பதவியே அரக்க போதை


         !!   போதை பல வகை  !!

    !!   பதவியே அரக்க  போதை  !!

><><><><><><><><><><><><><><><><><

                     14-02-2017
             கட்டுரை  எண்  1070
              -----------------------------
           J. யாஸீன் இம்தாதி
                   !+++++++++!

     Bismillahir Rahmanir Raheem
           !! -------------------------------!!

உடல் அளவில் எற்படுத்தும் தீங்குகள் சம்மந்தப்பட்ட போதை பொருட்கள்  ஒரு  வகை

மனதளவில் ஏற்படும் தடுமாற்றங்களை தூண்டும் ஆசாபாசங்களும் போதையில் ஒரு வகை தான்

இதில் உச்சகட்டமான போதை பதவி அதிகாரம் மற்றும் புகழ் எனும் போதையாகும்

இந்த வகையான போதை மனிதனுக்கு ஏற்பட்டால் நிச்சயம் அது மனித  சமூகத்தில் மிக விரைவில்  நல்லிணக்கத்தையும் மனித நேயத்தையும் இழக்க வைத்து விடும்

பணத்திற்காக கொலை செய்யாதவன் கூட புகழ் மற்றும் பதவிக்காக மிகவும் தரம் தாழ்ந்து நடப்பதோடு கொலைகளை கூட சாதாரணமாக செய்யும் காட்சியை அன்றாடம் கேள்வி படுகின்றோம்

இந்த போதை தலைக்கு ஏறிவிட்டால் நீதியை பேசியவரும் சத்தியத்தை முழங்குபவரும் கூட தனது செயலை அங்கீகாரத்தை  முட்டாள்தனமாகவே மக்களிடம்  வெளிப்படுத்துவார்

இதனால் தான் பதவியை தானாக முன்வந்து  ஆசைபடாதீர்கள் என்று இஸ்லாம் கடுமையாக எச்சரிக்கை செய்து  போதிக்கின்றது

தற்போது நம் சமூகத்தில் நிலவி வரும்  பிளவுகள்  குரோதங்கள் யாவுமே வெளித்தோற்றத்தில் வேறு பல காரணங்களை கூறி முலாம் பூசப்பட்டாலும் 

பதவி எனும் மோகமே இதற்க்கு  மூல காரணமாக பின்னனியில்  அமைந்துள்ளது என்பதை சற்று உள்ளுணர்ந்து ஆய்வு செய்தால் புரிந்து கொள்ள முடியும்

தானாக உங்களை தேடி வரும் பதவிகளை இயலுமானால்  ஏற்று கொள்ளுங்கள் அதன் படி அதன் கடமைகளை  நிறைவேற்றுங்கள்

காரணம் ஒரு குடும்பத்தின் செலவுகள் மற்றும் விவகாரங்களை எதிர் கொள்வதே பெரிய பாரமாக இருக்கும் சூழலில் ஒரு நாட்டை அல்லது மாநிலத்தை அல்லது ஒரு ஊரை அல்லது ஒரு ஜமாத்தை  நடத்துவது என்பது மிகவும் சிரமமான காரியமாகும்

இவைகளை எல்லாம் சிந்திக்காது அர்ப்பமான பதவியை பெற முயற்சித்தாலும் அல்லது அதை அடைய  சூழ்ச்சிகளை செய்தாலும் அல்லது பிறர் பதவிகளை தட்டி பறிக்க ஆசைபட்டாலும் அல்லது பிறர் பதவிகளை  தட்டி விட ஆசைபட்டாலும் அதுவே உங்கள் மறுமை வாழ்க்கையை சீரழித்து நிரந்தரமான  நரகத்திற்க்கு கொண்டு போய் சேர்க்கும் என்பதை மறவாதீர்

عَنْ عُمَرَؓ أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: إِنَّ اللهَ يَرْفَعُ بِهذَا الْكِتَابِ أَقْوَاماً وَيَضَعُ بِهِ آخَرِينَ

