மழை குடியிருப்புகளை கொள்ளையடித்த அரசியல்வாதிகள்

      மழை நீர் தேக்கங்களை

நாசமாக்கிய அரசியல்வாதிகள்

       நீலிக்கண்ணீர் வடிப்பது

           அயோக்கியதனம்

        ••••••••••••••••••••••••••••••
 ஆக்கம். J . யாஸீன் இம்தாதி
          *******************
            கட்டுரை எண் 1160      
         
                        ¡¡ بسم الله الرحمن الرحيم ¡¡                    →←→←→←→←→←→←→←
     05-11-17- ஞாயி கிழமை
                                
        ***********************

மழை வேண்டி வறட்சி காலத்தில் பல மதத்தவர்களும் தங்களது வழிபாட்டின் மூலம் 

   ^^  கருணை பகவானே ^^

என்று அழைத்து கடவுளிடம் தண்ணீர்  பிச்சை கேட்டு மன்றாடும்  போது அதற்காக பரிதாபப்பட்டு மழை எனும் அருளை  இறைவன் பொழிய  வைத்தால்

நன்றி கெட்ட மனித சமூகம் இறைவனை புகழ்வதை தவிர்த்து விட்டு  மழை எனும் இறையருளை வர்ணிக்கும் கீழ்நிலை  வார்த்தைகளே  இவைகள்

1-பேய் மழை  பொழிந்து

2-அடை மழை வெளுத்து வாங்கியது

3-மழையின் கோர முகம் தலை
விரித்தாடியது

4-மழையால் மக்கள் நிம்மதி போனது

5-மழையால் விவசாய பூமி நாசமானது

காடுகளிலும் உயர்வான மழை மேடுகளிலும் சுற்றி திரியும் எந்த உயிரினங்களும் மழை பொழியும் பொழுது நன்றி கெட்ட மனிதனை போல்  புலம்பி வருந்துவது இல்லை

இருப்பிடத்தில் வாழ இயலாமல் மனிதன் வாழும் பகுதிகளில் நுழைந்து பாதுகாப்பை தேடுவதும் இல்லை

காரணம் மழை நீர் என்பது மகத்தான இறைவனின் அருள் என்று மிருகங்கள் பறவைகளும் கூட அதன் ஐந்தறிவை கொண்டே  உணர்ந்து உள்ளது

ஆனால் விஞ்ஞானம் வளர்ந்து விட்ட பகுதிகளில் வாழும் மனித சமூகம்  மாத்திரம் தான் மழையை கண்டாலே இல்லாத பேய் பிசாசுகளை நினைத்து பயப்படுவது போல்  அஞ்சுகின்றனர்

                 காரணம் என்ன ?

மழை நீர்  செல்லும் பாதைகளையும்  மழை நீர் ஓடும் ஆறுகள்  தங்கும் குளங்கள் ஏரிகள்  போன்ற  மழை நீர் இருப்பிடங்களை

மனிதன் சொகுசாக  வாழ்வதற்க்கும் இன்னும் பிற தேவைகளுக்கும் பூமியில் இருந்து  அபகரித்து அதன் இயற்கை தன்மையை மாற்றி அமைத்து  கொண்டது தான் மழை சேதங்கள் ஏற்பட அடிப்படை  காரணம்

மழைநீரை பூமியில் இறக்குவது தான் இறைவனின் பொறுப்பே தவிர பொழியும் நீரை சேமிப்பதற்க்கு அதற்க்கு பாத்திகளை  கட்டி பாதுகாப்பதற்க்கு  அனைகளை கட்டி சேமிப்பதற்க்கு மற்றும்  ஏரிகள் கிணறுகள்  குளங்களை தூர் வாரி சுத்தமாக்கி தருவது இறைவனின் நடை முறை அல்ல

அதற்க்கு தான் இறைவன் உயிரினங்களுக்கு அதற்க்கு எற்ற அறிவை வழங்கி உள்ளான்

மனிதனுக்கு பயன்படும் அவசியமான இயற்கை  தேவைகளை அபகரித்து அதில் இருப்பிடங்களை அமைக்க சூழ்ச்சி செய்யும் மனிதனுக்கு அவ்வாறு செய்தால் அதனால் மனிதர்கள் தான் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்று மட்டும் தெரியாது இருப்பது

இறைவனின் குற்றமா ? அல்லது பகுத்தறிவை பயன்படுத்தாத மனிதன் குற்றமா ? யார் குற்றம்?

நம் நாட்டை ஆளும் அரசியல்வாதிகளுக்கு நாட்டின் வளங்களை பாதுகாக்க வேண்டும் என்ற சாதாரண பகுத்தறிவு கூடவா இல்லை  ?

