பச்சோந்தி சொந்தங்கள்

             நீங்கள் இரட்டை வேடம்
             விரும்புவோரா கவலை   
                     கொள்ளாதீர்
நீங்களே நரகத்தின் கொல்லிகள்

||=============================||

    26-02-2017 கட்டுரை எண் 1072
                 -----------------------------
                J. யாஸீன் இம்தாதி
                        !+++++++++!
         Bismillahir Rahmanir Raheem
              !! -------------------------------!!

மனிதர்கள் பல வகையினர்களாக உள்ளனர் அவர்களில் கேவளமான குணாதிசயம் உடையோர்களே இரு முகம் உடையோர்

அனைவரிடமும் தன்னை நல்லவர் போல் காட்டி கொள்வதற்காக இடத்திற்க்கும் நபர்களுக்கும் ஏற்றார் போல் தங்களை பச்சோந்திகளாக நிறம் மாற்றி காட்டி கொள்பவர்களே இவர்கள்

ஒரு விதத்தில் இவர்கள் தங்களை அறிவாளிகளாக கற்பனை செய்து கொண்டாலும் இவர்களுக்கு சமுதாயத்தில் முனாஃபிக் பச்சோந்தி இரட்டை வேடதாரிகள் போன்ற அவப்பெயர்களோடு தான் உலவுகின்றனர்

காரணம் எதார்தத்திற்க்கு மாற்றமான எந்த ஒரு குணாதிசயமும் மக்களிடம் நீண்ட காலம் நிலைக்காது

சத்தியத்திற்க்கு தலை சாய்க்க வேண்டும் என்ற உணர்வு கடுகளவும் இல்லாதவர்களே இது போல் தங்களை நல்லவர்களாக காட்டி கொள்வதில் முன்னனியில் இருப்பார்கள்

இவர்களால் சமூகத்தில் தீமைகளை தவிர நன்மைகள் கடுகளவும் ஏற்பட்டது இல்லை ஏற்படப்போவதும் இல்லை

குறிப்பாக தங்களை இஸ்லாமிய உணர்வு உள்ளோர்களாக காட்டி கொள்ளும் பலர்கள் முனாஃபிக் எனும் போலி முகமூடியை அணிந்து திரிவது தான் அவமானமாக உள்ளது

அதனால் தான் மறுமை நாளில் காஃபிர்களை விட கீழ் மட்டமான நரகை இவர்கள் அடைய இருப்பதாக இஸ்லாம் சொல்கிறது

عَنْ عَمَّارٍؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ كَانَ لَهُ وَجْهَانِ فِي الدُّنْيَا، كَانَ لَهُ يَوْمَ الْقِيَامَةِ لِسَانَانِ مِنْ نَارٍ

உலகில் யார் இரு முகம் உடையவனாக இருப்பானோ (நயவஞ்சகனைப் போன்று பலதரப்பட்ட மனிதர்களிடம் பலவிதமாகப் பேசுகின்றவன்) கியாமத் நாளன்று அவனது வாயில் தீயாலான இரண்டு நாவுகள் இருக்கும் என்று

ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அம்மார் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

நூல் - அபூதாவூத்

وَاِذَا قِيْلَ لَهُمْ تَعَالَوْا اِلٰى مَا
ۤ اَنْزَلَ اللّٰهُ وَاِلَى الرَّسُوْلِ رَاَيْتَ الْمُنٰفِقِيْنَ يَصُدُّوْنَ عَنْكَ صُدُوْدًا‌

மேலும் அவர்களிடம் அல்லாஹ் இறக்கிய (வேதத்)தின் பக்கமும், (அவனுடைய) தூதரின் பக்கமும் (தீர்ப்புப் பெற) வாருங்கள்” என்று கூறப்பட்டால், அந்த முனாஃபிக்குகள் (நயவஞ்சகர்கள்) உம்மிடமிருந்து முற்றிலும் நீங்கிக் கொள்வதையே நீர் பார்ப்பீர்

(அல்குர்ஆன் : 4:61)

مُّذَبْذَبِيْنَ بَيْنَ ‌ ذٰ لِكَ لَاۤ اِلٰى هٰٓؤُلَاۤءِ وَلَاۤ اِلٰى هٰٓؤُلَاۤءِ‌ وَمَنْ يُّضْلِلِ اللّٰهُ فَلَنْ تَجِدَ لَهٗ سَبِيْلًا‏ 

இந்த முனாஃபிக்குகள் முஃமின்களின் பக்கமுமில்லை, காஃபிர்களின் பக்கமுமில்லை இரு பிரிவினர்களுக்கிடையே தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள் அல்லாஹ் எவரை வழி தவறச் செய்துவிட்டானோ, அவருக்கு (நபியே!) யாதொரு வழியையும் நீர் காணமாட்டீர்

(அல்குர்ஆன் : 4:143)

يٰۤاَيُّهَا النَّبِىُّ جَاهِدِ الْـكُفَّارَ وَالْمُنٰفِقِيْنَ وَاغْلُظْ عَلَيْهِمْ‌ وَ مَاْوٰٮهُمْ جَهَـنَّمُ‌ وَبِئْسَ الْمَصِيْرُ‏

 நபியே! காஃபிர்களுடனும், முனாஃபிக்குகளுடனும் நீர் அறப்போர் செய்வீராக

மேலும் அவர்களை கண்டிப்பாக நடத்துவீராக

(மறுமையில்) அவர்களுடைய புகலிடம் நரகமே  தங்குமிடங்களிலெல்லாம் அது மிகவும் கெட்டது

(அல்குர்ஆன் : 9:73)

وَلَا تُطِعِ الْكٰفِرِيْنَ وَالْمُنٰفِقِيْنَ وَدَعْ اَذٰٮهُمْ وَتَوَكَّلْ عَلَى اللّٰهِ وَكَفٰى بِاللّٰهِ وَكِيْلًا‏ 

அன்றியும் காஃபிர்களுக்கும், முனாஃபிக்குகளுக்கும் நீர் வழிப்படாதீர் அவர்கள் (தரும்) துன்பத்தை(ப் புறக்கணித்து) விடுவீராக; அல்லாஹ்வின் மீதே முற்றிலும் உறுதிகொண்டு (அவனையே சார்ந்து) இருப்பீராக! அல்லாஹ்வே போதுமான பாதுகாவலனாக இருக்கின்றான்

(அல்குர்ஆன் : 33:48)

            நட்புடன் J. இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்