே நேரம் மனிதனின் உடலியல் தூய்மை என்பது மிகவும் குறைந்து விட்டது

மலம் கழித்த பின் நீரை கொண்டு தூய்மை செய்ய வேண்டும் என்று புரிந்து வைத்துள்ள பலர்கள் சிறுநீர் கழித்த பின் அந்த மர்ம உறுப்பையும் தூய்மை படுத்த வேண்டும் என்பதையும்  கழிவறைகளையும் தூய்மை படுத்த வேண்டும் என்பதையும் சரியாக புரிந்து கொள்ளவில்லை

ஏன் அந்த எண்ணம் கூட இன்று பலர்களிடம் காணப்படவில்லை

பல நோய்கள் பரவுவதற்க்கும் பலர்களின் இல்லறம் வெறுத்து போவதற்க்கும் இது தான் மறைமுகமான காரணம் என்பதை கூட அறிவு ஜீவிகள் புரிய மறுக்கின்றனர்

அதிலும் குறிப்பாக சந்தைகடைகள்  பேரூந்து நிலையங்கள் அது போல் இரயில் நிலையங்கள் போன்ற பொதுவான கழிவறைகளுக்குள் செல்லும் மனிதன் மூக்கில் பிளாஸ்த்திரி போட்டு அடைத்து விட்டு தான் நுழைய முடியும்

என்ற அளவுக்கு நாற்றம் வீசுவதோடு பொதுவான குளியல் அறை மற்றும் கழிவறைகளின் சுவற்றிலும் கதவுகளிலும் அருவெருப்பான எழுத்துக்களும் புகைப்படங்களும் தவறான தொடர்பு எண்களும் வேசிகளாலும் இனகவர்ச்சி மனநோயாளிகளாலும் பிச்சை எடுப்பதையே தனது பிழைப்பாக வைத்துள்ள அரவாணிகளாலும் அவர்களுக்கு பின் அலையும் கழிசடைகளாலும் வெளிரங்கமாகவே பதிக்கப்பட்டுள்ளது


மலம் ஜலம் கழிக்கும் ஐந்தறிவு பூனைகள் கூட அதன் கழிவுகள்  பிறர்களின் கால்களிலும் பார்வைகளிலும் தென்பட கூடாது என்று வெட்கப்பட்டு குழி தோண்டி கழித்து விட்டு பிறகு அதை மண் கொண்டு மூடி விட்டு துர்வாடை வருகிறதா என்று தனது மூக்கால் நுகர்ந்து பார்த்து செல்கிறது

அந்த பூனைகளை செல்லப் பிராணிகளாக வளர்க்கும் மனிதனுக்கோ இந்த சாதாரண பகுத்தறிவும் கூட இல்லாது அசுத்தத்தின் பிறப்பிடங்களாக சுற்றுவது கேவளமாக உள்ளது

சுருங்க சொன்னால் தூய்மையின் தாயகமாக மாற வேண்டிய மனித சமுதாயம் கழிவுகளின் பாசறைகளாக வலம் வருகின்றனர்

இந்த விசயத்தில் கூட கடுமையான கண்டனங்களை எச்சரிக்கை செய்யும் ஒரே மார்க்கம் இஸ்லாம் ஆகும்

தூய்மையை கூட தனது தாய்மையாக கருதும் மனிதனே இஸ்லாமியன் என்ற அளவுக்கு இஸ்லாம்  தூய்மையை போதனை செய்கிறது

          +++++++++++++++++++

(وَاللهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ۞)

           அல்குர்ஆன் 9-108

அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் சிறுநீர் (துளிகள் தெறிக்கும்) விஷயத்தில் மிகவும் கண்டிப்பானவராய் இருந்தார்கள்

(மேனியில் சிறுநீர் தெறித்துவிடக் கூடாது என்பதற்காக) அவர்கள் கண்ணாடிக் குடுவையில் சிறுநீர் கழிப்பார்கள்

மேலும், இஸ்ரவேலர்களில் ஒருவரது சருமத்தில் சிறுநீர் பட்டுவிட்டால் அந்த இடத்தைக் கத்தரிக்கோலால் கத்தரித்து விடக் கூடியவராக அவர் இருந்தார் என்று கூறுவார்கள்

              நூல் முஸ்லிம் 454

               +++++++++++++++++

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 'சாபத்திற்குரிய இரண்டை  தவிர்த்துக் கொள்ளுங்கள்' என்று கூறினார்கள்

அப்போது தோழர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் அவர்களே

சாபத்திற்குரிய அவ்விரண்டும் யாவை? என்து வினவியதும்

மக்கள் (நடக்கும்) பாதையில் அல்லது அவர்கள் நிழல் பெறும் இடங்களில் ஒருவர் மலம், ஜலம் கழிப்பதாகும் என்று அவர்கள் பதிலளித்தார்கள்

         
         நூல் .முஸ்லிம் அஹ்மத்

       +++++++++++++++++++++

              நட்புடன் J இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்