கேரள அரசு தண்ணீர் தர மறுக்கிறது ஆந்திர அரசு  தண்ணீர் தர மறுக்கிறது என்று வறட்சி நேரத்தில் நாட்டு மக்களை ஏமாற்ற நாடகம் ஆடும் இவர்கள்

பருவ காலத்தில் பெய்யும் மழையை எந்த நீர் நிலை  வங்கிகளில் பாதுகாத்து வைக்க முயற்சி செய்தார்கள்  ?

கோடிகளோடும் மாடி வீடுகளோடும் சென்னையில்  வாழும் உயர்நிலை மக்கள் யாரும் மழையால் பாதிப்புக்கு உள்ளாகவில்லை

மாறாக அந்த மாடி வீடுகளை கட்ட மழை நீர் தங்கும் பூமியின் தேக்க வீடுகளை மனைகளாகவும் தொழில் சாலைகளாகவும்  ஆக்க லஞ்சம் வாங்கியதும் அபகரித்து கொண்டதும்  தான் முதன்மை குற்றம்

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டீவி  தருவோம் லேப்டாப் தருவோம் அவருக்கு சிலை கட்டுவோம் இவருக்கு மணிமண்டபம் கட்டுவோம் என்றெல்லாம் மக்களின் வரிப்பணத்தை நாசமாக்கி அதில் இருந்தும் வரிப்பணங்களை கொள்ளை அடிக்கும்  கூட்டங்களுக்கு ஓட்டு போடாமல்

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இரு வருடத்தில்  ஆறுகளை பெரிது படுத்துவோம்  ஏரிகள்  கிணறுகளை தூர் வாருவோம் மழைநீர் சேகரிக்கும் அனைகளை மிக விரைவில்  பெரிதுபடுத்துவோம் அல்லது புதிதாக கட்டி எழுப்புவோம் என்று வாக்கு தந்து வாக்கு கேட்டு வரும் கட்சிகளுக்கே ஓட்டு போடுங்கள்  அல்லது அது போன்ற அறிவிலிகளின் அரசியல் சகாப்தத்திற்கே பூட்டு போடுங்கள்  

வளங்களை காப்பதும் அதை அழிப்பதும் அதிகாரம் படைத்த அரசியல்வாதிகளின் அதிகாரத்தில் தான் உள்ளது

ஆனால் அந்த அதிகாரத்தை வழங்கும் முழு ஆற்றலும் நாட்டில் வாழும் நம் போன்ற பாமர  குடிமக்கள் வசம் தான் உள்ளது 

    புத்தியை பயன்படுத்துவீர்
  அதன் மூலம்  நீர் நிலைகளை
               சரிபடுத்துவீர்

மழை நீரால் பாதிப்பு ஏற்படும் போது ஏதோ மக்களின் மீது அக்கரை கொண்டவர்களாக மக்களின் காவலர்களாக நாட்டு மக்களின்  சேவகர்களாக அழுது நடிக்கும் ஈனத்தனமான  அரசியல்வாதிகள் தான் நம் நாட்டின் சாபக்கேடுகள்

அரசியல்வாதிகள் சந்தர்ப்ப சூழலுக்கு ஏற்று நீலிக் கண்ணீர் வடிப்பது

               அயோக்கியதனம்

وَمَاۤ اَصَابَكُمْ مِّنْ مُّصِيْبَةٍ فَبِمَا كَسَبَتْ اَيْدِيْكُمْ وَيَعْفُوْا عَنْ كَثِيْرٍ‏ 

அன்றியும் தீங்கு வந்து உங்களை அடைவதெல்லாம் அது உங்கள் கரங்கள் சம்பாதித்த (காரணத்)தால் தான்

எனினும் பெரும்பாலானவற்றை அவன் மன்னித்தருள்கின்றான்

        (அல்குர்ஆன் : 42:30)

وَاَنْزَلْنَا مِنَ السَّمَآءِ مَآءً بِقَدَرٍ فَاَسْكَنّٰهُ فِى الْاَرْضِ‌ وَاِنَّا عَلٰى ذَهَابٍ بِهٖ لَقٰدِرُوْنَ‌

‏ 
மேலும், வானத்திலிருந்து நாம் திட்டமான அளவில் (மழை) நீரை இறக்கி அப்பால் அதனைப் பூமியில் தங்க வைக்கிறோம்

நிச்சயமாக அதனைப் போக்கிவிடவும் நாம் சக்தியுடையோம்

       (அல்குர்ஆன் : 23:18)

      எதிர்பார்ப்புடன் J. இம்தாதி

Comments

Popular posts from this blog

மனித உறுப்பு

ஆலிம்களின் சமூக நிலை

பள்ளிவாசல் கண்ணியம் காப்போம்