அல்லாஹ் இந்தக் குர்ஆனின் காரணமாக பலரின் பதவிகளை உயர்த்துகிறான், பலரின் பதவிகளைத் தாழ்த்திவிடுகிறான் அதன் படி செயல்படுகிறவர்களுக்கு உலகிலும் மறுமையிலும் அல்லாஹ் கண்ணியத்தைத் தருகிறான், அதன்படி செயல்படாதவர்களை அல்லாஹ் இழிவுபடுத்திவிடுகிறான்'' என நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

               நூல்  முஸ்லிம்

عَنْ عَبْدِ الرَّحْمنِ بْنِ سَمُرَةَؓ قَالَ: قَالَ (لِيَ۞) النَّبِيُّ ﷺ: يَا عَبْدَ الرَّحْمنِ بْنَ سَمُرَةَ: لاَ تَسْأَلِ اْلإِمَارَةَ فَإِنَّكَ إِنْ أُوتِيتَهَا عَنْ مَسْئَلَةٍ وُكِلْتَ إِلَيْهَا، وَإِنْ أُوتِيتَهَا مِنْ غَيْرِ مَسْئَلَةٍ أُعِنْتَ عَلَيْهَا


அதிகாரத்தைக் கேட்டுப் பெறாதீர், நீர் கேட்டு உமக்கு அந்த அதிகாரம் கிடைக்குமானால் உம்மை பதவியிடமே ஒப்படைக்கப்பட்டுவிடும்

(பிறகு அல்லாஹுதஆலாவின் புறத்திலிருந்து உமக்கு உதவியோ வழிகாட்டலோ கிடைக்காது)

நீர் கேட்காமலேயே உம்மை அமீராக ஆக்கப்பட்டால் அல்லாஹுதஆலாவின் புறத்திலிருந்து அப்பதவியில் உமக்கு உதவி செய்யப்படும்

என்று நபி (ஸல்) அவர்கள் தன்னிடம் கூறியதாக ஹஜ்ரத் அப்துர்ரஹ்மான் இப்னு ஸமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

                 நூல்  புகாரி

وَهُوَ الَّذِىْ جَعَلَـكُمْ خَلٰٓٮِٕفَ الْاَرْضِ وَرَفَعَ بَعْضَكُمْ فَوْقَ بَعْضٍ دَرَجٰتٍ لِّيَبْلُوَكُمْ فِىْ مَاۤ اٰتٰٮكُمْ‌ اِنَّ رَبَّكَ سَرِيْعُ الْعِقَابِ   وَاِنَّهٗ لَـغَفُوْرٌ رَّحِيْمٌ

அவன் தான் உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கினான் அவன் உங்களுக்குக் கொடுத்துள்ளவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக, உங்களில் சிலரைச் சிலரைவிடப் பதவிகளில் உயர்த்தினான் - நிச்சயமாக உம் இறைவன் தண்டிப்பதில் விரைவானவன்

மேலும் அவன் நிச்சயமாக மன்னிப்பவன்  மிக்க கருணையுடயவன்

           (அல்குர்ஆன் : 6:165)

تِلْكَ الدَّارُ الْاٰخِرَةُ نَجْعَلُهَا لِلَّذِيْنَ لَا يُرِيْدُوْنَ عُلُوًّا فِى الْاَرْضِ وَلَا فَسَادًا‌  وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِيْنَ‏

அந்த மறுமையின் வீட்டை, இப்பூமியில் (தங்களைப்) பெருமைப்படுத்திக் கொள்ளவும், குழப்பத்தை உண்டாக்கவும் விரும்பாதிருப்பவர்களுக்கே நாம் சொந்தமாக்கி வைப்போம்; ஏனெனில், பயபக்தியுடையவர்களுக்கே (மேலான) முடிவு உண்டு

          (அல்குர்ஆன் : 28:83)

            நட்புடன்  J. இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்